Friday, February 10, 2012

இதழுடன் இதழாட......! ! .

தை மாதக் குளிர் தரை எல்லாம் குளிரும் என்பர் !அதிகாலை குளிர் இதமாக இருக்கும்!
.இல்லாளை இன்னும் கொஞ்சம் இறுக்கிப் பிடிக்க சொல்லும்.! 
முன்னிரவில் நிகழ்ந்த முத்தப் பதிவுகளை நினைவு கூற.....!
எங்கிருந்தோ.....!
''இதழுடன் இதழாட ..நீ இளமையில் நடமாடு!நினைத்தால் போதும் வருவேன்.!
தடுத்தால் கூட தருவேன் ''
விடிந்தும் விடியாத அந்த இருட்டுக் காலைப் பொழுதில் எந்த எப்.எம்.மோ ஜானகியை பாட வைத்தது.
செவிகள் களவாடப் பட்டன.
மெய் மறந்தேன்.
''வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது!
வேகம் வந்த நேரம் இன்ப  இல்லம் கண்டது.
இனியொரு பிரிவேது?
அந்த நினைவுக்கு முடிவேது?''
கண்ணதாசனின் களவியல் வரிகள் களைத்து கிடந்த என்னை களைந்து கிடந்த  அவளிடம் மேலும் நெருங்க வைத்தது!
உறங்கியவளை முகம் பார்த்தேன்.முழு நிலவென தெரிந்தாள்!
பாட்டி வடை சுட்ட கதை அறிந்தேன்.
கண் மை களைந்து கன்னங்களில் கதை சொன்னது.
மேகம் விலகிய சிகரம் போல் ஆடை விலகிக் கிடந்தாள்!
அதுவும் அழகுதான்!
கவியரசரின் வரிகள் மீண்டும் செவிகளைத் தழுவியது!
''இரவும் பகலும் கலையே!
இருவர் நிலையும் சிலையே!'' 
அவளின் பொக்கிஷம் மீண்டும் களவாடப் பட்டது!






No comments:

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...