Thursday, March 15, 2012

சங்கரன் கோவிலில் 'டிபாசிட்' காலி!

வான் வேடிக்கைகள்.!
நட்சத்திரங்கள் சர..சர வென விழுகின்றன!
வண்ண வண்ண பூக்கள் மின்னி மின்னி நிலம் நோக்கி வருகின்றன!
சிவகாசியின் மொத்த பட்டாஸ்களும் அங்குதான் ஊழிக் கூத்து ஆடுவதைப் போல் பூமி அதிர்கிறது.
மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் மிதக்கிறார்கள்.
''விடிவு காலம் பிறந்து விட்டதென ''ஆலயங்களில் சர்க்கரைப் பொங்கல் வைக்கிறார்கள்!
ஒட்டு மொத்த ஊடகத்தினரும் ''எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?''என மக்களின்  வாய்க்குள் மைக்கை திணித்து கேட்காத குறையாக துருவித் துருவி கேட்கிறார்கள்.
மைய்ய அரசின் அமைச்சர் ப.சிதம்பரம் பறந்து வந்திருக்கிறார்.
மதுரை அரசினர் விடுதியில் பலத்த காவல்.
முதல்வர் ஜெயலலிதா தனி அறையில்!
பக்கத்திலிருக்கும் பாண்டியன் ஹோட்டலில் கலைஞர்!
வைகோ சற்று தள்ளி இருக்கும் தமிழ்நாடு ஹோட்டலில்!
''இப்போ யாரையும் அண்ணே பாக்கிற மாதிரி இல்ல.ஒபாமாவுடன் பேசிட்டிருக்கார். அதனால தலைவர்களை மத்தியானம் தான் பாப்பாரு.தகவல் சொல்லிடுங்க" என அங்கிருந்த அதிமுக .திமுக ,காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளிடம் சொல்கிறார் பார்த்தசாரதி!
இவர்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயலாளர்.
என்ன இது,இப்படியொரு மாற்றம் என்கிறீர்களா?
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக வரலாறு காணாத வகையில்  வெற்றி பெற்று போட்டியிட்ட அத்தனை கட்சிகளின் டிபாசிட் தொகையையும் காலி பண்ணி விட்டதே!
அதனால்தான் இப்படியொரு மாற்றம்!
ஏங்க,அதிகாலையில் கனா கண்டா பலிக்கும்பாய்ங் களே !இந்த மாதிரி இன்னிக்கி கண்டேனுங்க!!


3 comments:

Arif .A said...

டிபாசிட்' காலி!"
யாருக்கு சார் மக்களுக்கா !

Arif .A said...

"சங்கரன் கோவிலில் 'டிபாசிட்' காலி!"
யாருக்கு சார் மக்களுக்கா.
சார் அப்படியே கமாண்ட் சரி பார்ப்பை நீகவும் ரொம்ம்ம்ப எரிச்சலாக இருக்கிறது.

Kannan said...

ஆடு நனையுதே என்று ஓநாய்கள் அழுகின்றன............



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.க்கள்.

மிரளுகிறவனை மயங்கி விழும் வரை வதைப்பதுதானே அரசியலில் முக்கிய பாடம்.! கடலில் விழுந்தவனுக்கு கட்டையை கொடுக்காமல் அதை காட்டி காட்டி காரியம் சா...