Monday, February 6, 2012

டைரக்டர் பாலாவும் சிவகுமாரும்....!

நான் மிக மிக நேசிப்பவர் நண்பர் சிவ குமார்.இப்படித்தான் வாழவேண்டும் என்கிற ஒழுங்குமுறையை வகுத்துக் கொண்டு வாழ்கிற உயர்ந்த மனிதர்.விரல் நுனியில் திரை உலக நிகழ்வுகளை கையில் வைத்திருப்பவர்.
ஒரு நாள் அவருடைய வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது'உங்களால் எப்படி கம்பனின் பாடல்களில் நூறு பாக்களை மனனம் செய்ய முடிந்தது,தடை இல்லாமல்,பிழை இல்லாமல் அவைகளை சொல்ல  முடிகிறதே 'என்று கேட்டேன் .
''கொஞ்சம் இருங்க''என்று சொல்லி வீட்டுக்குள் சென்று திரும்பியவர் கையில் ஒரு தாள் இருந்தது .
''படிங்க'' என்று நீட்டினார். 
வாங்கிப் பார்த்தேன்.படிக்க முடியவில்லை .எனது' பவர் கிளாசுக்குள்'அந்த எழுத்துகள் கோடுகளாகவே பதிந்தன.அவ்வளவு பொடிசு!!!
''என்ன எழுதி இருக்கீங்க?பூதக் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் பார்க்கவேண்டும் போலிருக்கு ''என்றதும் அந்த தாளை வாங்கி கட கடவென படித்தார் கண் கண்ணாடி இல்லாமல்!
ஆச்சரியமாக இருந்தது.
அவர் சொன்னார்,''ஒரு சின்ன தாளில் பொடி எழுத்துகளால் எழுதினால் நிறைய எழுத முடியும் .சின்ன தாள்  தானே  என்கிற எண்ணம் மனத்தில் பதிந்துபோய் விடுவதால் பூ ...இவ்வளவுதானே என்று மனனம் செய்துவிடலாம்.பெரிய தாளில் எழுதினால் இவ்வளவு பெரிய தாளில் இருப்பதை எப்படி மனப்பாடம் செய்வது என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கும்''என்று ரகசியத்தை சொன்னார்.
டைரக்டர் பாலா இவருக்கு செல்லப் பிள்ளை 
கல்யாணமே வேண்டாம் என்று கட்டை பிரம்மச்சாரியாக பாலா  வாழ்ந்த நேரம் .
''காலாகாலத்தில் கல்யாணத்தை பண்ணுப்பா,அது ஒரு அற்புதம்டா ராசா''என்று சிவகுமார் சொல்லி நச்சரிக்க  பாலாவும் பொண்ணு பார்க்க ஆரம்பித்தார்.
இனி பாலாவின் வாக்குமூலம்....!
''பொண்ணு பார்த்தாச்சு.சினிமாக்காரன்னவுடனே  அவங்க தயங்கினாங்க.அப்போ  பொண்ணு வீட்டுக்காரங் க கிட்ட ''உங்களுக்கு நல்லது எதுவுமே கண்ணில படாதா?சிவகுமாரனு ஒரு அப்பன் எனக்கு அங்க இருக்காரு.நான் எப்ப சினிமாவுக்கு போனேனோ அப்பவே என்னை தத்து எடுத்துக்கிட்டாரு.அவரு கிட்ட போங்க பேசுங்க.அதுக்கப்புறம் எனக்கு பொண்ணு குடுக்க தயங்க மாட்டீங்கன்னு சொன்னேன்.அதே மாதிரி சிவகுமார் சாரை பார்த்து பேசி சந்தோசமா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க''
சிவகுமார் மாதிரி ஒரு நல்லவரை சினிமாவில் பார்க்கமுடியாது .

1 comment:

Kannan said...

நல்ல நண்பர்கள் .,.,


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...