Wednesday, January 4, 2012

இயக்குனர் சங்கமும்,நடிகர் சங்கமும் !

ஜனவரி எட்டாம் தேதி தேனியில் உண்ணா விரதம் இருக்கப் போகிறோம் என்று பாரதிராஜா அறிவித்து ஒரு நாள் கூட முடிவடையாத நிலையில் அந்த போராட்டம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. என்ன  காரணம்?
அரசு அனுமதி மறுத்துவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.
 நடிகர் சங்கம் ஒத்துழைக்க மறுத்து தனியாக நடத்தப் போவதால் இவர்கள் ரத்து செய்து விட்டார்கள் என இன்னும் சிலர் முணு முணுக்கிறார்கள்! பெப்சி  தொழிலாளர் சங்கமும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துவிட்டது.அதனால் வேறு வழி இல்லாமல் பாரதி  ராஜா ஒத்தி வைத்து விட்டார் என இன்னொரு தரப்பில் சொல்கிறார்கள்.
பாரதிராஜா தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
 ''முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டுவருவதால் அதற்கு ஊறு ஏற்படும் வகையில் இந்த போராட்டம் இருந்துவிடக்கூடாது என்பதால் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது '' என்று சொல்லப் படுகிறது.
ஆனால் உண்மையான காரணம் வேறு என கிசுகிசுக்கப் படுகிறது.
திரை உலகத்தினர் பிளவு பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்கிறது அந்த கிசு கிசு!
அண்மைக் காலங்களில் பாரதிராஜா நடிகர்களை பற்றி சொன்ன கருத்துகளை  நடிகர் சங்கம் ரசிக்கவில்லை!''நடிகர்கள் ரத்தம் உறிஞ்சிகள் .இம்மாதிரியான  போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் ''என சொன்னதால் கோபத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
இயக்குனர் சங்கத்திலும் அவருக்கு மாறுபட்ட கருத்து உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
தன்னிச்சையாக அவர் எடுத்த முடிவுக்கு நாம் எப்படி கட்டுப்படலாம் என்கிற கோபம் இருக்கிறது.
இயக்குனர்கள் கைவிட்ட போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்துமா?
சந்தேகம்தான்!

No comments:

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...