Tuesday, February 7, 2012

விஜயகாந்துக்கு ராவுத்தர் எதிரியா?

அரசியலில் எதுவும் நடக்கலாம்.நண்பராக இருக்கும் வரை அரவணைப்பு!எதிரியாகிவிட்டால் ஆப்பு!இது அரசியலின் இன்றைய நாகரீகம்.விஜயகாந்த் முறைத்துக் கொண்டதால் அவரை மடக்கிப் போட அவரின் பழைய நண்பர்களை  தங்களின் பிடியில் வைத்துக் கொள்ள அதிமுக போட்டிருக்கும் திட்டத்தின் முதல் காட்சி அரங்கேறி இருக்கிறது.
விஜயகாந்தின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர் இப்ராகிம் ராவுத்தர்.விஜயராஜாக மதுரையில் இருந்தவர் சென்னையில் விஜயகாந்தாக மாறுவதற்கு பெரும்  பாடு பட்டவர்.பிரம்மச்சாரியாக வாழ்கிறவர். அவர் பழுத்த  காங்கிரஸ் வாதி.மூப்பனாரின் விசுவாசி.விஜயகாந்துக்கு மூப்பனாரை அறிமுகம் செய்து வைத்தவரே இவர்தான்.
திருமண வாழ்வில் தடம் புரண்டு விடாமல் இருப்பதற்காக விஜயகாந்தை கடுமையாக கண்காணித்தவர் விஜயகாந்த் சொத்துகள் வாங்குவதற்கு துணையாக இருந்த இவரை அதிமுக தன பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது.விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்திற்கு பின்னர் ராவுத்தரை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.இருவரது நட்பும் உடைந்து நொறுங்கிப் போனது.அருகருகே வீடுகள் இருந்தும் பேச்சு வார்த்தை இல்லை.பேசிக் கொள்வதும் இல்லை.ராவுத்தர் கடனாளியானார்.எடுத்த படமும் வெளியாக வில்லை.
இந்த நிலையில்தான் அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்.
இவரை வலுக் கட்டாயமாக சேர்த்திருக்கிறது என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.
விஜயகாந்தை பற்றிய உண்மைகள் இவருக்கு தெரியும்.
விஜயகாந்த்   தலைமையை கடுமையாக விமர்சிக்கும் பட்சத்தில் ராவுத்தரை அதிமுக முன்னிறுத்தும் .இதன் மூலம் தேமுதிகவை பலவீனப் படுத்தும்.
ஆனால் ராவுத்தர் தனது உயிர் நண்பராக ஒரு காலத்தில் இருந்தவரை விமர்சிப்பாரா?
அரசியலில் எதுவும் நடக்கலாம்.
கவியரசர் கண்ணதாசன் 'வனவாசம்'எழுதவில்லையா?
சொல்லின் செல்வர் சம்பத் அண்ணாவை பற்றி எழுதவில்லையா? காமராஜரை  காந்தியடிகள் 'கிளிக்'குகள் என சொல்லவில்லையா? 
தேமுதிகவை உடைக்கும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.
விஜயகாந்த் தாக்குப் பிடிப்பாரா?
உங்களின் கருத்து என்ன?தயை செய்து பதிவு பண்ணுங்கள்!!!!

2 comments:

tamil. said...

onnthum seyya mudiyaathu .....Panatthukkaaka jeyalalitha pinnaal poeanaal iranthathukku sammam....

aanthaiyar said...

இதெ ராவூத்த்ருடன் நடிகை ஒருவரும் சேர்ந்திருக்கிறாரே!. அவரால் விஜய்காந்திற்கு பிரச்ச்னையில்லையா?

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...