Wednesday, February 8, 2012

பிரபல நடிகரின் மனைவி மரணம் ..பாடம்!

மரணம் என்பது தவிர்க்க இயலாது .அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது.
பிறக்கும் போதே இறப்பும் எழுதிவைக்கப் படுகிறது.
அது என்று ,எப்படி நிகழும் என்பது எவர்க்கும் தெரிவதில்லை.
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் திருப்பதியில் வழுக்கி விழுந்து கவலைக் கிடமாகி இருக்கிறார் என்கிற முதல் செய்தி வந்தபோது இசையுலகமே வாடி,வதங்கிப் போனது.பிற்பகலில் நலமாக இருக்கிறார் என்கிற  செய்திவந்தபிறகுதான் சென்னையில் இருந்த திரை உலக பிரபலங்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். ஒருவரின் மரணம் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறதே தவிர  வேறென்ன சொல்ல முடியும்.என்கிற ஆறுதல்தான் அந்த பெரு மூச்சு.
இந்த நேரத்தில் எனது நினைவு பின்னோக்கி நடந்தது.

பஸ் நிலையம்.
அங்கிருந்த பெஞ்சில் வயதான பெண் படுத்திருக்கிறார்.
உறங்குகிறாரா?
இருக்கலாம்.இன்னும் சூரியன் அரை இருட்டில்தானே இருக்கிறான்!
நேரம் ஆக ,ஆக அசைவற்றுக் கிடக்கும் அந்த பெண்ணை எல்லோரும் பார்க்கிறார்கள். 
அவர்களுக்கு பயம்.
இறந்திருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் நெருங்கிப் பார்க்க அச்சம்.
அனுதாபங்கள் பிறக்கின்றன.''பெரிய இடத்து பொம்பளையா இருப்பாங்க போலிருக்கு..ஊருக்கு போக வந்த இடத்தில உயிரு போயிருக்குமோ?''
கடைசியில் அவர் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி என்பது தெரிகிறது .
வில்லனாக நடித்தார்,அப்பாவாக நடித்தார்,குண சித்திர நடிகராகவும் திகழ்ந்தார்.நடிகர் திலகத்தின் நல்ல நண்பர்களில் ஒருவர்.வாய் நிறைய ''ராமு'' என்று சிவாஜி அழைப்பார் அவரது மனைவிதான் அந்த பெண்மணி.
விதி எப்படி விளையாடி இருக்கிறது பாருங்கள்!.

7 comments:

Anonymous said...

Is it muthuramans wife sulochana???

மணியன் said...

iilai.

Kannan said...

இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Kannan said...

இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Kannan said...

இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Anonymous said...

appa adhu yaaaru?

SHANMUGARAJ THEVAR said...

maranam..mantharkku..pothuvanathu..ithil..,panamo..pugalo..mudivu,seyyum..kaarani..aagathu.

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...