Wednesday, January 4, 2012

தெரிந்து கொள்வோம்!

நாம் தெரிந்து  கொள்ளவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன .
கால மாற்றம்,சூழல் காரணமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற   ஆர்வம் இல்லாது போய் விடுகிறது! இதனால் நட்டம் நமக்குதான்.எனவே தொடர்ந்து சில விவரங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
''சேர ,சோழ,பாண்டிய மன்னர்களின் குதிரைகளின் பெயர் என்ன?''
''பாடலம்-இது சேரனின் குதிரைகள்.
கோரம்-இது சோழனின் குதிரைகள்.
கனவட்டம்-பாண்டியன்''

''அக்கிரஹாரம் என்கிற பெயருடன் அந்தணர் வீடுகள்  எப்போது  வந்தது?''
''நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் அந்தணர்களுக்கு அக்கிரஹாரம் ஏற்படுத்தி தரப்பட்டது.ஆலோசகர்களாகவும்,தளகர்த்தர்களாகவும் நியமித்தனர்.''

''இந்து மதத்தில் இருந்த வித்தியாசமான வழக்கம் என்ன?''
''வைணவர்களில் வடகலை-தென்கலை நாமம் போட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டால் ,அதற்காக உடனே போய் சுவரில் முட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.''

''காந்தி,இந்திரா ,ராஜீவ் படுகொலைகள் பற்றிய விசாரணை?''
காந்தி,இந்திரா படுகொலைகள் பற்றிய நீதி விசாரணை நாட்டுமக்கள் அனைவரும் அறியும்படி வெளிப்படையாக,போதிய கால அவகாசமுடன் நடந்தது.ராஜீவ் படுகொலை விசாரணை அப்படி நடக்கவில்லை .''

''கற்பனை என்ற சொல் இலக்கியங்களில் யார் காலத்தில் பயன் படுத்தப்பட்டது?''
''ஏழாம் நூற்றாண்டில் திருமூலர் காலம் முதல் தான் பயன்படுத்தக் காண்கிறோம்.'கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம்' திருமூலருக்கு முன்னர் சங்கப் பாடல்களில் 'புனைவு என்கிற சொல் பயன்பட்டது.













No comments:

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...