Tuesday, January 3, 2012

மருத்துவர் அய்யாவும் சத்தியமும்!

சத்தியம் சர்க்கரைப் பொங்கல்,விடிஞ்சா வெண் பொங்கல்னு சொல்வாங்க.இது  சத்தியத்தை இஷ்டத்துக்கு வளைச்சுக்கிற சத்தியவான்களை பத்தி வேடிக்கையாக சொல்றது. அந்த வேடிக்கை யாளர்களுடன் மருத்துவர் ஐயாவும் சேர்ந்துட்டாறோன்னு  இப்ப சந்தேகம் வந்திருச்சு!கட்சிக்காரர்களிடம் சத்தியம்  வாங்கனும்னு சொல்லி இருக்காராம்.
 ஐயா மறந்துட்டார்னு நினைக்கிறேன்!
26 02 1989 -ல் ஆனந்தவிகடனில் ஒரு பேட்டி வந்திருக்கு. ..
''உங்கள் வாழ்க்கை முடிய இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .அந்த கடைசி நிமிடங்களில் என்ன செய்வீர்கள்?''என்பது கேள்வி!
அதற்கு ஐயா சொன்ன பதில்:
''என் மனைவியை கூப்பிட்டு 'நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து  கொடுத்திருக்கிறேன்.உப சத்தியமாக என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறி இருக்கிறேன். இனி அந்த சத்தியத்தை நீதான் காப்பாற்ற வேண்டும் 'என்று கூறுவேன் ''
இது ஐயா சொன்ன பதில்.
இப்ப சொல்லுங்கப்பு,சத்தியம் சர்க்கரைப் பொங்கலா,வெண் பொங்கலான்னு!

2 comments:

SUNDARAN said...

உங்க ஞாபக திறனுக்கு வாழ்த்துக்கள்.

SUNDARAN said...

உங்க ஞாபக திறனுக்கு வாழ்த்துக்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...