Monday, August 7, 2017

அதிமுகவை கை கழுவுகிறாரா தினகரன்?

" தீய சக்திகளிடம் இருந்து அதிமுக.காப்பாற்றப்படும்" என்று  எந்த நேரத்தில்  சிறையில் இருக்கிற சசிகலா சொன்னாரோ ..அன்றே ஆரம்பமாகி விட்டது  ஏழரை.!

தீய சக்திகள்னு சொன்னது ஓபிஎஸ்.சையா, அல்லது எடப்பாடி அணியையா  என்கிற சந்தேகம் வந்தாகணும். ஆனால்  இந்த இரண்டு  அணியையும்  நீக்கிவிட்டு  பார்த்தால்  அந்த கட்சியில் மிச்சம் இருப்பது  மன்னார்குடி  உறவுகள் மட்டும்தான்! அந்த இரு அணியினரும்  சசி-அண்ட் -தினகரன்  கம்பெனியை  கழற்றி விட்டுத்தான் கட்சியை நடத்த விரும்புகிறார்கள். அவர்களிடம்தான் பெரும்பான்மையான  எம்.எல்.ஏக்கள்  இருக்கிறார்கள். அவர்களை தீய சக்தி என சொல்லிவிட்டு  இரட்டை இலையை  சசி  பெற முடியாது.

சசி குறிப்பிடுவது  பிஜேபியைத்தான் என்பதற்கு  ஜோதிடம் பார்க்க வேண்டியதில்லை. பிஜேபியின்  ஆதிக்கத்தில்தான் எடப்பாடி இருந்துவருகிறார் என்கிறார்கள். அந்த கட்சியினால்தான்  தங்களுடன்  எடப்பாடியும்  ஓபிஎஸ்.சும் ஒத்து வரவில்லை .அதனால்  தங்கள்  உறவுகள்  மத்தியில் இருக்கிற  சண்டை சச்சரவுகள் அகல வேண்டும் என்று சசி  விரும்பியதால் திவாகரன்-தினகரன்  சமரசமானார்கள்.  ஆனால்  எடப்பாடி  இணங்குவதாக இல்லை. இதனால்  தினகரன்  புதிய பொறுப்புகளை  சிலருக்கு வழங்கினார்கள். சில எம்.எல்.ஏக்கள் பொங்கினார்கள். பொங்கிய பாலில்  தண்ணீரை தெளித்ததும் அடங்குவதைப்போல  எம்.எல்.ஏக்களையும்  அடக்க தற்போது  தீந்தமிழன் தினகரன் பேரவை  என்கிற  புதிய  அமைப்பு  உருவாகி இருக்கிறது.

நீங்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் தீபா  இவர்களினால் அப்செட் ஆகிவிட்டீர்களா , ஒரு  மிஸ்டு கால் கொடுங்க. தினகரன் பேரவை  அரவணைத்துக்கொள்ளும் .திராவிட கலாசாரத்தை ஆரிய கலாச்சாரத்துக்கு  காவு கொடுக்க மாட்டோம் என்கிற ரீதியில் திராவிட தலைவராக தினகரனை  அறிவித்திருக்கிறார்கள். அதிமுகவில்  இத்தகைய பேரவைகளை உருவாக்குவதற்கு  அவர்களின்  சட்டம்  அனுமதிக்குமா?

  எம்.ஜி.ஆர்.மன்றங்கள்தான் பின்னர் பெரும் சக்தியாக மாறி  அதிமுக  என்கிற  மிகப்பெரிய சக்தியாக உரு பெற்றது. ஆட்சியையும் பிடித்தது. அதைப்போல  தீந்தமிழன் தினகரன் பேரவை  யும் உருப்பெற்று  ஆட்சியைப்பிடிக்குமா ? அப்படியானால் அதிமுகவை  தினகரன்  கைகழுவுவாரா ....அட போங்கய்யா! காமடி பண்ணாதிங்க என்று சொல்வதும்  காதில் விழுகிறது.

No comments:

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,                வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர...