தேர்தல் வரப்போவுது.எதோ நம்மாலான சில ஐடியாக்களை அள்ளிவிட்டா சில கட்சிகளுக்கு உதவியா இருக்கும்னு நினச்சு சொல்றோம் .யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம்.இலவசம்னா நம்ம மக்களுக்கு 'புல்' அடிச்சிட்டு 'பிகர்களோடு'இருக்கிற பீலிங்கு .அதனால எதையெல்லாம் தந்தா அடுத்த அஞ்சு வருஷம் நிம்மதியா அடிமை சாசனத்தில் மக்களை அடக்கி வைக்கலாம் என்கிற ஐடியாக்களை சொல்ற கடமை.
வீடு வீடா ரேசன் பொருள் கொடுப்போம்என்கிறார்கள். .கரெக்ட்.வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும்.வீடு வீடா கொண்டுபோய் கொடுக்கிறதுக்கு ஆள் வேணுமே ,இளவட்டங்கலாபார்த்து அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டா போதும். இதில இன்னொரு லாபமும் இருக்கு.புரட்சின்னு கூட சொல்லிக்கலாம்.போற வீடுகளில் லவ் டெவலப் ஆகலாம்ல.கலப்பு திருமணம் நடக்குமே வரதட்சிணையை ஒழித்த பெருமையும் வரும்.
சரி காதலுக்கு எதிர்ப்பு வராமப் போகுமா?வரும்..
அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு.
வெட்டு, குத்து ,அடிதடி.வில்லங்கம் இல்லாம போனா வீரத்துக்கு மரியாதி இல்லாமப் போகும்.அதனால ஏரியாவுக்கு ஒரு கமிட்டி.கட்டப் பஞ்சாயத்தை ஒழித்த மாதிரியும் இருக்கும்.நம்ம கட்சி அடியாள்களுக்கு கவுரவம் கொடுத்த மாதிரியும் இருக்கும்.
அரசாங்க விடுமுறை நாட்களில் ஒரு ரேசன் கார்டுக்கு 'குவார்ட்டர் 'மது இலவசம். ஊறுகா பாக்கெட் ப்ரீ .ஊறுகா காண்ட்ராக்ட் தனி வருமானம்.ஒரு குடும்பத்துக்கு செல்போன் இலவசம் கொடுக்கலாம். லாலு கொடுக்கப் போறதாக சொல்றாங்க. நாம்ப முந்திக்கலாமே.. உங்க வசம் ஐடியா இருந்தா சொல்லுங்க.நாட்டுமக்களை காப்பாத்தின புண்ணியம் கிடைக்கும்.
தமிழர்,இனம் ,மானம் வீரம் இந்த அடையாளங்கள் எப்பவோ ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் பட்டுவிட்டதால் இலவசங்களை அள்ளிவிடலாம்.