Saturday, October 31, 2009

காட்டுமிராண்டிகள் ...

நம்மில் இன்றும் சிலர் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்.
உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுமே..! கையில் கிடைப்பதை எடுத்து என்னை சாத்த வேண்டும் என்கிற உணர்வு மேலிட என் முகவரி தேடத்தொடங்கி இருப்பீர்களே !

பொறுமை..பொறுமை!
இங்கிலீஷ் நாளேட்டில் ஒரு செய்தி.
வட இந்தியாவில் ராஜ்கோட்டில் ஒரு இளம்பெண் போலீசில் புகார் செய்திருக்கிறாள் அவளை மாமனார் கற்பழித்து விட்டாராம். இதற்கு உதவியாக இருந்து சகலமும் கவனித்து கொண்டவன் ''புரட்சிகரமான '' மானஸ்தன் அவளுடைய புருசன்தான்.

எதற்காக இந்த கற்பழிப்பு?

கணவன் மூலமாக அவள் கரு தரிக்க முடியாது. அவன் ஆண்மையற்றவன் என்பதால் தனது அப்பனை அனுப்பி தன்னை அப்பனாக மாற்றி கொள்ள அவன் போட்ட திட்டமே கற்பழிப்பு என்கிறாள் அந்த பெண் .

இப்போது சொல்லுங்கள் நம்மில் சிலர் காட்டிமிரண்டிகளா இருக்கிறார்களா இல்லையா?

இந்த பாலுணர்வு வரையறை மீறல் நம்முடைய நாட்டுப்புற பாடல்களிலும் காணப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

''மனித சமூகம் எவ்வித வரையறையுமின்றி -தாய் ,சகோதரி ,என்ற வேறுபாடுகள் இல்லாமல் தந்தை ,சகோதரன் என்ற வேறுபாடுகள் இல்லாமல் - புணர தகுந்த ஆண்-பெண் என்ற நிலையில் மட்டும் பாலுணர்வு இருந்த காலமும் உண்டு'' என்கிறார் ஆய்வாளர் டாக்டர் நா. இளங்கோ .

நாட்டுப்புற கதையொன்றில் துலசிலம்மா என்கிற தனது மனைவியை புணர துடிக்கிற தன் அப்பனை பார்த்து 'ஏ ,தாயை புணர்ந்தவனே'' என்று மகன்
கடுமையாக திட்டுகிறானாம்,மகன்.

இன்னொரு நாட்டுப்புற பாடலில் மாமி- மருமகன் தகாத உறவு பற்றி
ஒரு பாடல் உண்டு.
''வண்டி ஏறினால்
குலுங்கி கொட்டும்
நான் வரலே மாமி அத்தே '' என்று மருமகன் மாட்டு வண்டியில் ஏற மறுக்கிறான்.
அதற்கு மாமியார் ,
''குலுங்கி கொட்டினால்
அணைத்து பிடிக்கிறேன்
வாடா மருமகனே '' என்று பதில் பாட்டு பாடுகிறாள் .

இன்னொருபாடலும் உண்டு.

''சின்னப்பொண்ணு வேணுமா ,
பெரிய பொண்ணு வேணுமா,
வாடா மருமகனே?'' என்று அத்தை கேட்க மருமகனோ

''சின்னப்பொண்ணும் வேணாம் அத்தே ,
பெரிய பொண்ணும் வேணாம் ,
அத்தே ,
நீ இருந்தா போதும் அத்தே'' என்று பாடுகிறானாம்.

எப்பூடி ?

2 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டி.கே.எஸ்.நடராஜன் என்னும் நடிகர் தான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடலைப் பாடுகிறார். கூட்டம் கரவொலி எழுப்பி ரசிக்கிறது. என்ன செய்வது..? அர்த்தம் தவறு என்று தெரிந்தும் ரசிக்கும் அளவுக்கு மக்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திவிட்டார்கள் என்பதுதான் உண்மை..!

bong apisar said...

Sindhikka vaikkirirgal....

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...