ஆங்கிலேய ஆதிக்கத்திலும் ,ஆங்கில மொழியின் ஆதிக்கத்திலும் வளர்ந்து,வாழ்கிற நாடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு அமர்க்களமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. நாமும் கொண்டாடிவிட்டோம்.ஆங்கிலத்துக்கும் நமது கடவுளர்களுக்கும் எத்தகைய உறவும் தொடர்பும் இல்லைஎன்றாலும் ''எங்களை நல்லவிதமாக காப்பாத்துப்பா''என்று நடுநிசியிலும் கோவில்,குளம் தேடிப் போனோம்.
இது பிழை என்று சொல்லவில்லை
அவரவர் நம்பிக்கை.
யாரும் பிறர் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதில்லை .
தன்னைப் பற்றி கவலைப் படுகிறவர்களுக்கு உறவு ,இனம் ,நாடு பற்றிய கவலையும் இருக்கவேண்டும் அல்லவா? இல்லாமல் போனது ஏன்?
தங்களை அடிமைப்படுத்திய அந்நிய கலாசாரத்துக்கு மெது, மெதுவாக அடிமையாகிக் கொண்டு இருக்கிறோமே என்கிற அச்சம் வராமல் போனது ஏன்?
கலாசார சீரழிவு தான் நமது இன ,மான உணர்வை இற்றுப் போகவைத்திருக்கிறது . இற்றுப் போனதால்தான் தமிழ் வியாபாரிகளால் சொந்த இனத்தின் அழிவுக்கு துணை போக முடிகிறது. ஹாப்பி நியு இயர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டவர்கள் எவராவது தமிழீழ சொந்தங்களின் அவல நிலை பற்றி நினைத்திருப்பார்களா?
அடுத்த இலவசம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களும் ,எதைக் கொடுத்தால் இந்த மக்கள் சோரம் போவார்கள் என திட்டமிடுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறவரை இன,மான உணர்வு என்பதெல்லாம் பொய். பொய்.!
மொழி வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்கிற நிலை வரும் வரை இனமான உணர்வு என்பது 'அடகு'வைக்கப் பட்ட பொருள்தான்.
வெள்ளி, 31 டிசம்பர், 2010
வெள்ளி, 24 டிசம்பர், 2010
இதுவும் பாலியல் வன்முறைதானே...?
யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.மனதில் பட்டது.சிந்திக்க வேண்டிய தாகிவிட்டது .எங்கு பார்த்தாலும் ''சுவாமியே சரணம்''கோஷம்.காவியுடை.குறுந்தாடி.பக்தி பரவசமுடன் விரதம் இருக்கிறார்கள்.ஒழுக்கம் தவறாமை.சிலர் புகைக்கிறார்கள் என்பதால் ஒட்டுமொத்த பக்தர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது.ஒரு மண்டலம் பெண் சுகம் கிடையாது.கணவன் தனிப் படுக்கை. மனைவி தனி படுக்கை.மாலை போட்ட பக்திமான்கள் கோவில் ,பஜனை என மனதை ஒரு நிலை படுத்திக் கொள்ள முடிகிறது. சிலரால் முடியவில்லை ,மாலையை கழற்றிவிட்டு தாம்பத்திய வாழ்க்கையில் இறங்கிவிடுகிறார்கள்.ஒருநிலை படுத்த முடியாத மனைவிகளின் நிலை என்ன?
குளிர் காலம்.பருவதாகம்.அதுநாள்வரை கணவனின் அருகாமையில் அணைப்பில் சுகம் கண்டு வாழ்ந்த பெண்களின் நிலை என்ன?
தொலைக்காட்சிகளில் காதல் பாட்டுகள்.விரசம்தூண்டும் காட்சிகள்.ஊடல் ,கூடல் வசனங்கள் என அன்றாடம் வரும் சீரியல்கள்.பெண்களின் மனதை பாதிக்குமா, பாதிக்காதா?அவர்களால் புலன் அடக்கி வாழமுடிகிறது என்றாலும் ஒரு வகையில் பாலியல் ரீதியான கொடுமைதானே?கணவன் இருந்தும் அவள் விரும்புகிற போது தாம்பத்திய சுகம் பெற விரதம் தடை என்கிறபோது ஆணாதிக்கத்தின் வன்மைதானே மேலோங்கி நிற்கிறது.விரகதாபம் மேலிடும் போது விரதமிருக்கும் கணவனுடன் அவளால் சேர முடியவில்லை. ஆனால் விரதமிருக்கும் சாமி மாலையை கழற்றி பாலில் போட்டுவிட்டு விரதத்தை முறித்துக் கொள்ளலாம்,என்னய்யா நியாயம்?
இதுவும் ஒருவகையில் பாலியல் வன்முறைதானே?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...
-
லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும் ...