Thursday, February 2, 2012

கலைஞரும்....அம்மாவும்..!

தோழமைக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக தனது தேனிலவை முடித்துக் கொண்டதாக சொல்கிறார்கள்.
சிலரோ '' இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா'' என்கிறார்கள்.'குடித்துவிட்டு வருகிறார்கள் '' என்று சொல்ல''ஆமா ஊத்திக் கொடுத்தாங்க ''என்று மறு மொழி சொல்ல ,இப்படி மோதிக் கொண்டவர்கள் எப்படி கை குலுக்க முடிந்ததோ அதைப் போல மறுபடியும் கை குலுக்கிக் கொள்வார்கள் ''என்கிறார்கள்.
அரசியலில் தோல் தடித்து இருக்க வேண்டும்.
''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா ''என்கிற 'சகிப்புத் தன்மை'( !} வேண்டும். அப்படி இருந்தால்தான் எவ்வளவு கேவலம் வந்தாலும் அரசியலில் ஜெயிக்க முடியும்.
13 .05,2008  சட்டமன்ற கூட்டத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசியது நினைவுக்கு வருகிறது.
''எல்லோரும் தோழமையுடன் பழகினோம் என்கிற திருப்தியுடன் மறைய வேண்டும் என்பது என் நெஞ்சில் மலர்ந்து வருகிற மகத்தான ஆசை .கொஞ்சம் பிசிறு தட்டினால் கூட எப்படி  சங்கீதம் கெட்டுப் போகிறதோ ,கொஞ்சம் தாளம் தவறினால் எப்படி நடனம் பாழாகிறதோ அதைப் போல தோழமை உணர்வில் ,ஒற்றுமையில் சேதம் வந்துவிடக்கூடாது'' என்று பேசினார்.
''இரண்டாண்டு திமுக ஆட்சி தோல்வி'' என்றார் பா.ம.க.தலைவர் ராமதாஸ்.
ஆனால் இரண்டு பேரின் கட்சிகளும் உரசிக் கொள்ளாமல் அனுசரித்து சென்றன.
அதைப் போல தேமுதிகவும் அனுசரித்து தான் போகும்.ஆளும் கட்சியுடன் மோதுகிற மனப் பாங்கு தேர்தல் வரும்போதுதான் வலுப் பெறும்
மக்களுக்கு மறதி அதிகம்..
பஸ் கட்டண உயர்வு  பால் விலை உயர்வு ,மின்சார தடை எல்லாமே பழகிப் போய் விட்டது.இன்னும் நான்கு வருடங்கள் கழித்து பொது தேர்தலை சந்திக்கிற போது இவையெல்லாம் நினைவுக்கு வரப்போவதில்லை.
அப்போது அரசு ஏதாவது சலுகை வழங்கினால் அதுதான் மனதில் நிற்கும் ,தேர்தல் முடிவை நிர்ணயிக்கும்.
 மக்களின் பிரச்னைகளை தேமுதிக  அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பது கண்கூடு.திமுகவின் அணுகுமுறை மாறுமேயானால் அரசியலில் மாற்றங்கள் வரலாம்.
அம்மாவும் சாதாரணமானவர் அல்ல.அவரின் அரசியல் பார்வை இப்போது கூர்மையுடன் இருக்கிறது.வலிமையும் அதிகம்.அம்மாவை அரசியல் ரீதியாக  
சந்திக்கிற சக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களே இனி பிரதான கட்சியாக இருக்க முடியும்.


2 comments:

aanthaiyar said...

அம்மாவே நமஹ என்று மட்டுன் சொல்லுங்கண்ணே,, வ்ளவள்ன்னு?

Kannan said...

எல்லாம் அரசியல் .,.,.,

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள். "என்ன செஞ்சிருவாய்ங்க..பார...