Friday, February 10, 2012

''என்னிடம் சூப்பர் ஸ்டார் சொன்னது ''-----சரத்.

சட்டமன்ற உறுப்பினரும் சூப்பர் ஹீரோவுமான சரத்குமார் வழக்கம் போல் மிக  மிக மகிழ்ச்சியுடன் பேசினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'கோச்சடையான்'படத்தில் நடிப்பதை உறுதி செய்த அவர் முன்னர் நடந்த கலந்துரையாடலையும் நினைவு படுத்தினார்.
''சிலஆண்டுகளுக்குமுன்னர்நானும்அவரும்பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது 
அவர் ஒரு கதையை என்னிடம் சொல்லி நாம் ரெண்டு பேரும் நடிச்சா நல்லா இருக்கும்ல என்று கேட்டார்.இன்றும் அவர் சொன்ன கதை சீன் பை சீன் நினைவில் இருக்கு.அற்புதமான கதை!உலக புகழ் பெற்ற அவருடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது.''என்றார்.

''ரெண்டு வருடமா பத்திரிகையாளர்களை சந்திக்கவே இல்லையே ஏன்?''
''மலையாளப் படங்களில் நடிக்க கேரளா போய் விட்டதால் பார்க்க முடியவில்லை.எனது திரை வாழ்வில் மறக்க முடியாத படமாகி இருக்கிறது ' பழசிராஜா;அருமையான கேரக்டர் .இதற்காக மம்மூக்காவுக்கு நன்றி சொல்லவேண்டும்.எனக்கு எழுச்சியை ஏற்படுத்திய படம். எனக்குள் உறங்கிக் கிடந்த கலை உணர்வை உலகுக்கு சொன்ன படம்.'அச்சண்ட ஆண் மக்கள் 'அடுத்து வரவிருக்கிறது.ஹிஸ்டரி தமிழ் மலையாளம் இரு மொழிகளிலும் வரப் போகிறது.'ட்ராபிக் 'என்கிற மலையாள படத்தை தமிழில் ராதிகா சரத்குமாரும் மலையாள தயாரிப்பாளரும் சேர்ந்து எடுக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக தேடி வராத தயாரிப்பாளர்கள் இப்போது என்னை தேடி வருகிறார்கள்.காரணம் புரியவில்லை''என்று சிரித்தார்.

''மகள் வரலட்சுமி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''நான் சொன்னால் காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்பீர்கள்!ஆனால் அவர் அற்புதமான நடிகையாக வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது வட இந்திய நடிகரான அனுபம்கெர் மனம் விட்டு பாராட்டினார் .போடா போடி படத்தில் அவர் ஆடிய நடன காட்சியைப் பார்த்து அசந்து விட்டேன்.''
''அடுத்து வரக்கூடிய படங்கள்..?''
''விடியல் விரைவில் வரவிருக்கிறது செல்வராஜ் இயக்கிய பீரியட் படம்.அம்மா  கிரியேசன் சிவாவுக்காக ஒரு படம் பண்ணவிருக்கிறேன்'' என்றார்..

No comments:

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...