Monday, November 16, 2009

சரணம் ஐயப்பா!

இனி ஒரு மண்டலம் எங்கெங்கும் ''சுவாமியே சரணம் ஐயப்பா ''
கோசங்கள் தான் .
''அப்பாடா ,நிம்மதி!தண்ணி அடிச்சிட்டு வந்து மிருகம் மாதிரி விழுந்து இம்சை பண்ணுவான் ,நான் மட்டும் அவனுக்கு பொண்டாட்டியா நடந்துக்கணும். பக்கத்திலே போகலேன்னா அடி,உதை தான் .இந்த இம்சைக்கு தற்காலிக விடுதலை'' என்று சில மனைவிகள் உடம்புக்கு ஓய்வு கொடுத்துக் கொள்ளும் வசந்த காலம்.

''என்ன பொம்பளைடா இவ!வயசுக்கு வந்த பிள்ளைக இருக்கே என்கிற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லாம சரச மாட கூப்பிடுராளே !இவளிடமிருந்து தப்பிக்கிறதுக்கு இது தான்டா வழி''என்று சிலர் உண்மையாகவே மாலை போட்டுக் கொள்வார்கள் .சிலரது இயலாமை யை மறைப்பதற்கும் இந்த விரதம் உதவும் என்பதை மறந்து விடக்கூடாது .

இறைச்சிக் கடைக்காரர்களுக்கு சற்றே வருமானம் குறையலாம் .டாஸ்மாக்கில் விற்பனை குறைவதால் நாட்டுக்கு நட்டமேதுமில்லை.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களில் சிலர் மாலை போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

மனதையும் உடலையும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக ஆத்திகர்கள் கையாண்ட சில வழிகளில் விரத வழிபாடும் உண்டு.

அது ஐயப்பன் வழியாக பெரும் அளவில் விரிவாகி இருப்பது .
மகிழ்ச்சிதான் !

ஆனால் இந்த விரதத்தின் மூலம் குடிகாரர்களுக்கு திருந்துகிற எண்ணம் ,வாய்ப்பு ஏற்பட வேண்டாமா ?

ஒரு மண்டலம் விரதம் இருந்து ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்பவர்களை ,ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க குடியைமறப்பதற்கு ஐயப்பன் அருள் பாலிக்க வேண்டாமா?

இது எனது கேள்வி ...இல்லையில்லை எனது கவலை!!

4 comments:

MANIAN said...

pathlai ethirpaarkkiren

அகல்விளக்கு said...

//ஒரு மண்டலம் விரதம் இருந்து ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்பவர்களை ,ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க குடியைமறப்பதற்கு ஐயப்பன் அருள் பாலிக்க வேண்டாமா?//

என்ன செய்வது?

சாராயத்தை வைத்துக்கூட சாமி கும்பிடுகிறோம் அல்லவா!!

அன்புடன் மணிகண்டன் said...

ஆரோக்யமான கவலை தான் சார்... நம்மாளுங்க தான் டாஸ்மாக்கில் சாமிகளுக்கு தனி கிளாஸ் வச்சிருக்காங்களே...

Anonymous said...

dear sir,

You claim to be a senior journalist, but please go through your article once again or ask your friends, does this piece qualify to be an article?

This can, at best be called a 'snippet'(thunukku in tamil). I am writing this just for your information and not for posting.

Regards,
Naveen

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...