Monday, January 23, 2012

ரஜினியின் மனம் திறந்த பேட்டி...!

உண்மையை சொல்வதற்கும் தைரியம் வேண்டும் !
அது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நிறையவே இருந்தது!
இப்போது இருக்கிறதா என்றால் ...?
என்னால் சொல்லமுடியாது.
2003 -ல் அவர் எதற்கும் தயங்கியதில்லை !
பத்திரிகையாளர்களை பயமின்றி சந்தித்தார்.அவர்களும் பழகினார்கள்!
கால மாற்றம், அரசியல் சூழல், கலையுலகின் நம்பர் ஒன் தகுதி இவையெல்லாம் அவரை விலகி நிற்க வைத்துவிட்டதாகவே கருதுவேன்!
யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதன் பிறகு இடைவெளி அதிகமாகி விட்டது.
2003 -ல் அவர் பேட்டியில் சொன்னது இன்றும் எனக்கு பசுமையாக இருக்கிறது.
இன்று வரை அவரளவுக்கு வேறு எந்த ஹீரோவும் மனம் திறந்ததில்லை!
மது அருந்துவதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
மாலை மயங்கியதுமே மஞ்சள் நிற திரவத்தை ரத்தத்துடன் கலக்க செய்யும் பலரை தெரியும்.ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.
இமேஜ் போய் விடும் என்கிறார்கள்.
ஆனால் ரஜினியின் இமேஜ் மட்டும் இறங்காமல் உச்சத்திலேயே இருக்கிறதே? 
அது எப்படி?
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தன்னை எப்படி கண்டித்தார் என்பதை அந்த காலத்தில் சொன்னதைத்தான் இப்போது நினைவு படுத்துகிறேன்.
ரஜினி சொன்னது;
''நாகேஷ் தெரியுமா?எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட் தெரியுமா? அவருக்கு முன்னால்  நீ சிறு துரும்பு !தண்ணி அடிச்சிட்டு அவர் முன்னால நடிக்க வந்திருக்கே!இனிமே சொட்டுத் தண்ணி அடிச்சு வந்தின்னா .........அதால அடிப்பேன்னார்.அன்னிக்கி விட்டேன் .மேக்கப் போட்டாச்சுன்னா தண்ணிய தொடறதில்ல'' என்று சொல்லி இருக்கிறார். .

3 comments:

rara said...

துணிச்சலும் தும்பைப் பூ மனதும் மட்டுமே சூப்பர் ஸ்டாரைத் தூக்கித் தொட முடியா உச்சத்தில் வைத்து மெச்சக் கூடிய நிலையில் அழுத்தமாக உட்காரவைத்திருக்கிறது.
அருமையான பதிவு சார்...

Kannan said...

உண்மை சம்பவம் ........
உங்கள் பதிவுக்கு நன்றி


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

மணியன் said...

உண்மைசம்பவம் கண்ணனுக்கு நன்றி.

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...