Friday, April 30, 2010

யாழினியும் நாமும்....!


நெருஞ்சி முட்களாய் கண்ணிமைகள் மாறினால்...

அமிலப் புகையை நுரையீரல் சுவாசிக்குமேயானால்...

சம்மட்டிகளின் வீச்சு இதயத்தில் இறங்குமேயானால்....

அந்த மனிதன் என்னாவான்?

யாழினி குறும் படம் பார்த்தபோது அப்படியொரு அனுபவம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் ஒட்டு மொத்த தமிழ் ஈழ சகோதரிகளின் துயரத்தை,துன்பத்தை,பாழ்பட்டுப் போனதை எடுத்துகாட்டிவிட்டாள் ,யாழினி.

புழுக்களாய், புன்மைத் தேரைகளாய்,கோழைகளாய், மூடர்களாய்,வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்வு குத்திக் கிழித்தது.

தத்தும் தவளைக்கிடமாகிவிட்டதே முல்லைக் காடு..

'தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை 'என்று கேட்ட பாவேந்தனின் கூற்றுப் பொய்யாகிப் போனதே என்கிற வேதனை...

இருக்க வழிதான் இல்லை ,ஆனால் இறக்க எத்தனையோ வழிகள் !

முத்துக்குமார்கள் நினைவுக்கு வந்தனர்,யாழினியை தரிசித்து விட்டு வெளியே வந்த பிறகு...

தமிழகத்தமிழன் தன்னுடைய அடையாளங்களை ,பாரம்பரிய குணத்தை இழந்து ,பணத்துக்காக மந்தைகளாக மாறி எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.

தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

வீரம்,ஈரம் ,என்பதெல்லாம் இங்கே வணிகமாகிவிட்டன.

ஈழத் தமிழர்களது வீர மரணம் இங்கே உள்ள கட்சிகளுக்கு வாக்கு சீட்டுகளாக மாற வழிஏதும் இருக்கிறதா?

சொல்லுங்கள் யாழினிகளே!

உங்களது படங்களை சுவரொட்டிகளில் காட்டுகிறோம்.

உங்களது தியாகத்தை எங்களது அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சி பீடம் ஏறுவோம்.

இதுதான் நாங்கள் செய்யும் கைமாறு....!

1 comment:

kswamy said...

தமிழகத்தில் தமிழன் எல்லோரும் பண பிசாசுகள் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக தங்களின் இந்த வலைப்பூவையும் தாங்கள் கண்ட குறும் படமும் சான்று. ஈழ தமிழரின் வாழ்வு செழித்திட வேண்டும், தமிழக தமிழர்கள் விழித்திட வேண்டும். தமிழ் தாயின் அருள் வேண்டும்....

அன்பன்
கண்ணன்

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...