Wednesday, February 1, 2012

விஜயகாந்தும் ஜெயலலிதாவும்...!

எதிர்பார்த்ததுதான்..ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் மோதல் வரும் என்று எதிர் பார்க்கவில்லை.
அதிமுகவும்,தேமுதிகவும் கூட்டணி அமைக்கும்போதே சகுனங்கள் சனி பகவானின் முதுகில் அமர்ந்து காட்சி அளித்தன! தேறாத கூட்டணி என்று நினைத்தபோது செங்கொடி கட்சிக்காரர்கள் ஒட்டு போட்டு சேர்த்து வைத்தனர்.தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவை படு சேதாரமாக்கிவிட்டு ஆட்சியில் ஜெயலலிதாவும்,எதிர்கட்சி தலைவராக விஜயகாந்தும் அமர்ந்தனர்.
''தகுதி அற்றவர்கள் உயர் பதவிக்கு வந்து விட்டார்கள்''என்று கடுமையுடன்  சாட்டையை சுழற்றி விஜயகாந்தை கடுமையாக தாக்கி விட்டார் ஜெயலலிதா .
இந்த அடியில் இருந்து மீள்வதற்கு தேமுதிக கடுமையுடன் போராட வேண்டி இருக்கும்!
அருகதை அற்றவர்கள் ..அவர்களுடன் கூட்டு சேர்ந்ததற்காக வெட்கப் படுகிறேன்,வேதனைப் படுகிறேன் என்கிற வார்த்தைகள் விஜயகாந்தின் அடி மனது வரை பாய்ந்திருக்கும்.சட்ட மன்றத்தில் பதிவான வார்த்தைகள் எதிர்வரும் காலத்தில் வருகிற எம்.எல்.ஏ.க்களின் பார்வையில் படாமல் போகாது.இதுவரை எந்த எதிர்கட்சி தலைவரும் இந்த அளவுக்கு வார்த்தைகளால் வறுக்கப்  பட்டதில்லைவிஜயகாந்துக்குதான்  அந்த பெருமை கிட்டி இருக்கிறது.அடடா..அந்த அம்மா சொல்லடுக்குகளால் விஜயகாந்தையும் அவரது கட்சியினரையும் வருணித்த விதம் எத்தனை ஜென்மம்  எடுத்தாலும் மறக்கமுடியாது.
சங்கரன் கோவில் தொகுதியி ல் தனித்து நிற்க முடியுமா என்று அம்மா கேட்க அதற்கு  கேப்டன் நழுவி பதில் சொல்ல ,பரிதாபமாக இருந்தது.அதிமுக வுடன்  கூட்டணி வைக்கவில்லை என்றால் விஜயகாந்த் ஒரு சீட் கூட வந்திருக்க முடியாது என்று அம்மா சொன்னது  உச்சக் கட்ட தாக்குதல் ஆகும்.
இந்த தாக்குதலின் விளைவு விஜயகாந்தை காங்கிரஸ் பக்கம் அல்லது திமுக பக்கம் கொண்டு செல்லும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?தயவு செய்து பதிவு செய்யுங்கள்!

2 comments:

aanthaiyar said...

விஜ்யகாந்துடன் சரக்கடிதுது பழ்கிய நீங்கள் அவரை மட்டமாக் எடைபோடுவது ஆச்சரியமாக் இருக்கிறது. கேப்டன் கோட்டையில் கோலோச்ச ஜெயாவே ஏணீயாகிறார்.

Rajaram said...

No wonder!! What you have said 100% true,true and nothing other than true.

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...