Saturday, April 17, 2010

துருப் பிடித்துப் போன மூளைகள்!!

இதயம் இருக்கிறதா இல்லையா ?

துருபிடித்துப்போன மூளைகளின் ஆதிக்கத்தினால் 72 வயது மூதாட்டியின் உயிர் கேள்விக்குறி ஆகி இருக்கிறது .

குடியரசு தலைவர் என்கிற உயர் பதவியில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறார் . ஆட்டிப்படிக்கும் ஆட்சிக்கட்டிலின் விசைக் கயிறும் ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள் .

உள்கட்சி ஜனநாயகம் - வெளிக் கட்சி ஜனநாயகம் என்று பேசுகிற ஜனநாயகத்தின் தத்துப் பிள்ளைகளும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிற 72 வயது மூதாட்டி சிகிச்சை பெற தமிழ் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது . சென்னை வந்த அவரை தரை இறங்க விடாமல் மறித்து நள்ளிரவில் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

காரணம் அவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் .

அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டால் எரிமலை வெடித்துவிடுமா ? பூமி பிளந்து போகுமா? கடல் பொங்கிவிடுமா?

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது இங்கே என்ன நடந்தது ?

அனுதாப தீர்மானம் போடக் கூட கட்சி இல்லையே அய்யா !

இந்த மூதாட்டியை அனுமதித்தால் என்ன நடந்து விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சி இருக்கிறார்கள் . பயங்கரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படுகிறவர்களை ஒடுக்குவதற்கு திராணியற்றவர்கள் 72 வயது மூதாட்டியிடம் எதற்காக அஞ்சுகிறார்கள் ?

பாவிகளா! அவருக்கு சரியான நினைவு கிடையாது நடக்கவும் இயலாது . முதுமை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் !

டெல்லி எஜமானர்களை எதிர்க்கிற சக்தி ஆளும் கட்சிகளுக்கும் இல்லை எதிர் கட்சிகளுக்கும் இல்லை!

அடுத்த தேர்தலில் எத்தனை சீட்டுகள் , யாருடன் கூட்டணி பேரம் பேசலாம் என்பதில் கவனமாக இருக்கிற அரசியல் கட்சியினர் வெறும் காகிதப் புலிகளே ! அவர்களது கண்டனம் காகிதத்துடன் நின்று விடும் . உண்ணா விரதம் , மனித சங்கிலி என்கிற நாடகங்களுடன் களைந்து போவார்கள்!

என்ன செய்வது?

தமிழும் , இனமும் எதிர்வரும் காலத்தில் அனாதையாக , ஒடுக்கப்பட்ட இனமாக வாழ வேண்டும் என்பது விதிக்கப் பட்ட சதி!

சதியை எதிர்போம் என்று சொல்லி போராட்ட அரசியல் நடத்தி கட்சி வளர்ப்பதற்கு சில கட்சிகளும் வரும்!

வாழ்க ! வாழ்க! வாழ்க!

2 comments:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

புதிய தென்றல் said...

நீங்கள் எழுதிய எல்லாம் சரிதான். மக்கள் போராளிகள் ஆகிய மாவேஸ்ட்வாதிகளை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு. உங்களுக்கும் தைரியம் இல்லை இந்தியா அரசு தீவிரவாதிகளை பார்த்து தீவிரவாதிகள் என்ற பதத்தை பயன்படுத்த. 72 வயது முதிர்ந்த ஒரு தாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவாத எந்த ஒரு அரசும் பயங்கரவாத அரசுதான். இவர்கள் மனித குலத்துக்கே எதிரிகள் பயங்கரவாதிகள். எந்த ஒரு சாதாரண மனிதனிலும் பயங்கரவாதி கிடையாது பயங்கர வாதத்தை உருவாக்குபவர்கள் அரசு பயங்கரவாதிகளும் ஆளும் வர்க்கமும்,முதலாளிகளும் தான் புரிந்து கொள்ளுங்கள்.

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...