Wednesday, September 7, 2016

அமலா பால் மணவிலக்கு: யார் காரணம்?

காலையில் திருமணம். மாலையில் வரவேற்பு.பின்னர் முதல் இரவு.
விடிந்தால் நீ யாரோ நான் யாரோ ...பிடி  விவாகரத்து..!

உலகம் இவ்வளவு வேகமாக  ஓடும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

காதல் என்பது வெறும் கவர்ச்சிதான் .கசக்கி எறியவேண்டிய வெற்று காகிதம்தான் என்பது இயல்பாகிவிட்டது.

ஒருதலையாக  காதலித்தவன் கொடுவாள் ஏந்தவும் ,அமில வீச்சு நடத்தவும்  தயக்கம் காட்டவில்லை. நாலு ஜனம் கூடுகிற இடம் என்றும் பார்ப்பதில்லை . ஆனால் நாலு  சுவர்க்கு தெரியாமல் காதலிப்பவர்கள் நாடறிய தாலி கட்டிக்கொண்டு  நாலே நாளில் வாழ்ந்து முடித்து  பிடி விவாகரத்து  என கோர்ட்டு  படி ஏறி விடுகிறார்கள்.மச்சம் பார்த்த மன நிறைவுடன்  முடிந்து விடுகிறது, காதல்  வாழ்க்கை!

இப்படித்தான்  ஆகிவிட்டது இயக்குநர் ஏஎல்.விஜய் -நடிகை  அமலாபாலின் காதல் வாழ்க்கை.

இதற்கு  யார் காரணமாக இருக்க முடியும்?

"நான் எடுக்கக்கூடிய  முடிவுகளுக்கு நிபந்தனை இல்லாமல்  ஆதரவு கொடுப்பவர்  எனது  சகோதரர் அபிஜித்பால்." என்று  அழுத்தம் திருத்தமுடன்  சொல்லியிருப்பவர்  அமலாவேதான்!

ஆக அமலாவின் விவாகரத்துக்கு பின்புலமாக  அபிஜித்பாலாக இருப்பாரோ?

சந்தேகம் வருவது  இயற்கைதான்!

"ஒரு பெண்  அவளது  தொழிலையும்  ஆசைகளையும்  எதற்காகவும்  தியாகம்  செய்துவிடமுடியாது, இந்த உலகில்  யாருக்காக  எனது ஆசைகளை கைவிடவேண்டும்.மகிழ்ச்சி  எனக்குள் இருக்கிறது. மற்றவர்களிடம் ஏன் தேட  வேண்டும்?" என  கேட்டிருக்கிறார்  அமலாபால்!

அவரது  வாதத்திலும்  நியாயம் இருக்கவே  செய்கிறது,

இவ்வளவு தெளிவாக  இப்போது சொல்கிறவர்  அதை திருமணத்துக்கு  முன்னரே  யோசித்திருக்கலாம் அல்லவா?

4 comments:

Unknown said...

அவரோட Personal life பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கவலைப்பட்டாரா? Hits வேண்டும் என்றால் இப்படி எல்லாமா எழுதுவது?

Unknown said...

அவரோட Personal life பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கவலைப்பட்டாரா? Hits வேண்டும் என்றால் இப்படி எல்லாமா எழுதுவது?

Bagawanjee KA said...

#"அமலா பால் மணவிலக்கு: யார் காரணம்?"#
சத்தியமா நான் இல்லைங்கோ :)

Anbazhagan Ramalingam said...

ஹா ஹா ஹா

ரஜினியின் பேச்சும் தலைவர்களின் ரீ-ஆக்சனும்!

"நாட்டில் நிர்வாகம் சீர் கெட்டு இருக்கு."  என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின்  பேச்சில் ஒரு முக்கியமான பாயிண்ட்.  பொதுவாக தமிழ்நாட...