Tuesday, January 3, 2012

அரசியல்வாதிகள் ...நம்பலாமா?

அரசியலுக்குப் போனால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் ,படிச்சு,பட்டம் , வாங்கி என்னத்தை கிழிக்கப் போறோம் என்கிற மனப்பான்மை இப்ப  எல்லோருக்குமே வந்தாச்சு.லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணத்தை இதுவரை  எந்த கட்சித் தலைவரிடமும் இருந்து பிடுங்கல ! திரண்ட சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யப் பட்டதாகவும் தெரியல! [ யாருக்காவது தெரிஞ்சிருந்தால்  சொல்லுங்க.திருத்திக்கிறேன் ] நரசிம்மராவ்,பாதல்,அசோக் சவான்,பல்ராம்  சாக்கர்,கெய்ரோன் ,கல்மாடி,எடியூரப்பா என எவ்வளவோ தலைவர்கள் ஊழல்  வழக்கில் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என்றாலும் .குற்றம் நிரூபிக்கப் படவில்லை என வெளியில் வந்துவிட்டார்கள்.சிலர் மீது இன்னும் வழக்கு விசாரணை நடக்கிறது.
 ஜெயலலிதா,கனிமொழி,ராஜா என இன்னும் பலர் மீது வழக்கு இருக்கிறது. இருந்தாலும் என்ன நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை எண்ணிக்கொண்டு  காலம்  கடத்தப்படுவது தானே உண்மை!நாம்ப சின்ன குற்றத்தில் மாட்டிக் கொண்டாலும் கடுமையாக தண்டிக்கப் படுவோம்.ஆனால் அரசியல் கட்சி  தலைவர்கள் என்றால் தனி சலுகை.கவுரவமாக் நடத்தப் படுவார்கள். ஏனென்றால் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாம் !வெங்காயம்!
அதிமுகவில் இருந்து கட்டம் கட்டப் பட்ட சசிகலா குழு மீது என்ன குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது?எதுவும் இல்லை .ஆனால் அவர்கள்
அதிகார மையமாக இருந்து தவறாக நடந்திருக்கிறார்கள் என்பதுதானே  சொல்லப் படுகிற புகார்? இதற்கு என்ன தண்டனை? நில அபகரிப்பு என்று எவனாவது புகார் கொடுத்தாலும் பாய்கிறவர்கள் பெரிய இடத்து விவகாரத்தில்  என்ன செய்திருக்கிறார்கள்?
பகிரங்கமாக சொல்ல முடியாமல் தவிக்கிறது அதிமுக!
சுதந்திரத்திற்கு பின்னர் எத்தனை ஊழல் வழக்குகள் உருப்படாமல் போயிருக்கின்றன?
ஊழல் குற்ற சாட்டினை சொன்னதற்காக மாமனார் நேருவும் மருமகன் பெரோஸ் காந்தியும் அரசியல் விரோதிகள் ஆகவில்லையா?
 அதனால் இப்பலாம் அரசியல் வாதிகளை நம்புவதே பாவம் என தோன்றுகிறது!

No comments:

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...