Thursday, January 7, 2010

பிராமணர்களும்,மாமிசமும்.....!

பிராமணர்கள் மது அருந்துவதும்,மாமிசம் உண்பதும் வியப்பிற்குரியதல்ல.

சிக்கன் மட்டன் விலை உயர்வுக்கு இவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். சிலர் கோபப்படலாம். ஆனால் நாகரிக வளர்ச்சி,கால மாற்றங்களுக்கு ஏற்ப பழக்க,வழக்கம் மாறவே செய்யும்,உணவுப் பழக்கம் உள்பட!

மண்பானையில் பொங்கல் வைப்பார்கள் ,மண் அடுப்பில் நெருப்பு எரியும்.

இன்று எங்கேயாவது அந்த அரிய காட்சியை பார்க்க முடிகிறதா?

நகர வாழ்க்கையில் மண்பானைச்சமையலே மறந்து போய்விட்டது.நீராகாரம் குடிக்கிற பழக்கம் ஏழைகளிடம் கூட இல்லை! நகர வாழ்க்கையில் ஆடம்பரங்களின் அடையாளமாகிவிட்டன மது விருந்துகள் ..மாமிசம் உண்பது பெருமையாகவும் பேசப்படுகிறது. டிக்கா,கபாப், என்கிற பெயர்களில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

'' கொன்றால் பாவம் 'தின்றால் போச்சு'' என்கிற சொல்வழக்கு இப்படிப்பட்டவர்களுக்காக உருவானதாக இருக்கலாம்.

பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று 'மகாபாரதத்தில் 'சொல்லப்பட்டிருக்கிறதுஎன்பதாக ,ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்கிற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது, வாங்கிப்படித்துப்பார் என்று என் நண்பர் ஒருவர் சொல்ல புத்தக திருவிழாவுக்கு ஓடினேன்.

கண. முத்தையா மொழி பெயர்த்திருந்த நூல் கிடைத்தது.

'' சத்திய யுகத்தில் புகழ் பெற்ற பதினாறு அரசர்களில் ரந்தி தேவனும் ஒருவன். அவனுடைய விருந்து மாளிகையில் ,நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டன. அவற்றின் ஈரத் தோல்கள் சமையல் கட்டிற்கு பக்கத்தில் குவிக்கப்பட்டிருக்கும்.அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாகப் பெருகி ஓடிற்று .தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடுவதால் அதற்கு சர் மண் வதி என்று பெயர் ஏற்பட்டது.''{சர்ம -தோல் ,ணவதி -வெளிப்பட்டு ஓடுதல்}

''என்ன, உண்மையிலேயே நமது பழைய நூல்களில் எழுதப்பட்டிருக்கிறதா,குழந்தை?''

''ஆம் தாத்தா! மகாபாரதத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது''

''மகாபாரதத்திலா ? ஐந்தாவது வேதமான மகாபாரதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி எழுதியிருக்கிறதா?''

'' ரந்திதேவனின் மாளிகையில் விருந்தினர்களுக்காக இந்த பசு மாமிசங்களை சமைப்பதற்கு இரண்டாயிரம் சமையற்காரர்கள் இருந்தார்கள்.ஆயினும் பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால் 'மாமிசம் குறைவாக இருப்பதால் தயவு செய்து சூப்பை அதிகமாக ''ஏற்றுக்கொள்ள வேண்டும்'என்று விருந்தினர்களை சமையற்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது''

''பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்களா? என்ன சொல்லுகிறாய் குழந்தாய்''?

''ஐந்தாவது வேதமான மகாபாரதம் பொய் சொல்லுமா தாத்தா''?

''என்ன! உலகம் இவ்வளவு தூரம் உருண்டு புரண்டு மாறிப் போய்விட்டதா''? இவ்வாறு தாத்தா வியப்புடன் கேட்பதாக அந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நூலை எழுதியிருக்கும் பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயன்

தமிழ் உலகத்திற்கு புதியவர் அல்ல. ''பொதுவுடைமை தான் என்ன'' ''மனித சமுதாயம்'' என்கிற அரிய ,பெரிய நூல்களை எழுதிஇருக்கிறார்.

ஆராய்ச்சியாளர் சொல்வதை ஏற்பதும் ,மறுப்பதும் அவரவர் உரிமை!

1 comment:

Anonymous said...

Dear Manian Sir,

I do not understand purpose of your post. Are you advocating eating NV? I believe brahmins in TN is less than 3%. Because of their purchase of NV, prices are increased? What about other goods like Pulses and Oils. All these products increased becoz it is also being consumed by Brahmins?

I am not advocating eating NV by Brahmins is right or wrong. But, I am advocating eating NV is bad for health and also for the society.

We have to save mother earth by reducing intake of NV and also using plastics.

Do write something good for the society at least once in a month.

:) Regards

Nagappan

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...