எனது முதல் முயற்சி இந்த சிறு கதை..
''திருந்தும்னு நெனச்சேன்.நடக்காது போலிருக்கு.தலையிலே ......முளைச்சது!எப்படி உருப்படும்?''
மகனை நினைத்து வருத்தமும் ,கோபமும் கலந்து வடிவேலு தனக்குள் வெடித்த வார்த்தைகள்.
சின்னசாமி அப்படி என்னதான் செய்தான் வடிவேலு சினம் கொள்ளும் அளவுக்கு?
தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவேலுக்கு குமாஸ்தா வேலை.சின்னசாமி ஒரே மகன் .பிளஸ் டூ .செல்ல வளர்ப்பு.வடிவேலு சின்சியர் வொர்க்கர்.வேலையில் இறங்கிவிட்டால் முடியும் வரை வேறு எதிலும் போகாது.ஆபீஸ் வேலைகளை வீட்டிற்கு வந்து செய்வது உண்டு. .பொன்னம்மா அக் மார்க் மனைவி.படிப்பு பத்தாம் கிளாஸ்.அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்கு என்கிற பெற்றோர் வளர்ப்பு.சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக அத்தை மகனுக்கு வாக்கப் பட்டு வந்த மகராசி.இன்னமும் புருசனின் காலைத் தொட்டுக் கும்பிட்ட பிறகுதான் இவளது தூக்கம் கலைகிறது.
''அம்மா.. ஆயிரம் ரூபா வேணும்...கொடு!''பைக் சாவியை சுழற்றிக் கொண்டே கேட்கிறான்.
''அம்புட்டு ரூபாய்க்கு எங்கே போவேன்?அப்பாகிட்ட கேளு...!''
மகனுக்கு மத்தியான சாப்பாடு கட்டியபடியே சொன்னாள் பொன்னம்மா.
''ஆயிரத்தெட்டுக் கேள்வி கேப்பாரு.பதில் சொல்லிட்டிருக்கிறதுக்கு நேரம் இல்ல.சுருவாட்டு பணம் வச்சிருக்கில்ல.!எடுத்து கொடு!''
''என்கிட்டே அம்புட்டு பணம் இல்ல!''
''போய் சொல்ற!அரிசி ,பருப்புன்னு வீட்டு சாமான் வாங்கிறதில எவ்வளவு தேத்துறே ... எதெதில மிச்சம் பிடிக்கிறேன்கிறது எனக்குத் தெரியும்.ஒழுங்கா கொடுத்திரு.. இல்லேன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்!''மிரட்டுகிறான் சின்னசாமி .
கோபம் வந்தது பொன்னம்மாவுக்கு!
''போ..போயி போட்டுக்கொடு!சுருவாடு செத்து கழுத்திலேயும் ,கையிலேயும் சரப்புளியா செஞ்சு மாட்டியிருக்கேன் பாரு...போயி சொல்லு.ராவுன்னு பாக்காம,பகல்னு பாக்காம அந்த மனுஷன் வம்பாடுபட்டு ,ஓடா தேஞ்சு உழச்சு சம்பாதிக்கிற காசில அஞ்சு,பத்துன்னு மிச்சம் பிடிச்சு செத்து வச்சாத்தானே நாளைக்கு ஆத்திரம் அவசரம்னா உதவும்!ஆயிரம் ஓவா கேக்கிறியே எதுக்குடா?''
''உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் இல்ல.சொன்னாலும் புரியாது''
''சனியன் விட்டுச்சு!'' டிபன் பாக்சை கையில் கொடுத்தாள்.
சின்னசாமியின் நம்பிக்கை,ஆதாரம் ,ஆதாயம் எல்லாமே அம்மாதான்.அவளை விட்டு விடலாமா ,பதறிப்போனான் பிள்ளை.
''அம்மா...அம்மா .!முக்கியமான பிராக்டிகல் ஒர்க் இருக்கும்மா!'ஆன் த ராக் ','டகிலா'ன்னு ரெண்டு சப்ஜெக்ட் .நாளைக்கு சண்டேங்கிரதால லாப் மேட்டீரியல்செல்லாம் வாங்கணும் .அப்பாகிட்ட கேட்டா கடுப்படிப்பாரு. அவர் பழைய காலத்து ஆளும்மா !கம்ப்யுட்டரை பத்தி என்ன தெரியும்?என்னோட லைப் அப்பா மாதிரியே கிளார்க்காதான் இருக்கனுமா?வீடு கார்னு வாழனும்கிற ஆசை எனக்கு இருக்கும்மா!...சரி..இதெல்லாம் நடக்காதுன்கிற விதி என் நெத்தியிலே எழுதியிருந்தா யாரால மாத்த முடியும் ?விடு!எனக்கு பணம் வேணாம் !''
டிபனுடன் புறப்பட்டான்.
அவனுக்கே ஆச்சரியம்.
இப்படியெல்லாம் நடிக்க முடியுதே!
அம்மா கண்டிப்பா பணம் கொடுத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை.
மெதுவாக அடி எடுத்து வைக்க,''நில்லுடா!பணம் எடுத்திட்டு வர்றேன் ''அம்மாவின் குரல் அவனை ஏமாற்றவில்லை.
பக்கத்து அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வடிவேலுவின் மனசுக்குள் வெடித்தது தான் தொடக்கத்தில் படித்தது.
ஆன் த ராக்,டகீலா இரண்டும் என்ன என்பது அவருக்குத் தெரியும்.
ஒரு காலத்தில் அவர் குடிகாரர்.
அலுவலகம் செல்லவேண்டும் என்கிற நினைப்பு இல்லாமல் ஈசி சேரில் சாய்ந்து விட்டார்.
பெருமூச்சு.
யார் மீது குற்றம்?
தனக்கும் பங்கு உண்டா?
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
ஒரு தந்தையின் தவிப்பு....
ஒரு தந்தையின் தவிப்பு....
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அனந்தபுரி எக்ஸ்ப்ரெஸ் காலை எட்டு நாற்பத்தியொரு நிமிட அளவில் தாம்பரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.கை பேசியில் செய்தி.
'
'என்னுடன் பேசவும்''என்று மகள் அனுப்பியிருந்தாள் . வங்கிஒன்றில் பணியாற்றுகிற எம்.பி.எ பட்டதாரி.
செய்தி அனுப்புவதற்கு பதிலாக என்னுடன் பேசி இருக்கமுடியும்..எதற்காக இப்படியொரு செய்தி?
ஒரு வகையான குழப்பம் .
தொடர்பு கொண்டு பேசினேன் .
மறுநொடியே நொறுங்கிப் போனேன்.
எனது ஈரக்குலையே அறுந்து விழுந்து விட்டதைப் போன்ற வலி.கண்ணீரைத் தடுக்க இயலவில்லை.
''அப்பா...நான் எங்கே இருக்கேன்றது தெரியலப்பா..கண் சரியா தெரியலப்பா..தலை சுத்துது .பஸ்லேர்ந்து இறங்கிட்டேன்.வீட்டுக்குப் போகவாப்பா..."
எனக்குப் பேச்சு வரவில்லை.நானோ ஓடுகிற ரயிலில் .மகளின் குரலில் இருந்த பயம் என்னை உறைய வைத்து விட்டது.இனம் புரியாத சூழ்நிலையில் இருக்கிறாள் என்பதை நடுங்கும் குரல் சொல்கிறது.எதற்காக வீட்டுக்குப் போகவா என்று கேட்கிறாள்?
அந்த சின்னப் பெண்ணின் மனதில் எதோ ஒரு வித அச்சம் பதிந்து கிடப்பதால் ''வீட்டுக்குப் போகவா''என்று கேட்கிறாளோ?புரியவில்லை.குற்றம் செய்யாமல்
குற்றவாளியாக நிற்கிற உணர்வு.
என் மகள் அண்ணா நகர் பகுதியில் எங்கேயோ இருக்கிறாள் என்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. அந்த வழியாக தான் வங்கிக்கு செல்வாள்.
''அம்மா..அங்கேயே இரு ...பயப்படாதே ...அவசரப்பட்டு பஸ்சிலோ ,ஆட்டோவிலோ ஏறிடாதே ''என்று தைரியம் சொன்னேன் .எனக்கு பி பி எகிறியது.டேனோர்மின் ஒன்று போட்டுக்கொண்டேன்.
எனது மூத்த மருமகனுக்கு கை பேசியில் தகவலை சொல்லிவிட்டு காத்திருந்தேன்.
அடுத்த பத்தாவது நிமிடம் மருமகன் எனது மகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டதாக சொன்னார்.
சரியாக சாப்பிடும் பழக்கம் இல்லாததால் லோ பி பி .
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இப்போது தேறி வருகிறாள்.
அந்தப் பெண் சரியாக உணவு எடுக்காததற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கலியாணம் பற்றிய கவலையாக இருக்கலாமோ?
வாய்ப்பு இல்லை!எனது மகளின் விருப்பம்தான் எங்கள்விருப்பம் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம்.
பின் என்னவாக இருக்கும்?
அன்று மட்டும் கை பேசியை பயன்படுத்தாமல் நாங்கள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இப்படியெல்லாம் சிந்தனை ஓடுகிறது .
ரத்த பாசத்தின் வலிமையை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஆகஸ்டு 23 .ல் தான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...
-
லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும் ...