''என்னங்க இது, 'ப்'இல்லாம தமிழ் படம்னு தலைப்பு இருக்கே,தப்பாச்சே '' என்று கேட்டபோது மொத்த யூனிட்டும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொண்டது.
இயக்குனர் கேட்டார்,''தப்பான தலைப்புன்னு எதை வச்சு சொல்றிங்க ''
''தமிழ்ப்படம்னு இருக்கணும் .'ப்' இல்லாம தலைப்பு இருக்கு''
''தமிழ் படத்தை பத்தி சொல்ற கதை. அதனால 'ப்' வேணாம்னு ......''
இடை மறித்தேன். ''தயாரிப்பாளரின் தாத்தா கலைஞர் சிறந்த தமிழ் அறிஞர் .வாழ்த்துக்கள்னு வச்ச பெயரை தப்புன்னு சொல்லி வாழ்த்துகள்னு சரியாக திருத்தம் சொன்னவர். செம்மொழி மாநாடு நடக்க இருக்கிற இந்த நேரத்தில அவரின் குடும்பத்திலிருந்து வரக்கூடிய ஒரு தயாரிப்பு பிழையான தலைப்புடன் வரலாமா?''என்றேன்.
அவர்களோ 'தமிழ்படம்' தலைப்பே சரி எனச்சொல்லி சபையை கலைத்தனர்.
தொடர்ந்து வந்த விளம்பரங்களில் 'ப்' இல்லாமலேயே பெயர் இருந்தது. ஒருநாள் கலைஞர் தன்னைப்போல் தனது வாரிசுகளும் தமிழ்ப்பற்றுடன் இருக்கவேண்டும் எனப்பகிரங்கமாகப் பேசிவிட்டார்.
அவரது ஆதங்கம் நியாயமானது. அவருக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலுக்கு வரக் கூடியவர்கள் கலைஞரைப் போல் தமிழில் வல்லவராக இருப்பார்களா ......?தெரியவில்லை.
வெற்றிடம்தான் தெரிகிறது.
அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ்ப்புலமையில் கலைஞருக்கு இணையாக ஒரு தலைவரோ,தலைவியோ தெரியவில்லை.
சரி ,அது கிடக்கட்டும் .நாம் படத்தின் தலைப்பு மாறியது எப்படி என்பதைப் பார்ப்போம்.
கலைஞரின் பேச்சுக்குப் பிறகு படத்தின் தலைப்பு பிழையாக இருப்பதை சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.. அதன்பின்னரே 'தமிழ்ப்படம்' என்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள்.
செவ்வாய், 26 ஜனவரி, 2010
திங்கள், 25 ஜனவரி, 2010
பாலாவும் பொன்னாடைகளும்....!
விழாக்களில் பொன்னாடைகள் போர்த்துவது என்பது எழுதப்படாத சட்டமாகி இருக்கிறது. பூ மாலைகள் போட்டால் உதிர்ந்து விடும் ,அல்லது வாடி விடும்.ஆகவே பொன்னாடைகள் போடுவது வழக்கமாகி விட்டது என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தவரையில் காங்கிரஸ் தலைவர் படிக்காத மேதை காமராஜர் மலர் மாலை மரியாதைகளை ஏற்பதில்லை.கதர் நூல்சிட்டம் ,கதர் துண்டுகள் இப்படி கதர் வகையறாக்களையே ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார். அவைகளை பாலமந்திருக்கு கொடுத்துவிடுவார் என்று சொல்வார்கள். கதர் துண்டு
மரியாதை என்பது 'அவுட் ஆப் பேஷன்' ஆகிவிட்டது.இப்போதெல்லாம் அரசு விழாக்களானாலும் சரி ,தனியார் விழாக்களானாலும் சரி பொன்னாடைகள் என்று சரிகை ஜிகினாக்கள் பளபளக்க சால்வைகளை போர்த்தி மரியாதை செய்வது கவுரவம் என்று கருதப்படுகிறது . அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் என்றால் விலையுயர்வான பட்டு துண்டுகள் போர்த்துவது அவசியமாகிறது.இந்த விலையுயர்வான அயிட்டங்கள் திரும்பவும் விற்கப்பட்டு விடுகின்றன என்பதும் ஒரு செய்திதான்.
அதுவல்ல இங்கு சேதி.
தேசிய அளவில் சிறந்த திரைப்பட இயக்குனர் என்று ''நான் கடவுள் '' இயக்குனரான நமது பாலாவை இந்திய அரசு தேர்வு செய்திருக்கிறது. பாலா தந்தை பெரியாரை பின்பற்றுகிறவர் .உண்மையான புரட்சியாளர் . கருப்பு சட்டைக்காரர்.இவரது அடுத்த படம் 'அவன்-இவன்' என்பதாகும். விஷால்,ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் .இந்த படத்திற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.
எதையுமே வெளிப்படையாக பேசிவிடும் பாலா அன்றும் அப்படியே பேசிவிட்டார். ''பொன்னாடைகளை பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு போர்த்தியிருந்தால் குளிருக்கு உதவியாக இருந்திருக்கும்'' என்று சொல்லிவிட்டார். போர்த்தியவர்களின் மனது பற்றி அவர் நினைத்துப் பார்க்காது உணர்ச்சி வயப்பட்டுவிட்டார் .
ஆனால் எனக்கு ஒரு கருத்து உண்டு. இந்த பொன்னாடைகளால் எந்தப் பயனும் இல்லை .இவைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்கலாம். வாசிக்கும் பழக்கம் வளரும்.பாரதி ,பாரதிதாசன்,போன்ற எத்தனையோ புரட்சியாளர்களின் படைப்புகள் இருக்கின்றன. தமிழின,மான ,மொழி உணர்வுகள் வரலாறுகள் தொடர்பான நூல்களை வழங்கலாம். கலை ஞானி கமல் ஹாசன் ஒரு சமயம் என்னிடம் சொன்னதையே நானும் இங்கு பதிவு செய்கிறேன்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010
கள்ளுக்கு ...ஜே!
நம்ப முடியலிங்க சொன்னது காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுதானா ....அவரா இப்படிச்சொன்னார் என்று எல்லா நிருபர்களிடமும் கேட்டுட்டேன். ''சத்தியமா அவர் சொன்னதுதாங்க''என்று மண்டை மேல கையை வச்சு சத்தியம் பண்ணிட்டாங்க.
''வெளிநாட்டு மது பானங்கள் விற்க அனுமதிக்கப்படும்போது உள்நாட்டு பானங்களுக்கு தடை விதிப்பது சரியல்ல.எனவே கள்ளு இறக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இதைப்பற்றி முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் பேசுவேன்'' என்று அவர் பேசியதையே நாங்க எழுதிக்கொடுக்க,அது பத்திரிக்கையிலும் வந்தாச்சு 'என்றார்கள் பத்திரிகை சகோதரர்கள்.
கள்ளுக்கடை மறியல் என்பது காங்கிரஸ் கட்சி எப்பவோ நடத்திய அறப்போராட்டம். மது குடிக்கக் கூடாது என்பது இப்பவும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிற சட்டம். ,கள்ளு இறக்கலாம் என்று மாநிலத்தலைமை சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்சிக் கொள்கை தவறானது என்று சொல்லுவதற்கும் ஒரு தில் வேண்டும்.
தங்கபாலு சொன்ன ''உள்நாட்டுப்பானங்கள்''பட்டியலில் பரம்பரை கைத்தொழிலாக'' இருந்து வருகிற கள்ளச்சாராயமும் அடக்கமா என்பதை அவர் சொல்லிவிட்டால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில். எல்லா கட்சிகளும் தங்க பாலு வீட்டுக்கு முன்னாடி வரிசை கட்டி நிப்பாங்க. அழுகின வாழைப்பழங்கள்,பாட்டரி,நவச்சாரம் ,பேரிச்சம்பழம் ,இன்னும் என்னென்ன மூலப்பொருள்கள் உண்டோ அத்தனையும் விலைவாசியில் ரெக்கை கட்டிப்பறக்கும்.நாடு எங்கேயோ போய்விடும். குடிமகன் என்றால் என்ன என்பதின் அருத்தம் அப்பத்தான்யா நம்ம இந்திய தாய்க் குலத்துக்குத் தெரியும். ஒருவகையில் கள்ளச்சாராயத்துக்கு முடிவு கட்டி அதற்கு அரசு மரியாதை கொடுத்த பெருமை நம்ம தங்க பாலு தலைவருக்கு வந்து சேரும்.
என்னங்க ,நான் சொன்னது சரிதானுங்களே?

ஞாயிறு, 17 ஜனவரி, 2010
திரிஷாவுக்கு காதல் கல்யாணம்தான்...
திருமதிஉமா கிருஷ்ணன் நடிகை த்ரிஷாவின் அம்மா.
மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்,ஜாதகங்கள் தேடுகிறார் என்று யாரோ பரபரப்பு வெடியைக் கொளுத்திப் போட்டுவிட,
அவசரமுடன் போனைப் போட்டேன்.
'' நிஜம்தானாம்மா?''
''யார் சொன்னது ?''
''கோடம்பாக்கமே சேர்ந்து கும்மியடிக்கிறது உங்களுக்கு கேட்கலயா?''
''வேற வேலை என்ன அவங்களுக்கு?கை நிறைய படங்கள் இருக்கு.அத முடிக்கணும்.இந்தி படங்கள் தெலுங்கு படங்கள் தமிழ் படங்கள்னு பிசியா இருக்கோம். அது பிடிக்காம யாரோ கிளப்பி விட்டிருக்காங்க. ஹைதராபாத்ல ஹோட்டல் கட்டிட்டு இருக்கிறதாகவும் சொல்றாங்க.இப்ப த்ரிஷாவுக்கு நாங்க மாப்பிளை பார்க்கல.ஜாதகங்களும் வாங்கல. ஜாதகம் ,ஜோசியமெல்லாம் பார்த்து கல்யாணம் பண்றது எங்களுக்கு பிடிக்காது. த்ரிஷா இந்த காலத்துப் பொண்ணு. அவளுக்கு யாரைப் பிடிக்கிதோ , அவளே சூஸ் பண்ணிப்பா. காதல் கல்யாணம்னாலும் எங்களுக்கு சரிதான். இதான் எங்க முடிவு .கல்யாணத்துக்கு இப்ப என்னங்க அவசரம்?''என்கிறார்,திரிஷாவின் அம்மா.
இப்படி மனம் திறந்து பேசுகிற திருமதி உமா கிருஷ்ணனை பாராட்ட வேண்டும்.

வியாழன், 14 ஜனவரி, 2010
எம்.ஜி. ஆரும், கர்ணனும்.......!
தமிழ்ப்புத்தாண்டு-தமிழர் திருநாள்-பொங்கல் விழா என்பதற்காக நடைப்பயிற்சியை விட முடியுமா?
வழக்கம் போல் அன்றும் அதிகாலை 5 மணிக்கு காது கவசங்களுடன் தெருவில் இறங்கி நடந்தேன்.
அடடா..அடடா..!மங்கல விளக்குகள் ,மாக்கோலங்கள், வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட வாழ்த்துக் கோலங்கள்,என இல்லங்களின் முன்பாக வாசலில் கை வண்ணம் காட்டியிருந்தனர்.
''விஷ் யு ஹாப்பி பொங்கல்'',என்று கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தில் இல்லத்தரசிகள் தங்கள் திறமையை காட்டியிருந்தனர் .
எனக்கு ஒரு நப்பாசை!நடந்தபடியே 120 வீடுகளை கவனித்தேன். எத்தனை வீடுகளின் வாசல்களில் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்கள் என கணக்கு எடுத்ததில் இரண்டே இரண்டு வீடுகள் மட்டுமே தமிழில் வாழ்த்துகள் சொல்லியிருந்தன! 12 வீடுகள் நடுநிலை,ஆங்கிலமும் வேண்டாம்,தமிழும் வேண்டாம் என்று வெறும் கோலங்களுடன் ! மற்ற வீடுகளின் வாசல்கள் ஆங்கிலத்தில் வாழ்த்துகள் சொல்லியிருந்தன!
தமிழரின் புத்தாண்டுக்கு தமிழர்கள் காட்டிய மரியாதை,கவுரவம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். தமிழர்கள் தங்கள் வீட்டரசிகளுக்கு கற்று கொடுத்துள்ள தமிழுணர்வு வீட்டு வாசலில் விளையாடி இருப்பது ....இதை எப்படிச்சொல்வது என்பது தெரியவில்லை.
வெடி வெடித்து ,ஆரவார ஆட்டம் போட்டு ''வாழ்க தமிழ்''என முழக்கம் இடுவதெல்லாம் வெறும் நாடகம் இல்லாமல் வேறென்ன? இன, மான,மொழி, உணர்வு வீட்டிலிருந்து வராத வரை தமிழுக்கு ,தமிழனுக்கு வளமான எதிர்காலம் இல்லவே இல்லை. தமிழ் ஈழத் தமிழ் சொந்தங்களை நினைத்தபடியே வீடு சேர்ந்தேன். தமிழ்நாடு மகிழ்ச்சியில் .சொந்தங்களோ கால் வயிற்று கஞ்சியாவது கிடைக்காதா என்கிற வேதனையில்... கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைத்தோமா?
அன்று நான் உண்ணவில்லை .மூட நம்பிக்கைகள் என்று வீசி எறிந்திருந்த அமாவாசை விரதம் இருந்தேன்,கொடூரமாக கொல்லப்பட்ட எனது ஈழ உறவுகளுக்காக.
அமைதி பெறட்டும் ஆத்மாக்கள்.
விமர்சகன் என்கிற கடமை உணர்வுடன் மறு தினம் ''ஆயிரத்தில் ஒருவன்'' படம் பார்த்தேன்.
நான் முன்னரே எனது வலைப்பதிவில் எழுதியது நினைவுக்கு வந்தது.
எம்.ஜி. ஆரின் படங்களின் பெயரில் வெளி யாகிய படங்கள் எதுவும் வெற்றி பெற்றதில்லைஎன்று சில படங்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
புதுமைப் பித்தன்.
ரகசியப் போலிஸ் .
அன்பே வா.
நேற்று,இன்று,நாளை.
மதுரை வீரன்.
நாடோடி மன்னன்.
வேட்டைக்காரன்.
என் தங்கை ,ராமன் தேடிய சீதை,நம்நாடு ,சதி லீலாவதி.
இந்தப் படங்களில் சதி லீலாவதி மட்டும் விதி விலக்கு. காரணம் இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கு முதல் படம். ஆகவே இதை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எம்.ஜி .ஆரின் ரசிகர்களின் கொள்கை ,அல்லது நம்பிக்கை.
''எங்களின் தலைவர் எம்.ஜி. ஆர்., கர்ணனுக்கு ஒப்பானவர். கர்ணன் எப்படி ''கவசக் குண்டலங்களுடன் பிறந்தானோ ,அதைப் போல் எங்கள் தலைவரும் வள்ளலாக வாழ்ந்தவர். கர்ணனின் கவசக் குண்டலங்கள் வேறு யாருக்குமே பொருந்தாது. அதைப் போலவே அவரது படங்களின் பெயர்கள் எந்த நடிகருக்கும் பொருந்தாது.'' என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.
உண்மைதான்!

சனி, 9 ஜனவரி, 2010
''மனிதனும்,மிருகமும்''
நாற்பது வயதை கடந்து விட்டால் 'நாய்க் குணம்' வந்துவிடும் என்பார்கள். எந்த அர்த்தத்தில் இப்படிச்சொன்னார்களோ ,தெரியவில்லை !
அது நாயை உயர்வு படுத்துகிறதா,மனிதனை இழிவு படுத்துகிறதா ,என்பதும் புரியவில்லை.
நல்லதோ ,கெட்டதோ ,அந்த குணம் 'நாற்பதுக்கு'கீழே உள்ளவர்களுக்கும் பொருந்தாதா ? நாற்பதைக் கடந்தவர்களுக்கு நன்றியுள்ள 'நாயை' ஒப்பிட்டது ஏன்? ஆய்வுக்கு உரிய விஷயம்!
ஆனால்-
இப்படி கற்பனை செய்வது கூட இழிவானது என்று சொல்லத்தக்க ஒரு காட்டுமிராண்டித்தனம் சென்னையில் நிகழ்ந்திருக்கிறது .
தந்தைக்கு 41 வயது.பெயர் துஷ்யந்தன்.
மகளுக்கு வயது பத்து.
தனது உதிரத்தில் உதித்த உறவு, தன்னுடைய மகள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அந்த அரும்பை கசக்கி முகர்ந்திருக்கிறான் .பாலியல் வல்லுறவு. அப்பனின் காமத்துக்கு இரையாகிய அந்த பிஞ்சு வலி தாளாமல் வேதனையில் துடித்து அழுது துவண்டதை அவன் கண்டு கொள்ளவில்லை. மறுமுறையும் நாசம் செய்திருக்கிறான் .
இவனையும் ,இத்தகைய உணர்வு உள்ளவர்களையும் எந்த விலங்குடன் ஒப்பிட்டு நியாயப் படுத்தப் போகிறது சட்டம்?
தீர்வு என்ன?
மற்றொரு நிகழ்வு...
கணவன் குடிகாரன்.மனைவி ஆசிரியை.
''குடிக்காதே,குடிக்காதே ''என்று பல தடவை பாடம் சொல்லியிருக்கிறாள். கண்டித்தாள்.அடங்காத மாடாகவே தொடர்ந்திருக்கிறான் .தண்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற முடிவுக்கு வந்து விட்ட ஆசிரியை ,அன்று அவன் குடிப்பதற்கு டாஸ்மாக் புறப்பட வழி மறித்து நின்றாள்
''போகாதே,போகாதே''என்று தடுத்தாள்.
''போவேன் ,குடிப்பேன்'' என புருஷன் புறப்பட்டான்.
மண்ணெண்ணையை தன் மீது கொட்டிக்கொண்டு தடையென நின்றாள்.
கணவனாக -மனிதனாக இருந்திருந்தால் மனைவியின் -மனுசியின் உணர்வைப் புரிந்திருப்பான். கடுமையான முடிவுக்கு வந்துவிட்ட அவளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை மேலோங்கியிருக்கும். குறைந்த பட்சம் அவளுடன் கூடி மகிழ்ந்த இரவுகளாவது நினைவுக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை.
டாஸ்மாக்கை நோக்கி நடந்தவனின் பின்னால் மண்ணெண்ணெய் சொட்ட, சொட்ட நனைந்தவளும் செல்ல ஊர் கூடிப்பார்க்கிறது!
''போகாதே ,போகாதே,என் புருசா'' என்று பாடாத குறையாக அவனைப்பின் தொடர்ந்தாள்.
அவன் ,அவளை மனுசியாக ,மனைவியாக மதிக்கவில்லை.
இவ்வளவு கடுமையாக நடந்தும் அவன் இரங்கி -இறங்கி வரவில்லை இனி அவன் திருந்தும் வாய்ப்பே இல்லை என்கிற முடிவுக்கு வந்தவளைப்போல் அவள் அங்கேயே தீக்குச்சியைக் கிழித்து தன்னை அக்னிக்கு இறையாக்கிவிட்டாள்.
இவளின் புருஷனை எந்த விலங்குடன் ஒப்பிடலாம்?
சொல்லுங்கள் மனிதர்களே? என்ன தீர்வு?,

வியாழன், 7 ஜனவரி, 2010
பிராமணர்களும்,மாமிசமும்.....!
பிராமணர்கள் மது அருந்துவதும்,மாமிசம் உண்பதும் வியப்பிற்குரியதல்ல.
சிக்கன் மட்டன் விலை உயர்வுக்கு இவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். சிலர் கோபப்படலாம். ஆனால் நாகரிக வளர்ச்சி,கால மாற்றங்களுக்கு ஏற்ப பழக்க,வழக்கம் மாறவே செய்யும்,உணவுப் பழக்கம் உள்பட!
மண்பானையில் பொங்கல் வைப்பார்கள் ,மண் அடுப்பில் நெருப்பு எரியும்.
இன்று எங்கேயாவது அந்த அரிய காட்சியை பார்க்க முடிகிறதா?
நகர வாழ்க்கையில் மண்பானைச்சமையலே மறந்து போய்விட்டது.நீராகாரம் குடிக்கிற பழக்கம் ஏழைகளிடம் கூட இல்லை! நகர வாழ்க்கையில் ஆடம்பரங்களின் அடையாளமாகிவிட்டன மது விருந்துகள் ..மாமிசம் உண்பது பெருமையாகவும் பேசப்படுகிறது. டிக்கா,கபாப், என்கிற பெயர்களில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
'' கொன்றால் பாவம் 'தின்றால் போச்சு'' என்கிற சொல்வழக்கு இப்படிப்பட்டவர்களுக்காக உருவானதாக இருக்கலாம்.
பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று 'மகாபாரதத்தில் 'சொல்லப்பட்டிருக்கிறதுஎன்பதாக ,ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்கிற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது, வாங்கிப்படித்துப்பார் என்று என் நண்பர் ஒருவர் சொல்ல புத்தக திருவிழாவுக்கு ஓடினேன்.
கண. முத்தையா மொழி பெயர்த்திருந்த நூல் கிடைத்தது.
'' சத்திய யுகத்தில் புகழ் பெற்ற பதினாறு அரசர்களில் ரந்தி தேவனும் ஒருவன். அவனுடைய விருந்து மாளிகையில் ,நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டன. அவற்றின் ஈரத் தோல்கள் சமையல் கட்டிற்கு பக்கத்தில் குவிக்கப்பட்டிருக்கும்.அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாகப் பெருகி ஓடிற்று .தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடுவதால் அதற்கு சர் மண் வதி என்று பெயர் ஏற்பட்டது.''{சர்ம -தோல் ,ணவதி -வெளிப்பட்டு ஓடுதல்}
''என்ன, உண்மையிலேயே நமது பழைய நூல்களில் எழுதப்பட்டிருக்கிறதா,குழந்தை?''
''ஆம் தாத்தா! மகாபாரதத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது''
''மகாபாரதத்திலா ? ஐந்தாவது வேதமான மகாபாரதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி எழுதியிருக்கிறதா?''
'' ரந்திதேவனின் மாளிகையில் விருந்தினர்களுக்காக இந்த பசு மாமிசங்களை சமைப்பதற்கு இரண்டாயிரம் சமையற்காரர்கள் இருந்தார்கள்.ஆயினும் பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால் 'மாமிசம் குறைவாக இருப்பதால் தயவு செய்து சூப்பை அதிகமாக ''ஏற்றுக்கொள்ள வேண்டும்'என்று விருந்தினர்களை சமையற்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது''
''பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்களா? என்ன சொல்லுகிறாய் குழந்தாய்''?
''ஐந்தாவது வேதமான மகாபாரதம் பொய் சொல்லுமா தாத்தா''?
''என்ன! உலகம் இவ்வளவு தூரம் உருண்டு புரண்டு மாறிப் போய்விட்டதா''? இவ்வாறு தாத்தா வியப்புடன் கேட்பதாக அந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நூலை எழுதியிருக்கும் பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயன்
தமிழ் உலகத்திற்கு புதியவர் அல்ல. ''பொதுவுடைமை தான் என்ன'' ''மனித சமுதாயம்'' என்கிற அரிய ,பெரிய நூல்களை எழுதிஇருக்கிறார்.
ஆராய்ச்சியாளர் சொல்வதை ஏற்பதும் ,மறுப்பதும் அவரவர் உரிமை!

செவ்வாய், 5 ஜனவரி, 2010
பாதிக்கப்பட்டவன் விடும் கண்ணீர்......!
டி .வி .விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்த இளிச்சவாய்ப் பயல்களில் அடியேனும் ஒருவன். நானும் அந்த ''பாடி ஸ்பிரேயை'' வாங்கி அடிச்சுக்கிட்டு லிப்ட் ,காப்பி சாப் னு நின்னு பார்த்தேன்.
ஒரு பொண்ணு கூட மடங்கலைய்யா !
நாத்தம் புடிச்ச பன்னியைப் பார்த்து ஒதுங்கிப் போறது மாதிரி ஓடுறாங்க!
அந்த விளம்பரப் படத்தில் மட்டும் அந்த குள்ளனும் ,நெட்டச்சியும் லிப்ட்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு வர்றாங்களே ? அது எப்படிய்யா? இப்படியெல்லாமா ஏமாத்துவானுங்க ?
டி.வி. விளம்பரத்தைப் பார்த்து பணத்தை விட்ட ஏமாளிப் பயலுகளில் நானும் ஒருத்தனாகிப் போனேன். சிட்டுக் குருவி லேகிய விளம்பரங்களில் கூட இவ்வளவு எபெக்ட் இருந்ததில்லிங்க.
அவனுகளைச்சொல்லி குத்தம் இல்லிங்க! இந்த மாதிரி ஜொள்ளு விளம்பரங்களை விட்டாத்தானே '' அலஞ்சான்ஸ்''பாஞ்சு ,பாஞ்சு வாங்குறோம் .நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கானுங்க.
பொண்ணுகளை மடக்கிற மாதிரி விளம்பரங்களை போட்டால் திருப்பதி உண்டியல்ல சேர்ற மாதிரி பணம் சேர்ந்திடும்கிற ரகசியத்தை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. பணத்தை விட்ட பிறகுதானே அது விளம்பர உத்திங்கிறது தெரியிது.
சரி,வெளியிலதான் ''பாடிஸ்ப்ரே'' வொர்கவுட் ஆகலே, வீட்டுக்குள்ளாவது வேலைக்கு ஆகுமான்னு அடிச்சிட்டு படுத்தா வீட்டுக்காரி கத்துரா! ஹவுஸ் ஓனர் இல்லிங்க,மனைவியைத்தான் சொல்றேன்.
''கர்மம்,...பேதி மருந்து சாப்புடுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே , செத்த பெருச்சாளி நாத்தம். யோவ், இன்னிக்கு கக்கூசுக்கு போகலியா''ன்னு விரட்டுறா! சாம்பிராணியை வீடு முழுக்கப் போடுறா! நான் ஏத்தி வச்சுட்டு படுத்தாத்தான் தூக்கம் வரும்கிறா!
இப்பல்லாம் அக்குளுக்கு அந்துருண்டை தான்!
நாலு இழுப்பு இழுத்திட்டு சட்டையைப் போட்டுக்கிறேன்.நீங்களும் ஒருவாட்டி டிரை பண்ணுங்க. காசு மிச்சமாகும். அலர்ஜி ஆச்சுன்னா என்னைத் திட்டக் கூடாது. அதது அவங்கவங்க உடல் கூறு !

சனி, 2 ஜனவரி, 2010
விரலி விடு தூதும் விலைமகளிர் பண்பும்..
ஒரு விடுமுறை நாளில் சுப்ரதீபக் கவிராயர் எழுதிய ''விரலி விடு தூது'' சிற்றிலக்கிய நூலை எடுத்து புரட்டினேன். விலைமகளிர்களின் நெறிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளமுடிந்தது.அதெல்லாம் இந்தக் காலத்தில் இருக்கிறதா,இல்லையா,என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அனுபவம் இல்லை. படித்ததை சொல்ல வேண்டியது அடியேனின் கடமை.
தாய்க் கிழவி அவள். விலைமாதாக இருந்து தேக விருந்து படைத்து விருப்ப ஓய்வு பெற்றவள்.மகளை தயார் படுத்தியாக வேண்டும்.வாடிக்கையாளர்கள் வேறுமனை தேடிப் போய்விடக் கூடாதல்லவா!
அன்புடன் அழைத்து,ஆரத் தழுவி மகளுக்குத் தொழில் நெறிமுறைகளை சொல்லித் தருகிறாள். இந்தத் தொழிலும் இவ்வளவு சிக்கல்களா என்று ஆச்சரியமாக இருந்தது.
மார்பு சரிந்து ,முகம் சுருங்கி ,நரை விழுந்த பிறகு எவன் தருவான் பணம் என்பவள் இப்படி சொல்கிறாள். ''கட்டழகின் வாலிபத்தே தேட்டில் வைத்தால் ,பொன்தட்டால் வேலியிட்டு கட்டலாம் வீடெல்லாம்'' ஆகவே தேக கட்டில் கவனம் வை .கட்டில் சுகத்துக்கு கட்டுடல் வேணுமடி மகளே என்கிறாள்.
எச்சரிக்கை ஒன்றும் சொல்கிறாள்.
காம சாஸ்திரத்தில் கரை கண்டவன் வந்தால் வாசலிலேயே வழி மறித்து திருப்பி அனுப்பிவிடு .நீ ஒருத்தன் மீது ஆசை வைத்து காதல் என்று போய் விடாதே, அல்லது ஒருத்தனுக்கே ஆசை நாயகியாக முடங்கி, இருந்துவிடாதே ,என்கிற கிழவி இனி சொல்வதுதான் சுவையே!
' ' முன்பின் அறியார் முடிப்பாகப் பொன் எழுநூற்று
ஒன்பது தந்தாலும் மனம் ஒவ்வாதே -இன்பமுடன்
கூடுவார் ,நித்திரை நீ கொள்வதைப் பார்த்துப் பொடியைப்
போடுவார் ,சேலை வர்க்கம் ,பொன்,உடமை,-சோடனையாய்
சேர சுருட்டி அப்பால் செல்வார் விடிந்தபின்
யாரைப் போய் கேட்பது நாம்''
இப்படிப் பட்ட பயல்களும் உண்டு.காரியம் முடிந்ததும் களைப்பில் நீ தூங்கி விடுவாய். அவன் தூங்காமல் இருந்து 'மயக்கப் பொடியை' உன் முகத்தில் தூவி எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவான் என்கிறாள். அடப் பாவிகளா ! இப்படியெல்லாமா அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள்?
அடுத்த அட்வைஸ் தான் ரொம்பவும் முக்கியமானது!
அப்பா-அம்மாவுக்கு பயந்த பசங்க வந்தால் ''வாயில் வடு செய்யாமல்,மார்பில்நகம் வையாமல் தோயும் இதம் காட்டி சுகம் காட்டு'' என்று தடயம் உண்டாக்காமல் அனுப்பி வைக்கச்சொல்கிறாள். அடடே...என்னே தொழில் தர்மம்!
அடுத்தது ''காமச்சாமியார்களைப் பற்றி......
''சன்யாச ருத்ராட்ச பூனை ரூபர் சிலர் வந்தால் மெத்தையில் வைத்துவிளக்கணைத்து சத்தம் இன்றி வெளியில் அனுப்பிவிடு '' என்கிறாள். காமச்சாமியார்கள் கோவில் கருவறை தொடங்கி கவர்னர் மாளிகை வரை நீண்டு விட்டது கவிராயருக்கு தெரிந்திருக்கிறது அந்தக் காலத்திலயே....!
அப்பன் வருவான் ,அவன் போன பின் மகன் வருவான்.தள்ளிவிடாதே, பணத்துக்கு அப்பன்-மகன் உறவெல்லாம் தெரியாது. வந்தது வரை வரவு!
அடடா...அடடா!! இப்படி நிறைய சரக்கு இருக்கு கவிராயரிடம்!

கிண்ணத்தில் பிறந்த ஞானம் ......!
புத்தனுக்கு போதி மரத்தினடியில் ஞானம் பிறந்ததாம்.
எனக்கு சனவரி ஒன்றில் நள்ளிரவில் கிண்ணத்தை ஏந்திய போது ஞானம் பிறந்தது. நம்மை எத்தனை வருடங்கள் இங்கிலீஸ் காரன் அடிமைப்படுத்தி வைத்திருந்தான்,அடிமைப் புத்தி போகுமா என்ன? அதான் நானும் ஆங்கிலப்புத்தாண்டை விசுவாசமுடன் கிண்ணத்தில் ஏந்தியிருந்தேன்..நான் மட்டுமா ,சென்னைநகரமே விசுவாசத்தை கோவில்களிலும் காட்டியதே!
ஞானத்தில் தெரிந்த ஜோதிகளைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியுமா ? மவனே, இதாண்டா எதிர்கால இந்தியா-தமிழ்நாடு என்று எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லவேண்டியது அடியேனின் கடமை. வரிசை படுத்துகிறேன், தப்பாக இருந்தால் ஜோதியின் மீதுதான் கோபப்படவேண்டும்.
1. அரசியலாகட்டும் ,ஆட்சிகளாகட்டும் ,இனிமேல் வாரிசு-குடும்பம் தான்'. சந்தோசப்படு.
2 .ஊழல்கள் சமுதாய அந்தஸ்துக்கு உயர்த்தப்படும்.
3 . அதிகாரிகள் ,அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், இவர்களின் ஊழல்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்படும்.
4 .இந்த உச்சவரம்பிலிருந்து ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு முழு விலக்கு.[கோடிக்கணக்கில் ஊழல் பண்ணியதாக குற்றம் சாற்றப்பட்ட ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகொடாவின் மனைவி,கொலைக்குற்றம் மற்றும் கிரிமினல்கள் குற்றம் சாற்றப்பட்ட மாஜி முதல் மந்திரி சிபுசோரன் இவர்களையெல்லாம் செயிக்க விட்டவர்கள் நாம்பதானே!] ஆகவே மக்களின் மகத்தான ஆதரவு பெறுகிற கட்சிகளுக்கு முழு விலக்கு.
5 .வன்முறைதான் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரே வழி. சர்வகட்சிகளின் அளவுகோல் வைத்து வன்முறை யை நியாயப் படுத்துவார்கள்.
6 .பிழையான வரலாறு எழுதுகிறவர்களுக்கு விருதுகள்-பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். ''என் பெயரைப் புறக்கணித்தவருக்கு என் பணத்திலேயே விருது கொடுத்து இருக்கிறீர்கள்,'' என்று முதலவர் கலைஞர் வருத்தப்பட்ட முன் உதாரணம் உண்டு.
7 .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் .இறந்தபிறகு சென்னையில் தகனம் செய்யப்பட்டார் ,அந்த இடத்திலேயே அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டது என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பதை உதாரணம் காட்டலாம்.
8 .ஒரு காலத்தில் தமிழர்களுக்கு இருந்த வீரம் ,இன மான உணர்வு ஆகியவை சென்னை அரும் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.தமிழீழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பிறகு இப்படி ஒரு பரிதாபத்துக்கு அந்த இனம் உள்ளாகிப்போனது.
இதுதாங்க எனக்குத் தெரிந்த ஜோதி ....!

வெள்ளி, 1 ஜனவரி, 2010
பொளச்சுக்குவீங்க மக்கா.....!
''பெண்ணடிமைத்தனம் ஒழியனும்,சம உரிமை கொடுக்கணும்'' என்றெல்லாம் கும்பி கொதிக்க, குடலெல்லாம் கருக ,பொங்கி னானுகளே, ஆணினத்தின் அடிப்படைத் தேவையான 'ஒரு' உரிமைக்காக யாராவது குரல் கொடுத்தானுகளா?எப்படி,எப்படியோ சினிமா எடுக்கிரானுக, சீர்திருத்தம் செய்றோம்னு விதவைத் திருமணம் ,ஓரினச்சேர்க்கையை முன்னிறுத்தி வசனமெல்லாம் பேசி 'முன்னெடுத்து' செல்றாங்க, ஆனால் அடிப்படை உரிமைக்காக எவனாவது குமுறுனானுகளா? கொந்தளிச்சானுகளா?
ங்கொய்யாலே ,உரிமைக்குரல் கொடுக்க ஆள் கிடைக்காமலா போய்விடும்? வந்திட்டார்ல எங்க ஆளு!
''அந்தரங்கம்''னு சினிமா எடுக்கிரார்யா ஜே.வி.ருக்மாங்கதன். பெரிய விநியோகஸ்தர் .350 படங்கள் இவர் கையில்.
அவர் சொன்னதை இங்கே படியுங்க.
''கொல்கத்தா,மும்பையில் இருப்பது மாதிரி தமிழ்நாட்டிலும் 'விபசாரத்துக்கு அனுமதி கொடுத்து இடம் ஒதுக்கணும், ஆண்களுக்கு வடிகால் வேணாமா? கதாநாயகி கமலிகாவின் உடம்பில் [ நிர்வாணம்] ஓவியம் வரைவது முக்கிய சீன். அந்த நடிகை வங்காளம் .ரொம்பவும் கோவாப்ரெட் பண்ணினார்.''
''எப்படீங்க சென்சார் அனுமதிப்பாங்க?''
''அந்த கவலை உங்களுக்கு வேணாம்.நான் எத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன்? முதலில் சென்னையில் சென்சார். அது விதிமுறை. அவங்க அனுமதிக்க மாட்டாங்க .' ரிவைசிங்' கமிட்டிக்கு போகணும்னு சொல்வாங்க .நான் போகமாட்டேன். நேரா ''ட்ரிப்யுனல்'' போய்விடுவேன்.அங்கே உள்ளவங்களுக்கு ரொம்பவும் முற்போக்கு எண்ணம். பெண் அதிகாரிகளுக்கும் பரந்த மனம்' சர்டிபிகேட் கிடைச்சிடும். தமிழ் ,மலையாளம், தெலுங்கு ,ஹிந்தி, நான்கு மொழிகளிலும் ரிலீஸ் பண்ணிடுவேன்''என்று ரொம்ப ,ரொம்ப நம்பிக்கையுடன் சொல்கிறார்.
தமிழ் சினிமா முன்னேறவில்லை என்று யார் சொன்னது?
ஓஹோ, இதுதான் முன்னேற்றம் என்பதா?
அய்யா , நீங்க என்ன சொல்றீங்க?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
எனது நண்பர் என்னிடம் பிதகோரஸ் தேற்றம் பற்றி கேட்டபோது தெரியாது என்று சொன்னேன்.தெரியாததை தெரியாது என்று சொல்வதுதான் மரியாதை .சிலர் கவுரவத்த...