திடீர் பிள்ளையார்கள் மாதிரி திடீர் மகாத்மாகள் !
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் இவர்கள் தான் என்பதைப் போல்வந்து நிற்கிறார்கள்.
காந்தி குல்லாய் போட்டவர்கள் எல்லோரும் காந்தி ஆகிவிட முடியாது.
அன்னா ஹசாரே யார் ? இந்தியர்களின் பிரதிநிதியா? இவரை முன் நிறுத்துவது எந்த சக்தி?
ஆர்.எஸ்.எஸ். என்ற மதம் சார்ந்த அமைப்பு இவரை முன் நிறுத்துகிறது.
லோக்பால் குழுவில் பின் தங்கியவர்க்கு இடமில்லை என அன்னா குழு சொல்வதின் அர்த்தம் என்ன?சிந்திக்கவேண்டாமா?
ஊழலை ஒழிப்போம் என சொல்லி பாராளுமன்ற சனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்ற பார்க்கிறார்கள்.
இங்கே ஊழலுக்கு ஒத்து ஊதுகிறவர்களாக மக்கள் இல்லை.ஊழல் என்பது வேரும்,வேரடி மண்ணுமாக அழிக்கப் படவேண்டும் என்பது தான் மக்களின் தாகம்.ஆனால் அன்னாவுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் ஊழல்,கருப்புப்பணம் என வாழ்ந்து வருகிறவர்கள்.இப்படிப்பட்டவர்களுடன் ஊழலை ஒழிப்பேன் என அன்னா சொல்லி வருவது நாடகமே!
உண்ணாவிரதம் என்பதை இவர் கேலிக்கூத்தாக்கிவிட்டார்
உடல் நலமில்லை என டாக்டர்கள் எச்சரித்ததால் அவரது உண்ணா நோன்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு என பெயரிடக்கோரிஅமரர் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு இருந்தபோது எவரது எச்சரிக்கையையும் கேளாது நோன்பிருந்து உயிர் நீத்தார்.
பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாநோன்பின் ஜனனம்தான் ஆந்திரம்.
காந்தியடிகளின் வழியில் போராடிய உத்தமர்கள் இவர்கள்.
ஆனால் அன்னா?
பஜகோவிந்தம் என்பது சங்கரர் இயற்றியது.அதில் '' ஜடாமுடியுடன் வருகிற சன்யாசிகளிலும்,மொட்டை அடித்து காவி கட்டி வருகிறவர்களிலும் மூடர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வாயிற்று பசிக்காக வேடம் போடுகிறவர்கள்''என சொல்லப் பட்டிருக்கிறது.'' மரத்தடியில் கோவிலில் வாழ்ந்து,மண் தரையில் தூங்கி சொத்து பற்றி நினைக்காமல்,காமுணர்வு,இச்சை துறந்து வாழ வேண்டும் என்பதும் பஜகோவிந்தம் தான்.ஆனால் யாராவது அப்படி வாழ்கிறார்களா?இல்லை.
தமிழர்களின் உயிர் பிரச்னைக்காக வாய் திறக்காத ரஜினி ஊழலை ஒழிப்பேன் என்கிற அன்னாவுக்காக இலவசமாக இடம் கொடுத்தது எதனால்? பஜகோவிந்தம் சொன்னது இவர்களைப் போன்றவர்களுக்காகதானா ?