Monday, January 2, 2012

பிரபுதேவாவின் கல்யாண கவலையில்....!

பனிரெண்டு ஆண்டுகள் !
 முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி!
 பிரமாண்டமான சிலை!.பார்க்கிறவர்கள் வியக்கிறார்கள் ,பார்க்காதவர்கள்  சுற்றுலா வருகிறார்கள் தரிசிக்க!
 அற்புதமான அந்த சிலை போதிய பராமரிப்பு இன்றி பாதங்களில் பழுது பட்டிருக்கிறதாம்.தமிழ் ஆர்வலர்கள் கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.
 கருணாநிதி திறந்த சிலை என்பதால் பராமரிப்பு இல்லாது போனதா? அல்லது  சிலையில்ஏதேனும் சிறு பகுதி சேத முறட்டும் அதை வைத்து ''சிலை வைத்ததிலும் ஊழல் ''என சொல்லி  வழக்கு பதிவு செய்யலாம் என காத்திருக்கிறார்களா?
 அய்யன் சிலையிலுமா அரசியல்?
அவன் உலக மாந்தருக்கெல்லாம் பொதுவானவன் .அவனது சிலையில் சிறு கீறல் விழுந்தாலும் தமிழ் பற்றுள்ளவர்கள் தாங்க மாட்டார்கள்.நன்றாக  கவனியுங்கள் ,இங்கு நான் சொன்னது ''தமிழ் பற்றுள்ளவர்களை''தான்!தமிழர்களை அல்ல.
 வள்ளுவனை பற்றி கவலை இல்லை அவர்களுக்கு!
 சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் சேர்வாரா?
 ரஜினி எப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வார்?
 பிரபு தேவா-நயன்தாரா கல்யாணம் இந்த வருடமாவது நடக்குமா?
எத்தனை மந்திரிகள் சசியின் ஆதரவாளர்கள்?
 இப்படி நாட்டுக்கு முக்கியமான கவலைகள் தமிழர் என சொல்லப் படுகிறவர்களுக்கு! அதனால்தான் தமிழ் பற்றுள்ளவர்கள் என பிரித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது!
 வள்ளுவனுக்கு விழா எடுக்கமாட்டார்கள்.ஆனால் தீபாவளி கொண்டாடுவார்கள். இந்த தீபாவளி தமிழனின் விழாவா? இல்லை!
சோழர் காலம் வரை ''தமிழகத்தில்''தீபாவளி கொண்டாடப் படவில்லை.
திருமலை நாயக்கர் காலத்தில் தான் இந்த விழா கொண்டாடப் பட்டது.அதுவும் மதுரையில்!பின்னர் காலப்போக்கில் பரவிவிட்டது.
 ஆனால் வான் புகழ் கொண்ட வள்ளுவனுக்கு அப்படி ஒரு விழா எடுக்கவில்லை !அவனது சிலையையாவது சிறப்புடன் வைத்திருக்கக் கூடாதா? 

1 comment:

செங்கதிரோன் said...

சோழர் காலம் வரை ''தமிழகத்தில்''தீபாவளி கொண்டாடப் படவில்லை
your blog always carries these kind of unknown informations. thanx for sharing, if possible share your posts in tamilmanam and indli.it wil reach many people.

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...