Saturday, November 5, 2016

கடவுளின் ஆசிரமத்தில் காம விளையாட்டு!

'கோவில் கூடாது என்பதல்ல.அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான்" என பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் வசனம் எழுதி இருப்பார்.

வசனத்தை மக்கள் மறந்துபோனாலும் நாட்டு நிகழ்வுகள் அதை அவ்வப்போது நினைவூட்டத் தவறியதில்லை.

காஞ்சிபுரத்தில் கருவறையிலேயே அர்ச்சகன் ஒருவன்ஒரு பெண்ணுடன்  உறவு  கொண்டதை கைபேசியில் படம் பிடித்து உலகத்துக்கு காட்டவில்லையா?

பிருந்தாவனத்தில் இருக்கிற 'ராஷ்பிகாரி தர்ம அறக்கட்டளைக்கு சொந்தமான ஆசிரமத்துக்கு கணவனுடன் சென்றிருக்கிறார் ஒரு பெண்.

விபின் மகராஜின் தரிசனம் வேண்டி சென்றவர்களை மடத்தின் தலைவர் மடக்கி அந்த பெண்ணின் கணவரை மார்க்கெட்டில்  சில பொருள்களை வாங்கி வரும்படி அனுப்பி வைத்துவிட்டு பெண்ணை மட்டும் தனி அறைக்கு கூட்டிச்சென்று வன்புணர்வு செய்திருக்கிறார். மடத்தின் தலைவர் ஆயிற்றே  அவரை எப்படி 'ன்' போட்டு சொல்லலாமா என சிலர் கோபித்துக் கொள்வர் அதனால் இந்த மரியாதை!

காமத்தை தனித்துக் கொள்ளும் இடமாக அந்த புனித மடத்தை பயன்படுத்திக்  கொண்டது இது எத்தனாவது தடவையோ?

யார் அறிவார்?

கணவன் வந்ததும் அமைதியாக வீடு திரும்பிய அந்த பெண்  காமக்கொடுமையை சொல்லி அழுதிருக்கிறார். போலீசில் புகார் செய்யப்படிருக்கிறது. போலீசார் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

கடமையை காவல்துறை செய்து முடிக்குமா,அல்லது மத காப்பாளர்களின்  வற்புறுத்தலுக்கு பணிந்து எச்சரிக்கையுடன் அனுப்பிவிடுமா?

இனிமேல்தான் தெரியும்!

No comments:

கவர்ச்சியின் உச்சமே ஆமி ஜாக்சன்!

பெண்ணின்  முகம் பார்த்து பேசுகிறவர்களும்  கள்ளத்தனமாக  ரசிப்பது  கண்களை இல்லை.! மேடு பள்ளங்களை மேய்வதும்  ஒரு வகையில் ரசனைதான். படைப்பின்...