Thursday, January 5, 2012

ஏ.ஆர். ரகுமான் வாழ்க!

இசைக்கு என்றுமே ராஜா இளையராஜாதான்.ஆனால் இளவரசன் ஏ.ஆர்.ரகுமான் தான்.இருவருமே நல்லிசையால் நம் மனம் கவர்ந்தவர்கள்.இன்றைக்கும் இரவினில் கண்ணுறங் குவதற்கு  ராஜாவின் மெல்லிசை தாலாட்ட வேண்டியதாக இருக்கிறது.
தமிழனுக்கு எட்டாமலேயே போய் விடுமோ ஆஸ்கார் என்கிற ஏக்கத்தை நீக்கியவர் ரகுமான்தான்.
அவரின் பிறந்த நாள் 06 01 1967 ஒவ்வொரு இந்திய தமிழனும் மட்டுமல்லாது நில
உலகின் நெடிய,பரந்த கண்டங்களில் வாழ்கிற தமிழர்களும் பெருமைப் படவேண்டும்.
இவரின் தந்தை ஆர்.கே.சேகர்.இசை அமைப்பாளர்தான்.
தாய் கஸ்தூரி.
சகோதரிகள் காஞ்சனா,பாலசரஸ்வதி,ரேகா,
சகோதரன் ரகுமான்தான் அன்றைய திலிப்குமார்.
ரகுமான் சிறுவனாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார்.
வறுமை வாட்டியது.
தந்தையின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு வாழ வேண்டிய நிலை.
விதியை நம்புகிறவர்கள் இறைவனின் விளையாட்டு என்று சொல்லலாம்.
விதியை நம்பாதவர்கள் இதை வாழ்வில் வருகிற விபத்து என்று சொல்லலாம்.
ஆனால் உழைப்பை நம்பினார் ரகுமான்.ஊக்கம் கொடுத்தார் கஸ்தூரி.
நம்பிக்கைதான் மனிதனின் உயர்வுக்கு அடிப்படை.ஊக்கத்துடன் உழைத்தல் உயரமுடியும் என்பதை மகனுக்கு போதித்த கஸ்தூரி மதம் மாற வேண்டியதானது.
இஸ்லாமுக்கு மாறினார்.பெயரும் கரீனா பேகமாக மாற்றப்பட்டது.
ரகைனா,பாத்திமா,இசரத்,ரகுமான் என பிள்ளைகளின் பெயர்களும் மாறின.
இன்று உலகமே ரகுமானை பார்த்து வியக்கிறது.
அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வோம்.

No comments:

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...