Thursday, February 9, 2012

உடலை வைத்து வாய்ப்பு ..நடிகை சோனியா நடிப்பு!

அண்மையில் வந்துள்ள படம் ஒரு நடிகையின் வாக்குமூலம்!
ஆந்திராவில் இருந்து வந்த அழகிய பெண்ணின் அம்மா மகளை நடிகை ஆக்குவதற்காகதன்னையும்இழக்கிறாள்.தனதுமகளையும்கெடுக்கிறாள்.
முதலில் கெடுப்பவன் இயக்குனர்.
அடுத்து காதலிப்பதாக சொல்லி கெடுப்பவன் நடிகன்.
இது அந்த நடிகையின் வாக்குமூலம்.
நடிகையாக நடித்திருப்பவர் சோனியா அகர்வால்.
''இது உண்மைக் கதையா?'' சோனியாவிடம் கேட்டோம்.
''இல்லை.இது ஒரு பிக்சன் .உண்மைக் கதை இல்லை'' என்றார்.
''படத்தில் நடப்பது மாதிரிதான் தமிழ் சினிமாவில் நடக்கிறதா?''
''அப்படிசொல்லமுடியாது.இதுகற்பனை.இயக்குனர்கதைசொன்னார்.பிடித்திருந்தது.நடித்தேன்''
''பிகினி,நீச்சல் உடை இதெல்லாம் கதைக்கு தேவை என்றால் நடிப்பீர்களா?''
''எனது உடல் வாகுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.இந்த படத்தில் கூட தேவை என்கிற அளவுக்குத்தான் டிரஸ் போட்டிருக்கிறேன்,உடலை திறந்து காட்டும் அளவுக்கு டிரஸ் போட  மாட்டேன்.''
''இணங்கினால்தான் நடிக்க வாய்ப்பு என்கிற நிலைமை சினிமாவில் இல்லவே இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?''
''எந்த துறையில்தான் ''அது''இல்லை?''என்று நம்மையே கேட்கிறார் சோனியா அகர்வால்.
''உங்களுக்கு பிடித்த கட்டழகு  நடிகர் யார்?''
பட்டென பதில் வருகிறது,''சூர்யா!''
''முதல் திருமணம் முறிந்து விட்டது.இப்போது யாராவது உங்களை மணம் செய்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்களா?''
''இல்லை.இன்னும் நான்கு வருடத்திற்கு கல்யாண பேச்சையே  எடுக்காதீர்கள்.ப்ளீஸ்.''என்றார் சோனியா!

1 comment:

Kannan said...

எல்லா நடிகைகளின் வாழ்கையை அலசினால் இப்படி தான் இருக்கும்..

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...