Wednesday, September 19, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் ......?

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் ......?
தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது!ஒரு கதை அல்லது நாவலில் இடையில் சில பக்கம் கிழிக்கப் பட்டிருந்தால் ....
அந்த பக்கத்தில் என்ன இருந்திருக்கும் என்கிற அறிகிற ஆர்வம அலையடிக்கும்.
அதிலும் படித்த பக்கங்கள் விறு விறு வென இருந்தால் சொல்லவே தேவை இல்லை ..கிழிந்த ,அல்லது காணாமல் போன பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்கிற அரிப்பில் சொரிந்து மண்டை சொட்டையாகிவிடும்.
"நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"திரைப் படத்தைப் பொருத்தவரை அது வித்தியாசமான படம்.வரவேற்கப் பட வேண்டிய படம்..
பாடைக்கம்பு மாதிரி உருவத்தை வைத்துக் கொண்டு ஏழெட்டுப் பேரை அடித்து துவைத்து நார், நாராய் கிழித்தெரிகிற பொய்மை  இல்லை.!
காதல் என்கிற பெயரில் யதார்த்தம் எகிறும் காமம் இல்லை.தமிழ்ச்சினிமாவின் சாபக் கேடாகிவிட்ட வாழ்ந்தாருக்கு மாரடிக்கும்  வசனம் இல்லை.
காமடி என்கிற பெயரில் நக்கலும் நையாண்டியும் இழைந்தோடும் இரட்டை அர்த்த அசிங்கம் இல்லை.
எனக்கு இந்த படத்தில் பிடித்த முக்கியமான அம்சம் "நட்பு"
நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.ஆபத்தான கால கட்டத்திலும் நண்பனை விட்டு ஓடாமல் அவனை எப்படியெல்லாம் காப்பாற்ற பார்க்கிறார்கள் தெரியுமா?
விபத்தினால் விளைகிற மறதி நோய் நமக்கு புதிதல்ல.
இயக்குநர் பாலாஜி பரணிதரனின் முயற்சியை வரவேற்க வேண்டும்.
கதாபாத்திரங்களின் பயமே அங்கங்கே காமடியாக விரிகிறது.
வாய் விட்டு சிரிக்க முடிகிறது.
என்னைப் போன்ற பாமரனுக்கு இந்த படம் பிடிக்கும்.
பின் பாதியில் படக் குழுவினரும் மற்ற படைப்பாளிகளைப் போலவே தவறுகள் செய்திருக்கிறார்கள்.
கதாநாயகியை காட்டாமல் படத்தின் முக்கால் பகுதியை கொண்டு
 சென்றிரு க்கிற இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள்.
இவர்களின் துணிச்சல் தமிழ்நாட்டில் எடுபடாது.யதார்த்தம் விரும்புகிற கேரளம் இவர்களுக்கு கை கொடுக்கலாம்.

1 comment:

vignesraj said...

"சேட்டா... நிங்கள் வல்லியதாயிட்டு ஒரு மலையாளப் பத்ரத்தில் ஜோலி ஆயிட்டு இருக்கணும்.. சரியோ.... ."


தேவி மணியண்ணன் ஜோதிடராக அல்லது குறி சொல்லும் சாமியாடியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.. நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் அவருக்கு பிடித்திருக்கிறதாம். ஆனால் தமிழ் நாட்டில் எடுபடாதாம்..கேரளாவில் எடுபடுமாம். பத்திரிகையாளனின் வேலை படம் நல்லா இருக்கு -இல்லை என்று சொல்வதுதானே தவிர அது ஓடுமா ஓடாதா என்று குறி சொல்வதல்ல. இன்னும் எத்தனை காலத்துக்கு பத்திரிகையாளர்கள் செக்கு மாட்டு விமர்சனங்களையே எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்களோ..அது சரி மணியண்ணே, உங்கள் கணிப்பில் தமிழ் ஜனங்கள் மண்டூகங்கள்..மலையாளிகள் அதி மேதாவிகள்..என்றால் "சேட்டா... நிங்கள் வல்லியதாயிட்டு ஒரு மலையாளப் பத்ரத்தில் ஜோலி ஆயிட்டு இருக்கணும்.. சரியோ.... ."

கோமாளி தேசத்து ராசாக்கள் .3

                   "என்ன ஆளுய்யா நீ..ஜெயமோகன் என்ன எழுதிருக்காருங்கிறத சொல்லாமல் எஸ்கேப் ஆயிட்டியே?"ன்னு கேட்பிங்க என்பது எ...