Tuesday, January 3, 2012

மூக்கறுப்புப் போர்!

நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் மூக்கறுப்புப் போர் .
 அதற்கு முன்னர் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.
தீபாவளி விழா என்பது மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் புகுத்தப்பட்டது என முன்னர் பதிவு செய்திருந்தேன்.அதற்கு எது ஆதாரம் என பல நண்பர்கள் என்னை குடைந்து எடுத்துவிட்டனர்.
எனது தமிழ் ஆசான் அ.கி.பரந்தாமனார் எழுதியிருக்கும் மதுரை நாயக்கர் வரலாறு என்கிற நூலில் ஆதாரம் இருக்கிறது.பக்கம் 342 -ல் மூணாவது பாராவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இனி மூக்கறுப்புப் போருக்கு வரலாம்.
இதுவும் நாயக்க மன்னர் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு தான்!
மைசூர் மன்னன் கந்திருவ நரச ராஜா என்பவன் [1638 -1659 ]திருமலை மன்னன் மீது கடும் கோபம் கொண்டிருந்தான்.மதுரையை கைப்பற்ற வேண்டும் என்பது அவனது அளவிட முடியாத ஆசை!
படையை ஏவி விட்டான்!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நீர்வளமும்,நில வளமும் மிக்க சத்திய மங்கலத்தை எதிர்ப்பின்றி எளிதாக கைப்பற்றிவிட்டான்.
இது 1656 -ல் நிகழ்ந்தது.
அப்படியே மதுரைக்கு படையை ஏவினான்.
மதுரையை நோக்கி வந்த மைசூர் படையினர் வழி நெடுகிலும் உள்ள ஊர்களை கொள்ளை அடித்தும்,தீயிட்டும் மன்னரின் கட்டளைப் படி ஆண் பெண் என வேறுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளின் மூக்குகளையும்   அறுத்து கொடுமை செய்தபடியே மதுரையை நெருங்கினார்கள்.
அப்போது நாயக்க மன்னனுக்கு உடல் நலமில்லை.
ரகுநாத சேதுபதிக்கு மனைவியை விட்டு கடிதம் எழுதி அனுப்பினார்.
அவரும் 25000  மறவர்களை அனுப்பி வைத்தார்.திருமலையும் 35000  வீரர்களை  திரட்டியிருந்தார்.
மைசூர் படையினர் புறமுதுகிட்டு ஓட வேண்டியதாகிவிட்டது.
மூக்கு அறுத்தவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன்  தனது தம்பி முத்தியாலு நாயக்கரை பதினெட்டு பாளையக்காரர் களின் உதவியோடு மைசூருக்கு அனுப்பிவைத்தார். அவர்கள்  வழியில் இருந்த கோட்டைகளைகைப்பற்றிகொண்டு நஞ்சன்கூடு வரை சென்றார்கள். வழியில் அகப்பட்ட அத்தனை பேர்களின் மூக்குகளையும் அறுத்துவிட்டு மைசூர் மன்னனின் மூக்கையும் அறுத்தனர்.இந்த போருக்கு மூக்கு அறுப்பு வேட்டை என்று பெயர்!

No comments:

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...