Saturday, November 5, 2016

பசங்களை சீக்கிரமே தூங்க வைக்கவா, அத்தான்!

 மருமகள்கள் மீது பொதுவாக மாமியார்களுக்கு ஆதங்கம் இருக்கும்.

"வரும்போது சேலை கட்டித்தான் வந்தா. அப்புறம்தான் குழாயை மாட்டிக்கிட்டு  மாராப்பு கூட இல்லாம ஜோடி போட்டுக்கிட்டு போறா. பெத்த மகனும் பித்து பிடிச்சுப்போயி பின்னாடியே திரியிறான்.என்ன சொக்குப்பொடி  போட்டாளோ...மருந்து மாயம் வச்சாளோ"என்று  சம காலத்து கிழவிகளுடன் புலம்பிக் கொள்வார்கள்.

அவர்களும் ஒரு காலத்து குமரிகள்தான், வாக்கப்பட்டு போன இடத்தில் புருஷனை மந்திரித்துவிட்ட கோழியாக மாற்றியவர்கள்தான் என்பதை  மறந்து பேசுவார்கள்.

அதெல்லாம் கிடக்கட்டும். இது எஸ்.எம்.எஸ். காலம் .அந்தரங்கம் கைக்குள்  அடங்கிவிடுகிற நவீன யுகம்.

கணவனை  சதா சர்வ காலமும் மனைவியின் நினைவாக வைத்துக் கொள்வதற்கு சில எஸ்.எம்.எஸ்.களை இங்கு தருகிறேன்.

சமத்து மனைவிகள் பயன்படுத்திக் கொள்வார்களாக.

* 'நீங்க எனக்கு ரொ...ம்....ப...வு....ம் வேணும்  ! இப்பவே!"

*"நேற்று நைட் அமேசிங்!"

*"இன்னைக்கு பசங்களை சீக்கிரமே தூங்க வைச்சிடவா?"

*"நீங்க எவ்ளோ அழகு தெரியுமா...அசத்துறிங்க அத்தான்!"

*"என் கனவுகளின் நாயகன்தான் நீங்க!"

*"உங்களை பார்க்க பார்க்க பெருமையா இருக்கு மச்சான்!"

* டே...ராஸ்கல் .இன்னிக்கி நைட்டும் 'அது" வேணுமாடா! மல்லிகை பூ வாங்கிட்டு வாடா!"

"மாப்ள...பகல் கனவு பலிக்காதுன்னு சொல்வாங்க. அது உண்மையா இல்லையா என்பதை இப்பவே பார்த்துடலாம்.பெர்மிஷன் போட்டுட்டு வா"

* 'நைட்ல மட்டும் நீ எனக்கு கைக் குழந்தை!"

4 comments:

Anonymous said...

nallathan elutharenga.....but why no body in the tea shop.....


seshan

Dan Melbourne said...

simply beautiful.. nicely crafted. I like your language flow

நான் மானுடன் said...

//கணவனை சதா சர்வ காலமும் மனைவியின் நினைவாக வைத்துக் கொள்வதற்கு சில எஸ்.எம்.எஸ்.களை இங்கு தருகிறேன்//

மனைவியை சதா சர்வ காலமும் கணவனின் நினைவாக வைத்துக்கொள்வதற்கும் ‘டிப்ஸ்’ கொடுங்க பாஸ்.

மணியன் said...

டீ நல்லாத்தான் இருக்குன்னு சொல்றீங்க.அடிக்கடி கடைக்கு வாங்க பாஸ் .உங்களை பார்த்தாவது இன்னும் நல்லவங்க நாலு பேரு வருவாங்கல்ல!

"நிர்வாணமாவதைப் போல உணர்கிறேன்"-தீபிகா

      இதுதான் காதலா.....தெரியவில்லை!       பாலிவுட் ரன்வீரும் தீபிகா படுகோனும் 'பத்மாவதி' படத்தில் நடித்திருக்கிறார்கள். முகலாய மன...