Thursday, February 2, 2012

காதல் என்பது...உடல் சுகமா ?

எனது நண்பன் மிகவும் சீரியசாக வாதாடினான்.''என்னடா பெரிய காதல் ,உடல் சுகம் வேணும்கிறதுக்கு ரூட் போடுறது தானே அது? மனசை படிக்கிறன்னு சொல்லிட்டு மாரை அளவெடுக்கிரானுங்க ,யோக்கியமானவன் எவனும் இல்லடா?'' என்று வார்த்தைகளால் அறைந்தான்.

''அம்பிகாபதி கூட அமராவதியின் அங்கம் பற்றி பாடித்தானே அரசனிடம் மாட்டிக் கொண்டான்?
கண்கள் சந்திப்பது உடல் சார்ந்துதானே இருக்கிறது? கருப்பாக இருந்தாலும் 'எடுப்பாக' இருக்காடா என்றுதானே நம்மில் பலர் சொல்கிறார்கள்!
அழகா இருக்கணும்,பணக்காரியா இருக்கணும்,கும்முன்னு இருக்கணும் ...இப்படிதானே ஆண்கள் நினைக்கிறாங்க..கூட்டம் கூத்துன்னா ஆண்களின் பார்வை 'அங்க'தானேடா போகுது?ஒருத்தியை காதலிக்கிறதா சொல்றவன் மத்த பெண்களை 'அளவெடுத்து'தானே பாக்கிறான்!எங்கடா காதல் இருக்கு?''என்று கேட்டான்.

அவனுக்கு காதலைப் பற்றி தெரியவில்லை!
சராசரி ஆண் என்ன நினைக்கிறானோ ,அதைத்தான் அவனும் சொல்கிறான்.
சரி,காதல்னா என்ன?
நானே கேட்டுக்கொண்டேன்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் கட்டிக்கிறது காதல் .
சரி ,இந்த புரிதல்  என்பதற்கு என்ன அர்த்தம்?
ரெண்டு பெரும் கல்யாணம்  பண்ணிக்கிட்டா சந்தோசமா வாழமுடியுமா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் புரிதல் .இது தான் காதல் .பெற்றோர்  உதவி இல்லாமல் நாமே பெண்ணைத் தேடிக் கொள்வது காதல்.
எனக்கு அவளை பிடிச்சிருக்கு.அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு.பிறகென்ன ...அவ சிவப்பா இருக்கலாம் உதடு கவர்ச்சியா இருக்கலாம் உடல் கிண்ணுனு இருக்கலாம் எதோ ஒரு அம்சம் எனக்கு பிடிச்சிருக்கலாம்,அவளுக்கு என் மீசை பிடிச்சிருக்கலாம் என் ஸ்டைல் பிடிச்சிருக்கலாம் என்னில் எதோ ஒன்னு பிடிச்சிருக்கு அதான் அவ என்னை விரும்புறா! இந்த விரும்புதல்தான் காதல்னு நான் சொல்றேன்!
இரண்டு பேரும் பைக்கில் சுத்துறது ,சினிமாவுக்கு போறது,பீச்ல அலையிறது என்பதெல்லாம் ஹார்மோனின் உந்துதல் என்பது எனது கருத்து.இப்படி சுத்துறது காதல் அல்ல .அது பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவும்..

இப்படி சுத்துகிறவர்கள்தான் உடல் சுகம் தேடுகிறார்கள்.''இந்த வயசில அனுபவிக்காம எந்த வயசில அனுபவிக்கிறதுன்னு'' தவறான  எண்ணங்களினால் காதலை கொச்சைப் படுத்துகிறார்கள் .அவர்களின் 'விருப்பம்' நிறைவேறாமல் போகும்போது காதல் தோற்று விட்டதாக சொல்கிறார்கள்.

1 comment:

Kannan said...

சரியாய் சொன்னீர்கள்....வயதின் விளையாட்டு...

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

வேட்டியை மடிச்சுக் கட்டுனா எச்.ராஜா ரவுடியாம்....!

              இந்தியா எங்கே போயிட்டிருக்குன்னு தெரியல. ஆட்சி அதிகாரம் நல்லவங்க கையில்தான் இருக்காங்கிறது தெரியல. எலியை கவ்வும் பூனை  அதை கொ...