Saturday, February 25, 2012

நடிகனை காதலித்து தற்கொலை!

நடிகைகள் பெரும்பாலும் நடிகர்களின் வலையில் விழுவது உண்மையான  காதலினால் இல்லை!
பெற்ற தாயே காரணமாக இருக்கலாம் .அநேக நடிகையர் தற்கொலைக்கு  இவர்களே காரணமாக இருந்தனர் என்பது வெளிவராத உண்மை!
இன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சாகும் முடிவுக்கு வருகிறார்கள்.
சிலருக்கு காதலில் தோல்வி.
இப்போது நான் சொல்லப் போவது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கதையை!
பெரிய இடத்துப் பிள்ளை.நல்ல குடும்பம்.சரி!
நல்ல குடும்பத்துப் பையனை நடிகைக்கு மணம் செய்துவைக்க விரும்புவார்களா?
நடிகனால் குடும்பத்தை எதிர்த்து வெளியில் வரமுடியுமா?
காதலிக்கும் போது இதைப் பற்றி யோசிக்க மாட்டார்களா?
யோசிப்பார்கள்.ஆனால் காதலன் சொல்லும் பொய் மொழிகளை நம்பி பின்னர்  நாசமாகிப் போகிறார்கள்.
உலகத்துக்கு தெரிந்து விட்ட பிறகு நம்மை முழுமையான மனதுடன் எவன் திருமணம் செய்வான் என்கிற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம்.
அன்று பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ஆலோசனை சொன்னார்.''வேண்டாம். அவரை மறந்து விடு! ஏமாற்றம்தான் மிஞ்சும்''என்று சொன்னார்.அவர்இன்றும் இருக்கிறார்.மிகவும் ஒழுக்கம் நிறைந்த நடிகர்.கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.
அவர் சொன்ன அறிவுரை ஏற்கப் படவில்லை.
உணர்வுகளின் உந்துதலால் இழக்கக் கூடாதை இழந்தார் நடிகை.
நம்பிக்கைதான்!
இதன் பிறகு அவர்களின் காதல் வலிமை பெற்றுவிட்டதாகவே அந்த பேதை நம்பினாள்!
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது எதெதுக்கு சரியாகும் என்பதை இன்றைக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை!
நடிகையின் காதல் மறுக்கப் பட்டது.
அந்த நடிகரின் பெற்றோர்கள் கடுமையாக கண்டிக்கவே காதலனால் அவர்களை  எதிர்க்க முடியவில்லை,
முடிவு?
படாபட்டென்று தற்கொலை செய்து கொண்டார்!
சரி இந்தவிசயத்தை இப்போது எதற்காக சொல்கிறீர்கள் என கேட்கலாம்.
ஒரு பெண்ணின் தற்கொலை செய்தியை படித்த பிறகு ஏறத்தாழ அதே போல் இருந்ததால் சொல்கிறேன்.

3 comments:

சே.கு. said...

மணியன் சார்,

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருடைய ஆலோசனையை ஏற்பது என்பது எல்லாரும் செய்துவிடக்கூடியது அல்ல. அந்த பதிவை பதிவேற்றியதன் மூலம் உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்த ஒரு வலி காணாமல் போயிருக்கும். ஆனால் அது பிழை என்று தெரிந்து எடுத்துவிட்டதன்மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும். நன்றி சார். யூ ஆர் அ ஜென்டில்மேன்

மணியன் said...

அன்புடையீர்,நான் ஒரு பத்திரிகையாளன்.என்னை மறந்து உண்மைகளை பதிவு செய்பவன்தான் .ஆனால் பிறரின் வலி உணரப்பட்டால் அதற்கு தலை சாய்க்கவேண்டும் தவறல்ல.சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி,என்றும் எனக்கு துணையாக இருங்கள்.நான் குமுதம் வார இதழில் பனி புரிகிறேன்.

Kannan said...

சினி வாழ்க்கை இப்படி தான் சார்.........



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.க்கள்.

மிரளுகிறவனை மயங்கி விழும் வரை வதைப்பதுதானே அரசியலில் முக்கிய பாடம்.! கடலில் விழுந்தவனுக்கு கட்டையை கொடுக்காமல் அதை காட்டி காட்டி காரியம் சா...