Thursday, February 9, 2012

பிரகாஷ்ராஜி ன் ''டோனி''


வழக்கம்போல்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து அமர்ந்தேன்.மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்திருக்கப் போகிறார்?அதுவும் கமர்சியல் சந்தையாகிப் போன சினிமாவில் இவரும் அதையே தான் செய்திருப்பார்,என்கிற  ஒரு தாழ்வான எண்ணத்துடன் வெள்ளித்   திரையைப் பார்த்தேன்.இருபது நிமிடங்களுக்குப் பின்னர் என் மனதில் சிறு அசைவு.கனமாக்கியது.நேரம் ஆக,ஆக கனம் கூடிக் கொண்டே போய் இடைவேளைக்குப் பிறகு உடைந்து போவோமோ என்கிற அச்சம் வந்தது.

நீயா,நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு தந்தையின் வலி,தனயனின் சுமை,எதிர்பார்ப்புகள் என கலவையாக பிரகாஷ்ராஜ் நொறுங்கும் பொது என்னால் கண்களைக் கட்டுப் படுத்தமுடியவில்லை.உடைய தொடங்கினேன். அடுத்தடுத்து மனதின் கனம் கூடிக் கொண்டே போனது .ஒரு கந்து வட்டிக் காரனுக்கும ஈரம் இருக்கிறது.அவனும் மனிதன்தானே!அற்புதமான காட்சி.
பிரின்சிபாலிடம்,வகுப்பு ஆசிரியையிடம், முதலமைச்சரிடம் பிரகாஷ்ராஜ் மன்றாடும் காட்சியில் அழாத ஆண்கள் இல்லை.அழ முடியாத கல் நெஞ்சக் காரர்களாக இருந்தாலும் கண்ணில் கசிவு ஏற்படும்.

அரசு ஊழியரின் ஆசை மகன் கல்வியில் உயர்ந்து பெரிய பதவிக்கு அவன் போக வேண்டும் என்பது ஆனால் .மகனுக்கு சுத்தமாக கணக்கு வரவில்லை.பொதுவாக இன்றைய மாணவர்களில்பெரும்பாலோருக்கு கணக்கு வருவதில்லை.அல்சீப்ரா அவர்களுக்கு காப்ரா.வாய்பாடு வருவதில்லை அவர்களைப் போய் படி படி என்று வற்புறுத்தினால் என்ன நடக்கும்?மகனுக்கு விருப்பமான விளையாட்டை  தந்தை வெறுத்தால் என்ன நடக்கும்?தாயில்லாத பிள்ளை என செல்லம் கொடுத்து வளர்த்த ஒரு தந்தையின் வலியை போர் அடிக்காமல் காட்டுகிறார் பிரகாஷ்ராஜ்.இடையில் ஒரு தடம் புரண்ட பெண்ணின் கதையும் இருக்கிறது.

எவரும் குறை வைக்கவில்லை நடிப்பில்!
பிரகாஷ்ராஜ் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
சிறுவன் பக்கத்து வீட்டுப் பையனாக நம்மிடம் வந்து விடுகிறான்.
இதுவரை வந்த படங்களில் [ இந்த ஆண்டு ] டோனி மிகவும் உயர்வானவன்.

No comments:

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...