Friday, January 6, 2012

தமிழ்சினிமா பிழைக்குமா?

வளர்கிறது  வாழ்கிறது மேலைநாட்டுக்கு இணையாக இருக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
 உண்மைதானா?
உண்மைதான்,தொழில் நுட்ப அறிவில் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது.மற்ற  மாநிலத்தவரின் மீசை அவர்கள் விடும் மூச்சில் கருகுகிறது என்பது மட்டும் உண்மை.மற்றபடி திரைக்கு வரும் படங்கள்  வளரவில்லை.வளர்வதற்கான தகுதிகளுடன் வருபவர்களை  தொடக்க நிலையிலேயே காயடித்து அவர்களை கற்பனை மலடுகளாக வாழ  வைக்கிறது தமிழ் சினிமா என்பதுதான்  கலப்படமற்ற உண்மை.
1931 முதல் கடந்த 2011 வரை தயாரிக்கப் பட்ட படங்கள் 5388 .இவற்றில் இன்று வரை திரையை பார்க்க முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடப்பவையின் எண்ணிக்கை 210 .
கடந்த ஆண்டில் வெளியான நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 142 .இந்த எண்ணிக்கையில் நூறு நாட்கள் ஓடிய  படங்கள் என்பதை விட ஓட்டப் பட்ட  படங்கள் என சொல்வதே சரியாக இருக்கும் ,அவற்றின் எண்ணிக்கை பத்து என்கிறது புள்ளிவிவரம்.ஆனால் உண்மையிலேயே விநியோகஸ்தர்களுக்கும் , தியேட்டர்காரர்களுக்கும் கையை கடிக்காமல் போன படங்கள் ஆறே ஆறுதான்!
காஞ்சனா ,கோ,சிறுத்தை,மைனா ,எங்கேயும் எப்பொழுதும்,மங்காத்தா .இதிலும்  ஒரு சில படங்கள் தயாரிப்பாளருக்கு நட்டத்தையும் மற்றவர்களுக்கு லாபத்தையும் கொடுத்தன. மங்காத்தா தயாரிப்பளருக்கு ஆறு கோடி நட்டம் என்கிறார்கள்.
தரமான படங்கள் ,அதை தந்த படைப்பாளிகள் தங்களின் வாழ்நிலை உயர்வுக்காக் மசாலா பக்கம் போவதால்,அல்லது ஹீரோக்களின் கட்டாயபடுத்தல் காரணமாக தரம் தாழ்ந்த படங்களை தரவேண்டியதாக இருக்கிறது.
 இங்கே ஹீரோக்களை ஒட்டி இருப்பவன்தான் மதிக்கப் படுகிறான்.ஹீரோ சொல்கிற டி.வி.டி.களை தமிழுக்கு ஏற்ப மாற்றி கொடுக்கிற வேலைதான் இங்கு நடக்கிறது.கோடிக்கணக்கில் கொட்டி அலுத்து எடுக்கப் பட்ட படங்கள் பகல் நேரக் காட்சிகளாக ஒட்டப்பட்டு வெற்றி பெற்றதாக சொல்கிற அவலம் இருக்கிறது.இன்றைய தமிழ் சினிமாவில் இப்போது உச்சத்தில் இருப்பவர்கள் ஆறு பேர்களே!விஜய்,விக்ரம்,அஜித் ,சூர்யா,கார்த்தி,சிம்பு இவர்கள்தான்  மார்க்கெட் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு ஏற்ப கதை பண்ண தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் .கதாசிரியர்கள் என்கிற இனம் இன்று தமிழ்சினிமாவில் இல்லை என்பது கவலைக்குரிய ஒன்று'
நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் அவர்களுக்கு இணங்கி,வணங்கி,குனிந்து போவதால் தமிழ் சினிமா சவலைப் பிள்ளையாகவே இருக்கிறது.
இந்த இழி நிலை மாறப்போவதில்லை!

No comments:

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...