Friday, January 6, 2012

சிவகுமாரும் நானும்.....!

நடிகர் சிவகுமாரும்,நானும் நல்ல நண்பர்கள்.எனக்கு நல் வழி காட்டக்கூடியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.இந்த நட்பை பயன்படுத்திக்கொண்டு சூர்யா,கார்த்தி இருவரிடம் நான் நட்பு எல்லைதாண்டியதில்லை.எனது இல்லத் திருமண நிகழ்வுக்கு சிவகுமார் மட்டுமே வந்தார் என்றால் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் பழகி வருகிறோம்.அவரின் கம்பன் என் காதலன் புத்தகத்தில் எனது உழைப்பும் உண்டு.அவர் அதை பதிவும் செய்திருக்கிறார்.
நாட்டு நிகழ்வுகள்,சினிமா விவகாரங்கள் ,அரசியல் என எல்லாமே எங்களின் பேச்சில் இடம் பெற்றிருக்கும்.
மது ,மாது,புகை என அனைத்திலும் மன்னர்களாக இருந்த எனது சக நண்பர்கள் பற்றி அவர் வருந்துவது உண்டு.அவர்களுக்கு அறிவுரை சொன்னதும் உண்டு.

''வேண்டாம்யா!  விட்டுத்தொலைங்கப்பா.பின்னாடி உங்க குடும்பம் தான்  கஷ்டப்படும்.குடிப்பழக்கம் உள்ள எந்த சினிமாக்காரனாவது  நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கானா ?சிறந்த பத்திரிகையாளனா க இருக்கிற நீங்க சிந்திங்கப்பா!'' என்று அவருக்கே உரிய பாணியில் கண்டிப்பார்.

''நீ சொல்லி நாங்க என்ன கேட்கிறது?'' என்கிற பாணியில் தான் எனது சக நண்பர்கள் நடந்து கொண்டார்கள்.
இன்று அவர்களில் சிலர் இல்லை.

ஜேம்ஸ் பாண்ட் நடிகரும்  நானும் ஒருதடவை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தோம்.இரவு பயணம்.காலையில் விமானத்தில் சென்னைக்கு வரவேண்டும்.மதுரை வந்து சேரும் வரை ஒரு புல் பாட்டிலை காலி செய்துவிட்டார்.

எனக்கு பயமாகிவிட்டது.ஆனால் ஸ்டெடியாக தான் இருந்தார்.அந்த பழக்கம்தான் அவருக்கு எமனாக இருந்தது..
குடி குடியை கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே பிராந்தி கடைகளை அரசே  திறந்திருக்கிற போது யார் திருந்தப் போகிறார்கள்? 

1 comment:

k.r.selvaraj said...

930.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...