Saturday, January 2, 2010

விரலி விடு தூதும் விலைமகளிர் பண்பும்..

ஒரு விடுமுறை நாளில் சுப்ரதீபக் கவிராயர் எழுதிய ''விரலி விடு தூது'' சிற்றிலக்கிய நூலை எடுத்து புரட்டினேன். விலைமகளிர்களின் நெறிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளமுடிந்தது.அதெல்லாம் இந்தக் காலத்தில் இருக்கிறதா,இல்லையா,என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அனுபவம் இல்லை. படித்ததை சொல்ல வேண்டியது அடியேனின் கடமை.

தாய்க் கிழவி அவள். விலைமாதாக இருந்து தேக விருந்து படைத்து விருப்ப ஓய்வு பெற்றவள்.மகளை தயார் படுத்தியாக வேண்டும்.வாடிக்கையாளர்கள் வேறுமனை தேடிப் போய்விடக் கூடாதல்லவா!

அன்புடன் அழைத்து,ஆரத் தழுவி மகளுக்குத் தொழில் நெறிமுறைகளை சொல்லித் தருகிறாள். இந்தத் தொழிலும் இவ்வளவு சிக்கல்களா என்று ஆச்சரியமாக இருந்தது.

மார்பு சரிந்து ,முகம் சுருங்கி ,நரை விழுந்த பிறகு எவன் தருவான் பணம் என்பவள் இப்படி சொல்கிறாள். ''கட்டழகின் வாலிபத்தே தேட்டில் வைத்தால் ,பொன்தட்டால் வேலியிட்டு கட்டலாம் வீடெல்லாம்'' ஆகவே தேக கட்டில் கவனம் வை .கட்டில் சுகத்துக்கு கட்டுடல் வேணுமடி மகளே என்கிறாள்.

எச்சரிக்கை ஒன்றும் சொல்கிறாள்.

காம சாஸ்திரத்தில் கரை கண்டவன் வந்தால் வாசலிலேயே வழி மறித்து திருப்பி அனுப்பிவிடு .நீ ஒருத்தன் மீது ஆசை வைத்து காதல் என்று போய் விடாதே, அல்லது ஒருத்தனுக்கே ஆசை நாயகியாக முடங்கி, இருந்துவிடாதே ,என்கிற கிழவி இனி சொல்வதுதான் சுவையே!

' ' முன்பின் அறியார் முடிப்பாகப் பொன் எழுநூற்று
ஒன்பது தந்தாலும் மனம் ஒவ்வாதே -இன்பமுடன்
கூடுவார் ,நித்திரை நீ கொள்வதைப் பார்த்துப் பொடியைப்
போடுவார் ,சேலை வர்க்கம் ,பொன்,உடமை,-சோடனையாய்
சேர சுருட்டி அப்பால் செல்வார் விடிந்தபின்
யாரைப் போய் கேட்பது நாம்''

இப்படிப் பட்ட பயல்களும் உண்டு.காரியம் முடிந்ததும் களைப்பில் நீ தூங்கி விடுவாய். அவன் தூங்காமல் இருந்து 'மயக்கப் பொடியை' உன் முகத்தில் தூவி எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவான் என்கிறாள். அடப் பாவிகளா ! இப்படியெல்லாமா அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள்?

அடுத்த அட்வைஸ் தான் ரொம்பவும் முக்கியமானது!

அப்பா-அம்மாவுக்கு பயந்த பசங்க வந்தால் ''வாயில் வடு செய்யாமல்,மார்பில்நகம் வையாமல் தோயும் இதம் காட்டி சுகம் காட்டு'' என்று தடயம் உண்டாக்காமல் அனுப்பி வைக்கச்சொல்கிறாள். அடடே...என்னே தொழில் தர்மம்!

அடுத்தது ''காமச்சாமியார்களைப் பற்றி......

''சன்யாச ருத்ராட்ச பூனை ரூபர் சிலர் வந்தால் மெத்தையில் வைத்துவிளக்கணைத்து சத்தம் இன்றி வெளியில் அனுப்பிவிடு '' என்கிறாள். காமச்சாமியார்கள் கோவில் கருவறை தொடங்கி கவர்னர் மாளிகை வரை நீண்டு விட்டது கவிராயருக்கு தெரிந்திருக்கிறது அந்தக் காலத்திலயே....!

அப்பன் வருவான் ,அவன் போன பின் மகன் வருவான்.தள்ளிவிடாதே, பணத்துக்கு அப்பன்-மகன் உறவெல்லாம் தெரியாது. வந்தது வரை வரவு!

அடடா...அடடா!! இப்படி நிறைய சரக்கு இருக்கு கவிராயரிடம்!

1 comment:

Anonymous said...

Where can I get uncensored version of this book?

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை. வன்முறைகளி...