புதன், 29 பிப்ரவரி, 2012

கார்த்தியை அனுமதிக்காத கிளப்!

சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகி விட்டன.
வெள்ளைக்காரன் போய் விட்டான்.ஆனாலும் அவன் விட்டு சென்றிருக்கும் நடைமுறைகளை விடமுடியாத அடிமைகளாக வாழ்கிறோம்!பணக்காரர்களும் ,அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கிற ஜிம்கானா கிளப் புக்குள் நாம் இந்தியனாக ,தமிழனாக அவர்களுக்குரிய ஆடைகளுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாது! இது தேசிய அவமானம்.அல்லவா?
வேட்டி கட்டிக் கொண்டு போகமுடியாது.வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள்
பெருந்தலைவர் காமராஜரையே உள்ளே விட முடியாது என மறுத்து விட்டார்களாம்.
அதனால் தான் வாசல் அருகில் பெருந்தலைவரின் சிலையை நிறுவி அந்த கிளப்புக்குள் போகும் போதும்,திரும்பும்போதும் சிலையை பார்க்கும் விதமாக வைத்திருக்கிறார்கள் என சொல்லப் படுகிறது.
அண்மையில் நடிகர் கார்த்தியை உள்ளே விட மறுத்திருக்கிறார்கள்.காலர் இல்லாத டி.சர்ட் அணிந்திருந்தாராம்.
இதை எந்த கட்சியினரும் கண்டு கொள்ளவில்லை.ஆட்சி மாற்றங்கள் பல  நடந்தும் இந்த கிளப்பின் நடைமுறைகளை திருத்த முடியவில்லை!
அந்த அளவுக்கு வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

1884 ல் இந்த கிளப்பை பிரிகேடியர் ஜெனரல் ஜான்சன் தொடக்கி வைத்திருக்கிறார்.ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த கோடீஸ்வரர்கள் கூடும் இடம் இது.ஜிம்கானா கிளப் உறுப்பினர் என்றால் தனி மரியாதை.
ஏழைகள் இந்தியாவில் இப்படி ஒரு வர்க்கம் வாழவே செய்கிறது,



சனி, 25 பிப்ரவரி, 2012

நடிகனை காதலித்து தற்கொலை!

நடிகைகள் பெரும்பாலும் நடிகர்களின் வலையில் விழுவது உண்மையான  காதலினால் இல்லை!
பெற்ற தாயே காரணமாக இருக்கலாம் .அநேக நடிகையர் தற்கொலைக்கு  இவர்களே காரணமாக இருந்தனர் என்பது வெளிவராத உண்மை!
இன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சாகும் முடிவுக்கு வருகிறார்கள்.
சிலருக்கு காதலில் தோல்வி.
இப்போது நான் சொல்லப் போவது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கதையை!
பெரிய இடத்துப் பிள்ளை.நல்ல குடும்பம்.சரி!
நல்ல குடும்பத்துப் பையனை நடிகைக்கு மணம் செய்துவைக்க விரும்புவார்களா?
நடிகனால் குடும்பத்தை எதிர்த்து வெளியில் வரமுடியுமா?
காதலிக்கும் போது இதைப் பற்றி யோசிக்க மாட்டார்களா?
யோசிப்பார்கள்.ஆனால் காதலன் சொல்லும் பொய் மொழிகளை நம்பி பின்னர்  நாசமாகிப் போகிறார்கள்.
உலகத்துக்கு தெரிந்து விட்ட பிறகு நம்மை முழுமையான மனதுடன் எவன் திருமணம் செய்வான் என்கிற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம்.
அன்று பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ஆலோசனை சொன்னார்.''வேண்டாம். அவரை மறந்து விடு! ஏமாற்றம்தான் மிஞ்சும்''என்று சொன்னார்.அவர்இன்றும் இருக்கிறார்.மிகவும் ஒழுக்கம் நிறைந்த நடிகர்.கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.
அவர் சொன்ன அறிவுரை ஏற்கப் படவில்லை.
உணர்வுகளின் உந்துதலால் இழக்கக் கூடாதை இழந்தார் நடிகை.
நம்பிக்கைதான்!
இதன் பிறகு அவர்களின் காதல் வலிமை பெற்றுவிட்டதாகவே அந்த பேதை நம்பினாள்!
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது எதெதுக்கு சரியாகும் என்பதை இன்றைக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை!
நடிகையின் காதல் மறுக்கப் பட்டது.
அந்த நடிகரின் பெற்றோர்கள் கடுமையாக கண்டிக்கவே காதலனால் அவர்களை  எதிர்க்க முடியவில்லை,
முடிவு?
படாபட்டென்று தற்கொலை செய்து கொண்டார்!
சரி இந்தவிசயத்தை இப்போது எதற்காக சொல்கிறீர்கள் என கேட்கலாம்.
ஒரு பெண்ணின் தற்கொலை செய்தியை படித்த பிறகு ஏறத்தாழ அதே போல் இருந்ததால் சொல்கிறேன்.

வாழ்வதற்கு வள்ளுவம் உதவுமா?

தமிழர்களின் வேதம் திருக்குறள்!
மகிழ்ச்சி!ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்வியல் முறைகளை வகுத்து  கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மானுடத்தை  வள்ளுவம் வாழ வைக்கும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
மெத்தவும் மகிழ்ச்சி!!
ஆனால் வள்ளுவம் சொல்வதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பவர்கள் யார்?நம்முடைய தலைவர்கள் வாழ்கிறார்களா?
நமது சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப் பிடிக்கிறார்களா?
மது அருந்தாத' மாண்புமிகு ' உண்டா?
' பிறன் மனை' நோக்காதவர்கள் உண்டா?
லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள்,உண்டா?
பொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டுதானே நீதிமன்றங்களில்  பொய்களை கட்டவிழ்ககிறார்கள்!
ஊழல்தானே உயர் வாழ்க்கையைத் தருகிறது.
வாய்மையே வெல்லும் என்கிறது அரசு முத்திரை.அரசாங்கத்தில் வாய்மை  இருக்கிறதா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
அதற்கேற்ப மனிதனும் மாற வேண்டும்!
மாற வில்லை என்றால் அவனது பயணம் அங்கேயே நின்று விடும்.
ஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்றாகிவிட்டது !
ஆசைக்கு ஓர் மனைவியும் காமத்துக்கு இன்னொருவளும் என வாழ்கிற மேட்டுக்குடி மக்கள் என்ன கெட்டாவிட்டார்கள்?அவர்களது செழிப்பு அவர்களுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கி விடுகிறது!
ஆனால் ஏழை இருதாரம் என வாழ முடியுமா?வறுமை அவனை தின்று விடும்.இந்த சமூகம் அவனை தூற்றும்.
ஆக ஏழைக்கு ஒரு விதி ,பணக்காரனுக்கு ஒரு விதி என வள்ளுவம்  சொல்கிறதா?
கண்டிக்கிறது !அத்தகையவர்களை.கயவர்கள் என்கிறது!
ஆனால் அந்த கயவர்கள்தானே கண்ணியத்திற்குரியவர்களாக மதிக்கப் படுகிறார்கள்!
ஆக நல் வாழ்க்கைக்கு வள்ளுவம் உதவுவது இல்லை! இங்கு நல் வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது என்பது உண்மை.
நான் பொய் சொல்ல மாட்டேன்,அறம் சார்ந்து நிற்பேன் என  ஒருவன் அடம் பிடித்து வாழ்ந்தால் அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று பொருள்!
பொருள் சேர்ப்பதற்கு வள்ளுவர் சொன்ன அத்தனை நெறிகளையும் கைவிட்டால்தான்  முடியும் என்பது இன்றைய அரசியல்வாதிகளைப் பார்த்தால்  தெரியவில்லையா?

கறுப்புப் பணம் இல்லாத ஒரு தலைவரை இன்று காட்ட முடியுமா?

தமிழ்சினிமாவின் காமடி பீசுகள்!

எத்தனையோ காமடியன்களை பார்த்திருக்கிற தமிழ் சினிமா இவர்களைப் போன்ற காமடி பீசுகளை இனிமேல் பார்க்கமுடியாது!
ஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.மற்றவர் ரித்தீஷ் .
இருவருமே அரசியல்வாதிகள்தான்.சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்கிறார்.ஆனால் இவர் காரில் அதிமுக தலைகளுடன் எடுத்த படங்கள் இருக்கின்றன!
திமுகவை சேர்ந்த எம்.பி.யாக இருக்கிறார் ரித்தீஷ் .
இருவரும் பணத்தை பணமாக மதிப்பதில்லை.வெறும் காகித தாள்கள்தான்!ஐநூறு,ஆயிரம் என்று அள்ளி இறைக்கிறார்கள்.
எங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்பது தெரியவில்லை!அழகர்கோவில் தீர்த்த தொட்டி மர்மம் மாதிரிதான் இவர்களின் பண வரவும்!
பகிரங்கமாகவே அள்ளி இறைக்கும் இவர்களை மத்திய மாநில அரசுகளின்  வருவாய்த் துறையும், வருமான வரித் துறையும் கண்டு கொள்வதில்லை!
ஒருநாள் கூட கவுஸ்புல் ஆகாத படத்தை நூறுநாள் ஓட்டிசாதனை செய்த சீனிவாசன் தனக்கு தானே வைத்துக் கொண்ட பட்டம் பவர் ஸ்டார் !!
இவருக்கு ரைவல் யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டாராம்!
வேறு யாராவது சொல்லி இருந்தால் தலைவரின் ரசிகர்கள் பின்னி பெடல் எடுத்திருப்பார்கள்.இவர் காமடி பீஸ் என்பதால் பின்புலத்தால் சிரித்துக் கொண்டார்கள்.
இதுநாள்வரை அமைதியாக இருந்த ரித்தீஷ் இனிமேல்தான் அலப்பறை பண்ணப் போகிறாராம் சினிமாவில்!

நடிக்கத் தெரிந்தவர்கள்தான் நடிகனாக முடியும் என சட்டம் வந்தால்தான் இப்படிப் பட்ட காமடி பீஸ்களை தவிர்க்கக் முடியும்.அரசியலோடு நிற்க வேண்டியதுதானே!

''குட்பை பிரபு !''நயன் வண்டி தனியே கிளம்பி விட்டது!

''காதலே இது பொய்யடா காற்றடைத்த பையடா '' என்பது பிரபுதேவா-நயனுக்கு  சரியாகப் பொருந்துகிறது!
நயனின் ராசியோ என்னவோ அவருக்கு காதல் ஜன்மப் பகை மாதிரி ஆகி விட்டது!
சிம்புவுடன் நன்றாகத் தான் இருந்தார்.அவரின் இழுத்த இழுவைக்கெல்லாம்  இணங்கிப் போனார்.படத்தில் உதடுடன் உதடு கடித்து முத்தமிட்டு நடித்தார். அதைப் போல தனியறையிலும் முத்தங்கள் பரிமாறப் பட இணைய தளங்களில் எக்க சக்க வரவேற்புகளும்,வசவுகளும் வந்தன!
இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என பேசப் பட்டது!
''நானே காதல் திருமணம் பண்ணியவன்தான்.என் பிள்ளையின் காதலுக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டேன் ''என்று அப்பா டி.ராஜேந்தரும் அறிக்கை படித்தார்.
எந்த பாவி வெடி வைத்தானோ,அவர்களின் காதல்கோட்டை தகர்ந்தது!
தகர்ந்த கோட்டையில் புதிய கோட்டை கட்ட வந்தார் பிரபுதேவா!
பிரபுதேவாவின் காதலுக்கு அப்பா சுந்தரம் மாஸ்டரின் ஆசி இருந்தது.
நயன் வீட்டில் எதிர்ப்பு வளர்ந்தது.
கல்யாணம் நிச்சயம் என்பதைப் போல் மதம் மாறி இந்துவானார் கிறிஸ்தவப் பெண்ணான டயானா என்கிற நயன்தாரா!
தனது கையில் பிரபுவின் பெயரையும் குத்தி கொண்டார்.
இனி யார் பெயரை பச்சையாக குத்தப் போகிறார்?
அதை முடிவு செய்யக் கூடியவர்கள் இருவர் என்கிறார்கள்!
ஒருவர் பெயர் ராசு.இன்னொருவர் பெயர் சேது.
ராசு என்பவர் நயனின் மேக் அப் மென்.
சேது என்பவர் கேரளத்தில் நயனுக்கு எல்லாமுமாக இருப்பவர்.காரோட்டி!
சென்னையை சேர்ந்த அஜித் என்பவர் முன்பு நயனின் கால்ஷீட் விவரங்களை  பார்த்துவந்தார்.சிம்புவின் அறிவுறுத்தல்படி இவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார்.அவர் பெயர் ராஜேஷ்,இவர் ஒரு வங்கியின் அதிகாரி. பிரபுதேவாவின் ஆத்மார்த்த நண்பர்!
இவரை தன்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது நயனின் வழக்கம்.
விசா கிடைப்பதில் சிரமம் இருக்கவே இவரை நடிகர் என சொல்லி சங்கத்தின் அனுமதி பெற்று கூட்டி சென்றதாக ஒரு குட்டிக் கதை உண்டு!
மணவிலக்குப் பெற்ற பிரபுதேவாவுக்கு எந்த தடையும் இல்லாத கட்டத்தில் இவர்களின் காதல் கோட்டை மறுபடியும் சுக்கு நூறாக தகர்க்கப் பட்டது,
இதில் மகிழ்ச்சி அடைத்தவர் பிரபுதேவா!காலஹஸ்தி கோவிலுக்கு சென்று தோஷ நிவாரணம் செய்துவிட்டு படப் பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
நயனை அடியோடு மறந்து விட்டார்.நயனின் தற்போதைய பாதுகாவலர் ராஜேஷ் என்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.
ஒரு நல்ல நடிகை ஆராய்ந்தறியும் தன்மையை ஒதுக்கியதால் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தும் திருமதி ஆகாமல் இன்னும் செல்வியாகவே வாழ்கிறார்.

இதுதான் வாழ்க்கையா?

தீவிர அரசியலில் வடிவேலு...!

வைகை வடிவேலு இப்போது மதுரையில் !
சங்கரன்கோவிலில் வீசுவதற்காக மதுரையில் மையம் கொண்டிருக்கிறாரா?
அப்படியெல்லாம் இல்லை!
மதுரையில் இருக்கிற அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை.
''அண்ணே ..தாயில் சிறந்த கோயிலுமில்லேன்னு சொல்லி இருக்கானுங்கன்னே!நமக்கு அம்மா தானே தெய்வம்.அதான் அம்மாவுக்கு பக்கத்திலேயே இருக்கேன்"
''அப்படியா!அப்ப சங்கரன்கோயில் இடைத் தேர்தலுக்கு போகலியா?''
''அங்க நமக்கென்ன சோலி!போனவாட்டி எலெக்சனுக்கு போனதோடு நம்ம டூட்டி முடிஞ்சு போச்சு.அது ஒரு வேகம்னே!''
''அரசியலுக்கு வரப் போறதா சொல்றாய்ங்களே ?''
''நம்மள எறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க!அண்ணே !ஓட்டுப் போடற ஒவ்வொருத்தனும் அரசியல் வாதிதான்.பிடிச்ச கட்சிக்கித் தானே ஓட்டுப் போடுறோம்!அதனால நானும் ஒரு வகையில் அரசியல்வாதிதான்.காலம் நேரம் கரெக்டா ஒத்து வரணும்னே.அப்ப வருவேன் அரசியலுக்கு.பெறகு பாருங்க இந்த வடிவேலுவ!''
''இப்ப?''
''அய்யாவ போயி பார்ப்பேன் பேசுவேன் வருவேன் .இம்புட்டு போதும்னே!''என்கிறார் வைகைப் புயல் வடிவேலு!
  

வியாழன், 23 பிப்ரவரி, 2012

குஷ்புவை எதிர்க்கிறார் வாகையார்!

திரை உலகம் என்றாலே நாக்கை கடிக்கும் பா.ம.க நிறுவன .தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மைந்தன்திரைப் படம் எடுப்பது பற்றி  காற்று கூட விட  வில்லை.
மவுனம் சாதிக்கிறார்.ஒருவேளை ஏனிந்த மவுனம் என கேட்டால் ''மண்ணின் மாண்பினை காப்பாற்ற எடுக்கிறோம் ''என்று சொன்னாலும் சொல்வார்.
சினிமாவினால்தான் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது என்று நெருப்பு உமிழும் இவர் தனது கட்சிக் காரர் படம் எடுப்பது பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? நமக்கு புரியவில்லை!
சினிமாவை விமர்சனம் செய்தபடியே சினிமாவினால் வாழ்கிற 'வீரர்களும்' இருக்கிறார்கள்.'சினிமாவா எடுக்கிறாங்க ?.தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''யில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான்! 'தானே' மட்டும்தான் தமிழகத்தில் பிரச்னையா?
எவ்வளவோ இருக்கின்றன! குறிப்பாக மின் வெட்டு!
இன்னொருவரும் இருக்கிறார் ,தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
''மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற  என்னால் முடியும்.ஆனால் அந்த திட்டத்தை  நான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சொல்வேன்''என்கிறார்.
பசிக்கு அழும் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்காமல் ' அது நான் பெற்ற குழந்தையாக இல்லையே ,எனக்கு பிறக்கும் குழந்தைக்கு ம ட்டும் தான் பால் வாங்கிக் கொடுப்பேன் ' என்று யாராவது சொல்வார்களா?
விஜயகாந்துக்கு இப்போது அவருடைய நண்பர் வாகை சந்திரசேகர் ஆதரவு!இவர் பக்கா திமுக என்பது உலகத்துக்கே தெரியும்!
இவர் சொல்கிறார்,''கலைஞர் தாக்கப் பட்டு மூக்கு கண்ணாடியை சட்ட சபையில் உடைத்ததை விடவா விஜயகாந்த் செய்துவிட்டார்? மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே? விஜயகாந்தை நான் ஆதரிக்கிறேன்'' என்கிறார் வாகையார்.
இவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
''பொதுக்குழுவில் குஷ்புக்கு முதல் வரிசை உங்களுக்கு எங்கேயோ இடம் ,வேதனையாக இல்லையா ,ஒதுக்கப் பட்டது மாதிரி இல்லையா?''
இதற்கு அவரின் பதில்.
''33 வருஷம் கழகத்தில் இருக்கிறேன்.எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள்,போனார்கள்.நான் ஏற்றுக் கொண்ட ஒரே இயக்கம் திமுகதான்.
ஒரே தலைவர் கலைஞர்!.கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என்று அலைபவன் நானில்லை. எனக்கு முன்னாடி யார் இருக்கிறார்கள்,பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப் படவில்லை.கலைஞர் ,தளபதி இருவரும் எனக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது
 எனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்'' என்கிறார்.
இது குஷ்புவுக்கு எதிரான கருத்தாக தெரியவில்லையா?



இவனுங்களை என்ன செய்யலாம்?!

இப்படிப்பட்டவனுகளை என்ன செய்யனும்னா கொதிக்கிற வெந்நீர் அண்டாவில்  இடுப்புவரை இறக்கி விட்டுறணும்.அப்பத்தான் மத்த பயலுகளுக்கு பயம் வரும்.
எப்படிபட்டவனுகளை இப்படி வெந்நீரில் வேக வைக்கனும்கிறத சொல்லாம நான் பாட்டுக்கு கதை  அடிக்கிறேன் மன்னிச்சுக்குங்க!
நீதிபதி வீடாச்சே வில்லங்கம் இருக்காதுன்னு அந்த பொண்ணு வெள்ளந்தியா  நினைச்சு வேலைக்கு சேர்ந்திருச்சு.
நீதிபதிக்கு அந்த பொண்ணு மேல கண்ணு.ரதி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிய வச்சுக்கிற பூமியாச்சே!அதுவும் இந்த பொண்ணு அழகா வேற இருந்துச்சா ,எப்படா மாட்டும்,சோலிய முடிச்சுப் புடலாம்னு நீதிபதி காத்துக்கிட்டு இருந்திருக்காரு.
வீட்டம்மா வெளியூரு கிளம்பிட்டாங்க.புருஷன் மேல நம்பிக்கை.நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்றவராச்சே ,இவர நம்பாம போனம்னா நம்ம கற்பு மேல நாமே சந்தேகப் படுற மாதிரின்னு நெனச்சுட்டாங்க போல இருக்கு.
அம்மா அந்த பக்கம் போனதும் அய்யா இந்த பக்கம் புகுந்துட்டாறு.!
காட்டுப் பூனை கிட்ட மாட்டுன கோழி மாதிரி உசிரை கையில புடிச்சுக்கிட்டு அந்த பக்கம் இந்தபக்கம்னு பொண்ணு ஓடுது ஒளியுது!
காமம் மண்டை உச்சியில் தெனவெடுத்து நிக்கிறபோது சின்ன பொண்ணுன்னு தெரியுமா ,விரட்டிப் புடிக்கிறான் நீதிபதி!
ஆனா அந்த பொண்ணு அந்தாளு கையில மாட்டாம தப்பிச்சு வெளியே ஓடிப் போச்சு!
போலீஸ்ல புகார்!அந்த ஊர் பேரு என்ன தெரியுமா?
சட்டப்பள்ளி நகர். சிவில் ஜட்ஜ் !கிரைம் கேசில் மாட்டிக்கிட்டாரு.
ஆந்திர மாநிலத்தில்தான் இந்த கேவலம்!
அப்ப  நாங்க என்ன மட்டமா என்கிற மாதிரி நம்ம தமிழ் நாட்டிலும் கிறிஸ்தவ நர்ஸ் காலேஜில் பல மாணவிகளை அந்த காலேஜ் டைரக்டர் மான பங்க படுத்தி தொல்லை கொடுத்திட்டு இருந்திருக்காரு.
அவரையும் போலீஸ் புடிச்சிருக்கு.
அதனால தான் சொன்னேன் கொதிக்கிற வெந்நீர் அண்டாவில இறக்கி இடுப்புவரை வேக விட்டுறனும்னு



என்ன கொடுமைடா சாமி!

எது எதற்கு கொலை பண்றது என்பது விவஸ்தை கெட்ட தனமா போச்சுங்க.
ஓடிப் போனா என்பதற்காக பொண்டாட்டியை போட்டுத் தள்ளி இருக்கானுங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறோம்.
சொத்து தகராறுல அப்பனை போட்டுருக்கானுங்க,அண்ணன் ,தம்பியை போட்டு பொளந்து இருக்கானுங்கன்னும்  கேள்விப் பட்டிருக்கிறோம்.
கள்ளக் காதல்,கட்சி சண்டை,சாதி சண்டை,மத சண்டை இப்படி நிறைய மேட்டர்களில் வெட்டி சாச்சு இருக்கானுங்க.
பகை முத்திடுச்சுன்னா கழுத்து காலி என்பது இன்னைக்கும் இருக்கு.
உயிரோட அருமை,பெருமை தெரியாம ஆளை தீர்த்துட்டு காடு,மேடு வனாந்தரம்னு தல மறைவா நாய் பொழப்பு பொழைக்கிற பயலுக எப்படா ஆபத்து வரும்கிறது தெரியாம வாழ்ந்திட்டிருக்கானுங்க.
ஆனா ஒரு பய கக்கூசில் ரொம்ப நேரமா இருந்தான்கிறதுக்காக போட்டுத் தள்ளி இருக்கான்!
அடக்கி அடக்கி பார்த்திருக்கிறான்.முடியல!சீக்கிரமா வெளியே வாய்யான்னு  சத்தமும் போட்டிருக்கான்!
உள்ளே உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன எழவு அவஸ்தையோ முக்கிக் கிட்டே  இருந்திருக்கான்.ஒரு வழியா முடிஞ்சு வெளியே வந்தவனை வெளியில்  காத்துக்கிட்டிருந்தவன் ஒரே வெட்டில் கொன்னு சாச்சுட்டான்!
எப்படியெல்லாம் நாட்டில நடக்குது பாருங்க.
சரி எந்த ஊர்ல நடந்திருக்குன்னு கேக்கிறீங்களா? மும்பையில தாங்க!!

புதன், 22 பிப்ரவரி, 2012

மக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா?

எந்த வெங்காய சங்கமாக இருந்தாலும் அது மக்களின் நன்மைக்காக இருக்கவில்லை!அதிமுக ,திமுக,வலது ,இடது கம்யு கட்சிகள் ,தேசிய கட்சிகள்  ஆகியவற்றின் பலமாக விளங்குகிற தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயங்குகிறது,மக்களின் நலன் பற்றி கவலையே படுவதில்லை.
எந்த சங்கமாவது ஆட்டோவில் மீட்டர் படி பயணியிடம் காசு வாங்கு என்று கட்டாயப் படுத்துகிறதா?
கூப்பிட்ட இடத்துக்கு போ ,மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று வற்புறுத்துகிறதா?
பயணிகளிடம் குறைந்த பட்ச மரியாதையாவது காட்டு என சொல்கிறதா?
ஒரு விளக்குமாறும் இல்லை.அடாவடித்தனமான வசூல் ஆட்டோக்காரர்களால் நடக்கிறது.அவமானப் பட விரும்பாத பயணிகள் முன்பக்கம் பின்பக்கம் இரண்டையும் பொத்திக் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது.
இதே மாதிரியான மரியாதைதான் பஸ் கண்டக்டர்களிடமும் கிடைக்கிறது.
ஊதிய உயர்வு ,அலவன்ஸ் என மக்கள் பணத்தில்தான் அவர்கள்   கொழிக்கிறார்கள் என்பதை நினைப்பதில்லை.
ஆட்டோக்காரர்கள் ரேஸ் நடத்தாத குறையாக விரட்டுகிறார்கள்.கேட்டால் ''கம்னு வா சார் .ஒன்னும் ஆகாது ''என்கிறார்கள்.மெஜாரிட்டி ஆட்டோக்களில் ஹார்ன் கிடையாது.இதை காவலும் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் சிட்டியில் ஓடுகிற ஆட்டோக்களில் பாதி அவர்களுடையதுதான்! ஒரு வயதானவர் ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி,கூத்தாடி ,கை கூப்பி கூப்பிட அந்த ஆட்டோ வேகம் எடுப்பதாக ஒரு விளம்பரப் படமே வந்திருக்கிறது.
போக்குவரத்து சிக்னல்களை அரசு பஸ்காரர்கள் ,ஆட்டோக்காரகள் மதிப்பதே இல்லை என்பதுதான் பெரிய சோகம்!
இவ்வளவு அக்கிரமங்களையும் மக்கள் பொருட் படுத்துவதில்லை.பழகிப் போய் விட்டார்கள்.நாளைக்கு எவனாவது  வீடேறி வந்து மிரட்டி காசு கேட்டாலும் கொடுத்து விடுவார்கள்.
தொழிற்சங்கங்களை அரசு கடுமையாக கட்டுப் படுத்தினால் ஒழிய பயணிகளின் வயித்தெரிச்சல் தீரப் போவதில்லை,அல்சர் வந்துதான் சாக வேண்டும்.
எனது சொந்த அனுபவத்தின் வலியைத் தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

அம்மா ஆட்சியாக இருந்தாலும்,அய்யா ஆட்சியாக இருந்தாலும் கேவலம் ஓட்டுக்காக தொழிற்சங்கங்களின் அடாவடித்தனத்துக்கு பணிந்து போவது பலவீனம்தான்!

நான் இந்துவா? .....யார் நான்?

''நீ யார்?''
திடீரென நண்பன் ஒருவன்  என்னைக் கேட்டான் .எதற்காக இப்படி ஒரு கேள்வி எனப் புரியாமல் புருவம் உயர்த்திப் பார்த்தேன் !
''என்ன முழிக்கிறே,எந்த மதத்தை சேர்ந்தவன்னு ,ஸ்கூல் சர்டிபிகேட்டில் எழுதி இருக்கிறே ,அதைதான் கேட்டேன்''என்று சிரித்தான்.
''நீ இந்துன்னுதானே எழுதி இருப்பே,அதைதான் நானும் எழுதி இருப்பேன்.காலம் காலமா அப்படிதானே எழுதிட்டு வர்றாங்க ,இப்ப என்ன புதுசா ஆராய்ச்சி?''என்று பதில் சொன்னேன்.
விடவில்லை அவன்!''நாம்ப இந்து என்பதை எந்த ஆதாரத்தை வச்சு சொல்றோம்  எனக்கு தெரியல உனக்கு தெரியுதான்னுதான் கேட்டேன்''என்றான்.
நாம் இந்து என்பதை எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறோம் என்பது பாட்டன் பூட்டன்களுக்கே தெரிந்திருக்க நியாயம் இல்லை.இந்து கடவுள்களின் பெயர்களை நாள்,நட்சத்திரம் பார்த்து வைக்கிறார்கள்.அதனால் நாம் இந்து!
நண்பனின் கேள்வி என்னைக் குடையவே சிலவற்றை எடுத்துப் பார்த்தேன்.
ஓரளவுக்கு விவரம் கிடைத்தது.
எழுத்தாளர் ராஜேந்திர சோழன் கை கொடுத்தார்.
அவர் எழுதியிருந்ததை தருகிறேன்.

''இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் என்று ஒரு சமூகத்தினர் எப்போதும்  வாழ்ந்திருக்கவில்லை.இங்கு வாழ்ந்திருந்தோறேல்லாம் சமண,பவுத்த,சமயம் சார்ந்தோர்,சைவர்,வைணவர்,சாக்தர்,முருக பக்தர்,அம்மனை வழிபடுவோர் என பல தரப்பட்டோராகவே இருந்தனர்.இசுலாமிய படை எடுப்புக்குப் பின் முஸ்லீம்களும் ,ஐரோப்பிய படையெடுப்புக்குப் பின் கிறித்துவர்களும் இங்கு காலூன்ற இவ்விரு தரப்பினரையும் தவிர்த்த பிற அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் பட்டனர்.

சுதந்திர இந்திய அரசமைப்பு சட்டத்திலும்,மத உரிமை பற்றி கூறும் பிரிவு 25 ல்  இந்துக்கள் என்பதின் விளக்கமாக 'இந்துக்கள் என்னும் சுட்டுக் குறிப்பு சீக்கிய,சமணர்,அல்லது புத்த சமயத்தை வெளிப்பட மேற்கொண்டுள்ளவர்கள் என்னும் ஒரு கட்டுக் குறிப்பை உள்ளடுக்குவதாக  பொருள் கொள்ளப் படுத்தல் வேண்டும் ' என்கிறது.''என எழுதி இருக்கிறார்.
எனக்கு மண்டை காய்கிறது.விவரம் அறிந்தோர் எனக்கு உதவுவார்களா?
அரபு நாடுகளில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் சிந்து நதிக் கரையில் வாழ்ந்தவர்களை அந்த நதியின் பெயர் சொல்லி அழைத்ததால் நாளடைவில் இந்து என்பதாக மருவி விட்டது என்கிறார் இன்னொருவர்.

யார் சொல்வதை நம்ப?




செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் அதிமுக ஜெயிக்குமா?

வரப் போகிற இடைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா?
''இதென்ன கேணத்தனமான கேள்வியா இருக்கு?ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமா?தோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை  அனுப்பி வச்சிருக்காங்க?தப்பித் தவறி தோற்றுவிட்டால் எத்தனை மந்திரிகளின்  டவுசர் கிழியும் என்பது மந்திரிகளுக்கு தெரியாதா?
அப்படி என்றால் ஜனங்களுக்கு மின்வெட்டு இருட்டு,பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வு ,விலைவாசி ஏற்றம் இதெல்லாம் வலிக்கவில்லையா?
வலிக்கும்.ரொம்பவே வலிக்கும்.ஆனாலும் பழகிப் போயிடும்ல!
தேர்தலுக்காக எந்த கட்சி அதிகமா மால் வெட்டும்கிறததானே இப்ப எதிர் பார்க்கிறோம்! கையில மால்.சீட்டுல சின்னம் !வட்டமா பொட்டு வச்சிடுவோம்.பொட்டு இல்லைன்னா பட்டனை தட்டுவோம்.இதான் சார் நம்ம  மக்களின் மன நிலை!



மக்கள் பயப்படுறாங்க.ஆளும் கட்சி தோற்றுவிட்டால் காவல் துறை கண்டபடி கேஸ் போட்டு எதிர்கட்சிகளை ஒருவழி பண்ணிடுவாங்க என்பதால் எதிர்கட்சி புள்ளிகளும் பதுங்கிடுவாங்க!ஆனான பழைய  மந்திரிகளையே அள்ளி குப்பையில போட்டுட்டாங்க.ஜாமீனுக்காக அவங்க  அலைகிறத பார்த்தா பயமா இருக்கு .அவங்களே பதுங்கு குழி தேடுறபோது நம்ம எந்த குழிக்கு போறது என்கிற பயம் எதிர் கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.
அதுமட்டுமில்ல கண்ணா !நாலு முனைப் போட்டி.எதிர்கட்சிகளான திமுக ,மதிமுக ,தேமுதிக இவங்களில் யார் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பதுதான் இப்ப பிரச்னையே!சட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்!வைகோவுக்கு சொந்த தொகுதி.தோற்கலாமா?மான பிரச்னை.
கலைஞர் களம் இறங்கி விட்டார்.தென்மாவட்ட பொறுப்பாளர் அழகிரி அவரின் கை வரிசையை காட்டியாக வேண்டும்.உள்குத்து வேலைகளும் நடக்கும் அதையும் சமாளிக்கணும்.
இப்படி எவ்வளவு பிரசனைகளஅய்யா!
ஆனால் ஆளும் கட்சிக்கு எந்த சிரமும் இருக்க போறதில்ல!தெருவுக்கு ஒரு மந்திரி மாவட்டம்.சதுரம் முக்கோணம் என்று நின்னு இருட்டை சாதகமாக  பயன் படுத்திக் கொள்ள முடியும்.
சிந்தித்து மக்கள் எதையும் எதிர்நோக்கும் தைரியத்துடன் இறங்கினால் மட்டுமே  உண்மையான தேர்தலாக இருக்கமுடியும்.
நடக்குமா?
நம்பிக்கைதான் மனித வாழ்க்கை!
பார்க்கலாம்!

சனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிறது!
இரவு எப்போது வரும் என்கிற ஏக்கம்!
வழக்கம் போல் வந்தது!
கடையில் கூட்டம் இருக்குமோ,இருக்கலாம்!
என்னைப் போல் சனிக்கிழமை காய்ச்சல்
எத்தனை பேருக்கோ!
கூட்டத்தைப் பார்த்தால்
இழக்கவேண்டியது வருமே!

நினைத்துக் கொண்டே போனேன்
வாங்குவதற்கு கூச்சமில்லை!
வாங்கி வைத்துக் கொண்டேன்
லாப்டாப் பையில் !
எப்படி வருவேனோ என்கிற
எதிர் பார்ப்புடன் இல்லத்தரசி!
பையை வாங்கிக் கொண்டாள் !
எனக்கு படபடப்பு!

அவளின் விருப்பமான 'பிராண்ட்' இல்லை!
என்ன சொல்வாளோ என்கிற பயமுடன்
நீராடி திரும்பினேன்!
பாசமுடன் கை பற்றினாள்!
முகம் உயர்த்தி உதடு காட்டினாள்!
காத்திருந்த களவாணி நான்,
வாய் வரிசை காட்டினேன்.
கிறங்கிப் போனாள்!

இதுதான் சமயம் என்று
இறுகத் தழுவ படுக்கையில் சாய்ந்தாள்!
 ''இன்று உன் பிராண்ட் இல்லை,
என் னுடைய பிராண்ட் !''என்றதும்
''இந்த நேரத்தில் என்ன
எனது உனது பிராண்ட் ,?
நீங்களே தொடங்குக''
என தலை திருப்பினாள்
மல்லிகைக்கு பதிலாக
முல்லை அழகூட்டியது!




நடிகையின் அரைகுறை ஆடையின் விளைவு!

ஆடைகள் அணிவது அவரவர் உரிமை!
ஆனால் பொது இடங்களுக்கு ,பொது நிகழ்வுகளுக்கு செல்லும் போது பிறரின் உணர்வுகளை 'கிளராத'  வகையில் நடிகைகள் நடந்து கொள்வது அவசியம், அதற்கு ஆடைகள் அணிவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம்.
'குமுதம் ரிப்போர்ட்டர் 'பத்திரிகையில் வெளியான செய்தியை அலசியபோது  நடிகை பட்ட அவதியை தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆங்கில நாளேடு நடத்திய உணவு விழாவுக்கு வந்திருந்த கவர்ச்சி நடிகை  கண்களுக்கு வெறியேற்றும் வகையில் ஆடைகள் அணிந்திருந்தாராம்.
சிலர் ரசித்திருக்கிறார்கள்.
சிலர் பசித்திருக்கிறார்கள்
நட்சத்திர ஹோட்டலுக்கு வருகிற சிலர் மப்புக்காக வருவது உண்டு.
அப்படி வந்தவர்களில் ஒருவர் அனாயசமாக ஆங்கிலத்தில் அந்த நடிகையுடன்  உரையாட நடிகையும் சகசமாகி இருக்கிறார்.
ஆங்கிலத்தில் பேசினால் இந்த சமூகம் அயோக்கியனையும் மதித்து பொன்னாடை போர்த்தும்.கவுரவமாம்!
ஆங்கிலம் பேசிவிட்டால் உயர்ந்த மனிதனாகி விடுவார்களா?
சே ...கேவலம்!
மச்சான்ஸ் என்று உறவு வைத்து கூப்பிடுவதின் பலன் அன்றுதான் கிடைத்திருக்கிறது!
அந்த ஆள் தவறாக கையை வைத்திருக்கிறான்.
நடிகை அலறி ஒரே அப்பாக அப்ப மற்றவர்களும் சேர்ந்து கும்மி எடுத்து ஹோட்டலுக்கு வெளியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்!
இதெல்லாம் எதனால் வந்தது?
கேடுகெட்ட அரைகுறை ஆடையால்தானே!
இந்த நிகழ்வுக்கு பின்னராவது கவர்ச்சி நடிகைகள் திருந்தினால் நல்லது. 

எம்.ஜி.ஆரின்.படத்தை எடுக்க சொன்ன ரஜினி!

மிகவும் மென்மையான மனிதர் ஏவி.எம்.சரவணன் .ஒரு நாள் பேச்சுவாக்கில் எனது பிறந்த நாளை தேதி,மாத ,வருடத்துடன் சொல்லிவிட்டேன்..சரியாக அந்த நாளன்று ஏவி.எம்.மிலிருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் வந்தது. இன்று வரை வருடா வருடம் வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன.அவரே கையெழுத்திட்டு அனுப்ப செய்கிறார்.இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் வந்து விடுகிறது வாழ்த்துகள்..அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. 'மனதில் நிற்கும் மனிதர்கள்' என்று புத்தக தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.
அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.
நிறைவுகளை மட்டுமே எழுதி இருக்கிறார் .
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி அவரே சொன்னது இனி!
''எங்கள் தயாரிப்பான 'சகலகலாவல்லவன்'படத்தில் கமலுடைய சண்டைக் காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர் வரும்.அந்த குறிப்பிட்ட காட்சியின் போது தியேட்டர்களில் ரசிகர்களின் கை தட்டலும்,விசிலும் அதிகமாக இருக்கும்.அந்த காட்சிக்கு கிடைத்த அதிகப் படியான வரவேற்பை பார்த்து விட்டு நாங்கள் ரஜினியை வைத்து 'பாயும் புலி' எடுத்தபோதும் ஒரு சண்டைக் காட்சியின் போது சுவரில் எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர்  வரும்படி செய்திருந்தோம்.ஆனால் அந்த காட்சியை படம் பிடித்தபோது சுவரில் இருந்த எம்.ஜி.ஆர்.படப் போஸ்டரை எடுக்க சொல்லிவிட்டார்.
நாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என்று விளக்கியபோது கண்டிப்பாக அதனை எடுக்க சொல்லிவிட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணம் ''என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என் படத்துக்கு வர வேண்டும்.எம்.ஜி.ஆர்.என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்கு பாராட்டுக் கிடைக்கசெய்வது நியாமில்லை "
ரஜினியின் கருத்துப் படி அந்த போஸ்டர் அகற்றப் பட்டது.
1996 -ஆண்டில் நடந்த தேர்தலில்  ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி எந்த அளவுக்கு காரணம் என்பதை நாடே அறியும் ஆனாலும் கூட கலைஞர் முதலமைச்சரானதும் அவரை சந்தித்தபோது ''என் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அதை செய்து கொடுங்கள்,இதை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் வரக் கூடாது என்று என் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன்.அப்படியே யாராவது வந்தாலும்  நீங்கள் நம்பவேண்டாம்''என்று  தெளிவு படுத்தியதாக ரஜினியே என்னிடம் சொன்னபோது இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போனேன்'' என்று பதிவு செய்து இருக்கிறார்!
பாராட்டலாம் ரஜினியை!

ஆனால் ஏதோ ஒரு வகையில் கமலை இடிப்பது மாதிரி தெரியவில்லையா?

பிரபுதேவா -நயன் பிரிவு உண்மையா?

நயனும் பிரபுதேவாவும் பிரிந்து  விட்டனர் என்கிறார்கள் சிலர்.
''இல்லை இல்லை ,அது டிராமா''என்கிறார்கள் இன்னும் சிலர்.
என்னதான் நடக்கிறது?
ஏன் இந்த குளறுபடி?
எதற்காக இப்படி ஒரு டிராமா? 
பிரிந்து விட்டால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே ? 
பிரிந்துவிடுவதற்காகவா நயன் மதம் மாறி இந்துவானார்?
பல இடங்களில் விசாரிக்க...!
கிடைத்த தகவல்களை இங்கே கொட்டி இருக்கிறேன்!
ஜனவரி 26 ம் நாள் ஐதராபாத்தில் நடிகர் ரவிதேஜாஒருவிருந்துகொடுத்தார்.அந்த 
விருந்துக்கு நயனும் சென்றிருந்தார்.கலந்து கொண்ட தெலுங்கு இயக்குனர்களில் சிலர் ''மீண்டும் நடிக்க வர வேண்டும்.தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டும்''என்று பேசினார்கள்.
''கல்யாணம் நடக்கவிருப்பதால் சினிமாவை விட்டு விலகப் போகிறார்!'' ராம ராஜ்ஜியம் ''தான் அவரது கடைசி படம் ''என்று அவருக்கு கண்ணீர் மல்க விடை  கொடுத்தஇயக்குனர்களே  ''நடிக்க வாங்க''என அழைத்தது வியப்பாக இருந்தது. 
இந்த நேரத்தில்தான் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதாக மீடியாக்களில் செய்திகள் அடி பட்டன.
தொடர்ச்சியாக நாகார்ஜுனா படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியும்  வந்தது.
 இனி!
ரவிதேஜா விருந்துக்கு பிறகு நடிகர் நாகார்ஜுனா தொடர்பு கொண்டது நயனின்  பழைய மானேஜர் அஜித் என்பவரை!அவர்தான் இன்னமும் நயனின் கால்சீட்  பார்க்கிறார் என்கிற நம்பிக்கையில் பேசி இருக்கிறார்.அவரோ நயனின் கால்சீட் தேதிகளை வேறு ஒருவர் பார்க்கிறார் என சொல்லி நயனின் செல் எண்களை கொடுத்திருக்கிறார்.
இதன் பிறகுதான் பழைய நினைப்பில் அஜித்துக்கு போன் செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..ஹாலிவுட் நிறுவனம் தொடர்பு கொண்டிருக்கிறது.தமிழ் , இந்தி என இரு மொழிகளில் படம் பண்ணப் போவதாகவும் ,நயன் நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறது.
தெலுங்கு நடிகர் ரானா தமிழில் அறிமுகமாகிறார் ஜோடியாக நயன் நடிக்க வேண்டும் ,பெரிய சம்பளம் தருவதாக இன்னொரு ஆப்பரும் வந்தது.மேலும் இரண்டு இந்திப்பட நிறுவனங்களும் அஜித்திடம் பேசி இருக்கின்றன. அவர் தனது மாஜி முதலாளினி நயனிடம் பேசி இருக்கிறார்.
''சிறிது நேரத்தில் பேசுவதாக''சொல்லி சில மணி நேரத்துக்குப் பிறகு லைனுக்கு  வந்திருக்கிறார் நயன். 
''என்னுடைய மேக்கப் மேன் ராஜுவிடம் அந்த விவரங்களை சொல்லி விடுங்கள்'' என்று சொன்னாராம்.
''எதுவாக இருந்தாலும் நம்மிருவரும் தான் பேசிக் கொள்ளவேண்டும்.மூன்றாவது மனிதரின் தலையீடு கூடாது.நாம் பிரிவதற்கு காரணமே மூன்றாவது ஆள் தலையீடுதான்.அந்த தவறை நான் செய்ய மாட்டேன். உனக்கு மானேஜராக இருக்க வேண்டும் என்றால் நேரடியாக என்னுடன் பேசு ''என்று கட் அண்ட் ரைட்டாக பேசி இருக்கிறார்.
இதற்கு பிறகு நயன் அவருடன்  பேசவே இல்லை.
இப்போது நயனின் கால்சீட் தேதிகளை பார்க்கிறவர் ராஜேஷ் என்கிறவர் என்கிறது தமிழ்-தெலுங்கு சினிமா வட்டாரம் 
இவர் நடிகர் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்.நயன் வெளி நாடுகளுக்கு போகும் போது இவர்தான் பாதுகாப்பு அதிகாரியாக செல்வாராம்.இவர் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.
காதல் முறிந்து விட்டது என்பது உண்மையாக இருக்குமேயானால் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரை எப்படி நயன் தனது மானேஜராக வைத்துக் கொள்வார் ?
ஆகவே இருவரும் நாடகம் ஆடுவதாகவே சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது. 
ஆனால் முறிந்து போனதாக சிம்பு வட்டாரம் சொல்கிறது.நயனிடம் கால்சீட் கேட்டவர்களில் சிம்புவும் ஒருவர்!


திங்கள், 20 பிப்ரவரி, 2012

எம் .ஜி.ஆரின் 'அயர்ன் லேடி' மரணம்!

''நல்ல சாவு '' என்கிறார்கள்.
''விடிந்தால் மகாசிவராத்திரி ,யாருக்கு கிடைக்கும் இந்த சாவு!'' என்று பேசியதை கேட்ட போது சாவு வீட்டில் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா?என்று எரிச்சலாக இருந்தது.
1500 படங்களுக்கு மேல் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது டெலிவிசன் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர்.
இடுப்பு எலும்பு முறிந்து படுக்கையில் இருந்த 85 வயது பாட்டி திடீரென வந்த  மாரடைப்பினால் இயற்கை அடைந்துவிட்டார்.அவரின் பெயர் எஸ்.என்.லட்சுமி. பழம் பெரு நடிகை.எம்.ஜி.ஆரின் 'பாக்தாத் திருடனில் படைத் தலைவியாக  நடித்திருக்கிறார்.அந்த படத்தில் 'நிஜப் புலி''யுடன் சண்டை போட்டாராம்.அதற்காக அவரை அயர்ன் லேடி என்று பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
கமல் ஹாசனின் படங்களில் இடம் பெற்று விடுவார்
இதில் அதிசயம் என்ன வென்றால் கடைசி வரை 'செல்வி'யாகவே வாழ்ந்துவிட்டார்.
விருதுநகருக்கு பக்கத்தில் உள்ள சிறு கிராமம் சொந்த ஊர்.இந்த ஊரில் இடம் வாங்கி போட்டிருக்கிறார்.இறந்தபின்னர் தன்னை அந்த இடத்தில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்பது பாட்டியின் ஆசை!.

தவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா? தவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா?

இது சினிமா சம்பந்தப் பட்டதல்ல.
ஆன்மீகவாதிகள் கோபித்துக் கொள்ளக்  கூடாது!
மகா சிவன் ராத்திரிக்கு முதல் நாள்!திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக் கோவிலுக்கு சென்றிருந்தேன்  மனைவி மற்றும் உறவுகளுடன்!
நல்ல கூட்டம்.விடுமுறை நாள் என்பதால் இருக்கலாம்.அன்று கடல் அலைகளும் சீற வில்லை.
சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினால் சுலபமாக ஆண்டவனை சந்திக்கலாம் என்று அங்கு நின்றிருந்த குருக்கள் ஆளாளுக்கு வற்புறுத்தவே அவரிடம் முன்னூறு ரூபாய் வீதம் பத்து டிக்கட் வாங்கப் பட்டது.ஆனால் வி.வி.ஐ.பி.,வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப் படவில்லை.உதாரணமாக அன்று பாலிமர்  தொலைக் காட்சியில் இருந்து 15 பேர் வந்திருந்தனர் .அவர்களுக்கு அந்த தொலைக் காட்சி நிறுவனம் கொடுத்திருந்த கடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டவே பவ்யமாக அவர்களை அழைத்து சென்றனர் .சுவாமி தரிசனம் அவர்களுக்கு மிக சுலபமாகியது.
ஆனால் கட்டணமில்லா பொது சேவை தரிசனத்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் வரிசையில் நிக்கிறார்கள்.கட்டண டிக்கட் வாங்கியவர்களும் தனி வரிசையில் நிற்கிறார்கள்.மொட்டை அடித்த குழந்தைகள் நெருக்கடி காரணமாக அழுகின்றன.எம்.எல்.ஏ.,காவல்துறை அதிகாரிகள்,அறநிலையத் துறை அதிகாரிகள்,பத்திரிகை,மீடியா ஆட்கள் என கடிதம் கொண்டு வருகிறவர்களுக்கு நோகாமல் நொங்கு தின்ன முடிகிறது.ஆண்டவன் தரிசனம்  அவர்களுக்கு சுகமாக ,சுலபமாக கிடைக்கிறது.
 ஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் என்பது பொய்தானே?
ஏமாற்றுவேலை தானே?
கூட்ட நெருக்கடி காரணமாக  கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்கிறார்கள்.வசூலுக்கு இப்படி ஒரு காரணம்.ஆனால் நடப்பதென்ன?தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த எல்லா ஆலயங்களிலும் இத்தகைய   கொள்ளை  நடக்கவே செய்கிறது.பக்தர்களும் உண்மையான பக்தியுடன் அவர்களே வரிசையாக செல்ல முடிவெடுத்தால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாது போய்விடும்.சுலபமாக தரிசம் செய்து வைக்கிறோம் என்று பக்தர்களை அழைத்துக் கொண்டு போகும் குருக்களை ஆலய நிர்வாகம் தடை செய்யுமானால் மக்களுக்கு நல்லது.ஆனால் அவர்களை தடை செய்ய முடியாதாம்.சுப்பிரமணிய சுவாமிக்கும் அவர்களுக்கும் இடையில் 'கனெக்சன்' இருக்கிறதாம்.
இப்படி சொல்லி அந்த தமிழ்க் கடவுளையும் கேவலப் படுத்துகிறார்கள்.
ஆலய வளாகத்தில் உள்ள விடுதிகளில் மது அருந்தக் கூடாது என்று எச்சரிக்கை  வாசகங்கள் இருக்கின்றன.ஆனால் நடப்பதென்னவோ,வேறு!வளாகத்தில் உள்ள விடுதிகளில்தானே சரக்கு அடிக்கக் கூடாது,அங்கு நிறுத்திவைக்கப் படுகிற வேன்களுக்குள் இருந்து கொண்டு சரக்கு அடிக்கலாமா?

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

''கமலுக்கு துணிவு இல்லையா?''

நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படம் டி.டி.எக்ஸ் எபெக்டுடன் மறுபடியும் சென்னையில் வெளியாகிறது.இதற்கான ட்ரைலர் விழாவை அமர்க்களமாக  நடத்தினார்கள்.
மகிழ்ச்சி!ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.!! மக்களுக்கும் மனநிறைவு!அற்புதமான படத்திற்கு நவீன பூச்சு!வரவேற்கத் தகுந்தது !
ஆனால் உறுத்தல்,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நினைவிடம் இருக்கிறது.சிலை இருக்கிறது.இவருக்கு மட்டும் நினைவிடம் இல்லாமல் போனதேன்?
திமுக.என்கிற வலிமையான சக்தி அவரை தாங்கி நின்றது.தனிக் கட்சி அமைத்து தாய்க் கட்சியை தோற்கடித்து ஆட்சியில் அமர்கிற அளவுக்கு செல்வாக்கு வளர்ந்தது.
ஆனால் நடிகர் திலகத்தை காங்கிரஸ் தாங்கி நிற்கவும் இல்லை.தூக்கி நிறுத்தவும் இல்லை.செல்வாக்கு இல்லாத கட்சியில் அவர் வெறும் அலங்கார  பதுமையாகவும் ,கூட்டம் சேர்க்கும் சக்தியாகவும் மட்டுமே இருந்தார்.
காங்கிரஸ் துரோகம் செய்தது.இன்றும் செய்கிறது.
அவருக்கு நினைவு மண்டபம் கட்ட கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இடம் ஒதுக்கித் தரப் பட்டது.நடிகர் சங்கம் பொறுப்பு ஏற்றது.ஆனால் செயல் படவில்லை!
ஏன்?மணிமண்டபம் கட்டுவதற்கு தடையாக இருப்பவர்கள் யார்?
எந்த சக்தி குறுக்கே நிற்கிறது?
பதில் இல்லை!
நடிகர்திலகத்தின் இன்னொரு பிள்ளை என்று சொல்லிக் கொள்கிற கமல் ஹாசனால் கூட கேட்க முடியவில்லை.கேட்டால் ?
வலிக்கிறது நெஞ்சு!!
அவமானப் பட யாரும் தயாராக இல்லை!
''நடிகர் சங்கத்திற்கு மனம் இல்லை ''என்பதே உண்மை!
அவர்கள் நினைத்திருந்தால் என்றோ கட்டி முடித்து சிவாஜிக்கு மரியாதை சேர்த்திருக்கலாம்.
சங்கத்தை பார்த்து கேள்வி கேட்கும் துணிவு நடிகர்களுக்கும் இல்லை என்பதுதான் வெட்கக் கேடு!

முப்பொழுதும் உன் கற்பனைகள்....!

இது விமர்சனம் இல்லை.விமர்சனமாக கருதினால் எனது தவறில்லை.
இனி எனது பார்வை!
இந்த படத்தின் நாயகர்கள் இருவர் .நாயகன் அதர்வாமுரளி ஒளிப்பதிவாளர் சக்தி.
இரண்டு நாயகிகள் இருப்பது போல் நம்மை நம்பவைத்து பின்னர் ஒருவரே என சொல்லும் உத்தி!நாம் நம்புவதுகிடக்கட்டும்நாயகன்நினைக்கவேண்டுமல்லவா,
அதற்காக நாயகனுக்கு விசித்திரமான வியாதி இருப்பதாக சொல்கிறார்கள். வசதி!
யூத் படம் என்றால் பாட்டும்,நடனமும் தூள் பரத்தவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப் படாத விதி.விஜய் வகையறாக்களுக்கு செம போட்டி!அதர்வாவின் மின்னல் வேக ஸ்டெப்ஸ் ...அசைவுகள்.அழகு.வெகு அழகு.கதை என எவரும் மெனக்கெடவில்லை.வெளிநாட்டு ,உள்நாட்டு கட்டிடங்களின் உயர்வை அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சக்தி.ஆர்ட் டைரக்டர் கிரண் சிறப்பாக ஒத்துழைத் திருக்கிறார்.பணத்தை நன்றாக செலவு செய்திருக்கிறார்கள்.
இசை ஜி.வி.பிரகாஷ் குமார்.''யார் அவள் யாரோ'' பாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.மொகமத் இர்பான் என்கிற புதிய பாடகரின்  .குரல் நம்மைக் கட்டிப் போடுகிறது.''கண்கள் நீயே''அருமையான வரிகள் தாமரை எழுதி இருக்கிறார்.படத்தின் முழுப் பாடல்களும் அவரே!மொத்தம் ஆறு பாடல்கள். நடனங்களும் அதிகம்.இவைகளை விட்டால் கதையில் வேறு சம்பவங்கள் இல்லை என்பதால் நிரப்பிவிட்டார்கள்.
சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் தேவை இல்லை என்பது சூப்பர்கள் வந்த பிறகு முடிவாகிப் போன விஷயம்.அதனால் எந்த அளவுக்கு ரோப் பயன்பட  வேண்டுமோ அதற்கும் அதிகமாகவே பயன்படுத்தி அதிர வைத்திருக்கிறார்கள்.கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொள்வது மிகவும் ரிஸ்க்கான ஷாட்.கடுமையான உழைப்பு இருக்கிறது.ஸ்டண்ட் மாஸ்டர்  ராஜ சேகர்  பேசப்படுவார்.
காம்டிக்கென சந்தானம் கழுத்தறுபட்டது நமக்கு!காசு சேர்ந்தது அவருக்கு!
நாயகியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என கவலைப் படவேண்டாம்.
கவர்ச்சியான உடைகளை அணிந்து விதம் விதமாக வருகிறார் அமலாபால்.
அவரது நடிப்பில் உயிர் இல்லை!

நடிகைகளும் குடிப் பழக்கமும்..!

''ஆண்கள் குடிக்கும் போது பெண்கள் குடிப்பது தவறா?
ஆண்களுக்கு சமமாக சம்பாதிக்கிற ஐ,டி.பெண்கள் சர்வசாதாரணமாக பீர் குடிக்கிறார்கள்.மது அருந்துகிறார்கள்.உல்லாசமாக இருக்கிறார்கள்.இதை  எல்லாம்  விட்டுவிட்டு நடிகைகள் மது அருந்தி உல்லாசமாக இருப்பதை  மட்டும் மீடியாக்கள் பெரிது படுத்துவதேன்?''
கவர்ச்சி நடிகை சோனா என்னிடம் கேட்ட கேள்வி.
நான் என்ன பதில் சொல்லி இருக்கமுடியும்!எல்லோரையும் போல் ''பெண்களை தாயாக மதிக்கிறோம்.நமது பண்பாடு ,கலாசாரம் பெண்களை தெய்வமாக மதிக்க சொல்கிறது''என்றேன்.
சட்டென்று ''மிதிக்க சொல்கிறது!''என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் சோனா!
''யாருங்க பொம்பளைங்களை மதிக்கிறா?தாயா நினைக்கிறவன் மாரையா மொறைப்பான்?கண்ணப் பார்த்து பேசுற ஆம்பளைகள் இருக்காங்களா? சும்மா  ஏமாத்து வேலை.குடிச்சிட்டு நடு ரோட்டில பொறலுராணுக .ஆனா நடிகைகள்  நாலு ரூமுக்குள்ள குடிச்சா மீடியாக்கள் பெருசா எழுதுறாங்க.நானும் ஒரு காலத்தில குடிச்சவதான். இப்ப நிறுத்திட்டேன். நாங்க ஏன் குடிக்கிறோம். திமிரா, இல்லை.நிம்மதிக்கு.!நடிகைகள் எவ்வளவு கேவலமா நடத்தப் படுறாங்க தெரியுமா?
அட்ஜஸ்ட் பண்ணிட்டு போம்மான்னு சொல்வாங்க ,அதுக்கு என்ன அர்த்தம்? அவனுக அக்கா தங்கச்சியை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்வானுங்களா?  ஒரு பொண்ணு விருப்பத்தோடு பழகுறத ஏத்துக்குங்க.கம்பல் பண்ணாதீங்க,இதான் நான் சொல்ல விரும்புறது! என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி பிரபல நடிகரின் சித்தப்பா ஏமாத்திட்டார் .விலாவாரியா குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி இருக்கிறேன் படிங்க. '' என்றார் சோனா!
இவரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது எனக்கு ஒரு செய்தி காத்திருந்தது.
நடிகையும் பாடகியுமான ஒரு நடிகையும் ,பணக்காரார் என்கிற பெயரை குறிக்கிற மும்பை நடிகையும் மற்றும் சில சினிமா புள்ளிகளும் நள்ளிரவு வரை நட்சத்திர ஹோட்டலில் குடித்து புரண்டதாக அந்த செய்தி சொன்னது.
இது தவறா?நடிகர்கள் குடித்து மட்டையாவதில்லையா?
சொல்லுங்கள் நல்ல தீர்ப்பை!

வியாழன், 16 பிப்ரவரி, 2012

''மனைவி போனால் இன்னொருத்தி..!''இயக்குனர் மிஸ்கின்!

மனம் விட்டு பேசுவதென்பது சில விழாக்களில்தான் போலும்!
தமிழ் சினிமாவில் புயல் அடிக்கி றது,தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.ஆனால் விழாக்களுக்கு குறைவில்லை.''மாலைப் பொழுதின் மயக்கத்திலே'' பட இசை விழாவுக்கு வழக்கம் போல் இயக்குனர் மிஸ்கின் கருப்புக்கண்ணாடியுடன்   வந்தார்.ராத்திரியிலும் கூலிங் கிளாஸ் போடுகிற  ஆட்களில் மிஸ்கினும் ஒருவர்.முன்பு எலியும் பூனையுமாக இருந்த அமீர்,சேரன் இருவரும் சேர்ந்தே வந்து கலக்குகிறார்கள்.நல்லதே நடக்கட்டும். அந்த விழாவில் சினிமா உலக அறிவிக்கப் படாத வேலை நிறுத்தம் பற்றி அமீர் பேசத் தயங்கவில்லை.
''படம் எடுக்கிறவனும் சந்தோசமா இருக்கான்.நடிக்கிறவனும் சந்தோசமா இருக்கான் ,படம் எடுக்காதவன்தான் பிரச்னை பண்றான்.வேலை செய்யத் தயாரா இருக்கான்,படம் எடுக்கிறதுக்கும் தயாரா இருக்கான்.ஒரு மணி நேரத்தில் முடிகிற பிரச்னை.படம் எடுக்காத யாரோ சிலர் தொழில் நடக்க தடையாக இருக்கிறார்கள்.''என்று விளாசித் தள்ளி விட்டார்.
தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசிவந்த சேரன் இந்த கூட்டத்தில்  தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிலவற்றை சொன்னது வியப்பாக இருந்தது.
இயக்குனர் மிஸ்கினின் மேடை நாகரீகம் வழக்கம் போல் அநாகரீகமாகவே இருந்தது,
படத்தின் இயக்குனர் நாராயணன் தனது குருவான மிஸ்கினை தந்தைக்கு நிகராக பேசிய நேரத்தில் நன்றாக இருந்த ஷூ லேசை கழற்றி மறுபடியும் முடி
போட ஆரம்பித்தார் மிஸ்கின்.''நான் கவனிக்கிறேன் பேர்வழி''என்பதைப் போல் லேசாக தலையை ஆட்டிக் கொண்டார்.
வித்தியாசமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சில அபத்தங்களையும் சொன்னார்.''மனைவியுடன் பகிர்ந்து கொள்ளமுடியாததை அசிஸ்டன்ட் இயக்குனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மனைவி போனால் இன்னொருத்தியை கட்டிக் கொள்ளமுடியும்.அசிஸ்டன்ட் போனால் அவனைப் போல் இன்னொருவன் கிடைக்க மாட்டான்''என்றார் மிஸ்கின்..
நல்ல தத்துவம்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

திமுக--தேமுதிக கூட்டணி நல்லதா?

அன்புள்ளவர்களே, 
                             வணக்கம் பல. நலமா?
                            நாட்டு நடப்புகள் எப்படி இருக்கின்றன?                                                   
                            மதுரைவிமான நிலையத்தில் திமுக வின் இளைஞர் அணித்  தலைவர் தளபதி ஸ்டாலினும்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தும்  சந்தித்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறார்களே,அரசியலில் மாற்றம் ,அதாவது அணி மாற்றம் வருமா? வாய்ப்பு இருக்கிறதா?
                           எனக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டேன்.திமுகவும்,தேமுதிகவும்  அணி சேருமேயானால் எதிர்வரும் காலங்களில் தேமுதிகவை தூக்கி சுமக்க வேண்டியதாகிவிடும்,இப்போது எப்படி காங்கிரசை  சுமக்கிறார்களோ அப்படி   
விஜயகாந்தையும் திமுக சுமக்க வேண்டியதாகி விடும்.தமிழக அரசியலில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாகிவிடுவார் கேப்டன்! என்பதாக அவர்கள் சொன்னார்கள்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
                        திமுகவின் உள் கட்சி விவகாரங்கள்,கோஷ்டி சண்டைகள்  கேப்டனை வளர்த்து விடும்.பொதுக்குழுவுக்கு பின்னர் நடக்கிற மோதல்கள் கழகத்திற்கு பின்னடைவை தரும்.அதை ஆதாயமாக மாற்றிக் கொள்வார் கேப்டன்.ஆக கேப்டனை தனித்து விடுவதே திமுகவுக்கு நல்லது.அவரை உள்ளே இழுத்துக் கொள்வார்களேயானால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிய செயலுக்கு பொறுப்பேற்க வேண்டிடியதாகிவிடும்.இது எனது கணிப்பு! !
                    காங்கிரசைத் தூக்கி சுமப்பதால் நஷ்டம் ஒன்றும் இல்லை!அங்கே மக்களால் மதிக்கப் படும் தலைவர்கள் இல்லை.கோஷ்டிகள் எக்க சக்கம் என்பதால் வலிமையான தலைமை வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால் தேமுதிக வளருமேயானால் அது  திமுகவுக்குதான் ஆபத்து!

                  என்ன நினைக்கிறீர்கள்?


                   அன்புள்ள ,


                மதுரை செழியன் .









                    


                  

திங்கள், 13 பிப்ரவரி, 2012

நடிகைகளின் காதல்..ஏமாற்றமா?

காதலில் வெற்றி பெற்று குடும்பம் நடத்துகிற சில நடிகைகள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
பலர் வெறுத்து வேறு துணையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் காதல் வெறும் நாடகம்தானா?
எதற்காக அப்படி ஒரு நாடகம் ஆடி,கல்யாணமும் செய்து கொண்டு ,பிறகு கழண்டு கொள்வானேன்?
எஸ்கேப்...தப்பித்தல்.ஏதோ ஒரு அழுத்தம் தாங்க இயலாமல் தப்பிப்பதற்காக காதலிக்க வேண்டிய நிர்பந்தம்!
அந்த அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் நடிகைகளின் அம்மாக்கள்தான்!
பெற்றவர்களின் ''வற்புறுத்தலில்''இருந்து தப்பிக்க நடிகை நளினி ஓடிப்போய்  ரகசிய கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை.நளினியின் மகள் திருமணமும் கல்யாண பத்திரிகையுடன் நின்று விட்டது.''உன்னைவிட உங்க அம்மா அழகு'' என்று நளினியைப் பற்றி கணவனாக வரப் போகிறவனே வர்ணித்தால் விளங்குமா?
தேவயானியின் கதையும் பெற்றோரின் பிடியில் இருந்து தப்பித்தல்தானே!சுவர் ஏறிகுதித்துஓடிப்போய்கல்யாணம்செய்துகொண்டதுமஇண்டஸ்ட்ரிஆச்சரியமுடன் பார்த்தது!
நடிகை சீதாவின் நிலைமையும் இதுதான்.
நளினி ,சீதா இருவரும் பிள்ளைகளை பெற்று விட்டு கணவனிடம் இருந்து விலகி வாழ்கிற காதலிகள்.!
சீதா சீரியல் நடிகருடன் நட்பாக இருக்கிறார் என்பது சேதி 
''.இல்லை இவர்கள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார்கள்'' என்று வம்பு சண்டை இழுத்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை,இவர்கள் சண்டை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வரை போனது! 
மாமனின் தொல்லை தாங்காமல் நள்ளிரவில் ஜெமினி கணேசனின் வீட்டுக்கு வந்து விட்டார் சாவித்திரி.அன்றே மனைவியாகி விட்டார்.
இதே மாதிரிதான் புச்பவள்ளியின் கதையும்!
மிரட்டி ஜெமினியை கல்யாணம் செய்து கொண்டு மிரட்டியே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார்.இந்தி நடிகை ரேகா இவர்களின் மகள்.
இவரும் இருமுறை காதல் கல்யாணம் செய்துவிட்டு இப்போது தனிமையில் வாழ்கிறார்.உலக நாயகன் கமல் காதலித்து கல்யாணம் செய்தவர்தானே!சரிகாவை விட்டு விலகி வாழ்கிறாரே!
ஆக நட்சத்திரங்களின் காதல் மின்மினி பூச்சிகளாக இருக்கிறது. 
நடிகர்கள் கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கு ராமனாகவும்,வெளியில் கிருஷ்ணனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இது சினிமாவில் தவிர்க்க முடியாது.இங்கே காதலுக்கு மரியாதை கிடையாது!1

காதல் வாழ்க.காதல் வாழ்க..காதல் வாழ்க!

காதல் இல்லையேல் சாதல் என்று பாடினான் முண்டாசுக் கவி பாரதி.
காதலின் உணர்வு கவனம் சிதைத்ததால் அம்பிகாபதி தடம் மாறினான்.
''சற்றே பருத்த தனமே குலுங்கத் தரள வடந் 
துற்றே அசையக் குழலூசலாட துவர்கொள் செவ்வாய் 
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே ''என்று பாடலில்  காமம் காட்டினான் கம்பனின் மகன்.
சோழன் அவனின் தலை கொய்ய சொன்னான். தெரிந்த கதைதான்! 
காதலைப் பற்றி பேசும் போது லைலா-மஜ்னு வைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.
மஜ்னுவை பார்க்க இயலாமல் மரணப் படுக்கையில் கிடக்கிறாள் .
அருகில் அம்மா!.எப்போது ஜீவன் பிரியும் என்பது புரியாமல்  மகளின் வாடிய வதனம் பார்த்தபடி கண்ணீர் சொரிகிறாள் 
மகள் லைலா அம்மாவிடம் சொல்கிறாள்!
''அம்மா!நான் செத்துவிட்டால் எனது உடலை துணி கொண்டு போர்த்தாதே!
மணமகளைப் போல் அலங்கரி!
மணமகளுக்கு உரிய பொன்னாடைகளை அணிவி!
நான் இன்னும் அழகுடன் திகழ்வேன்!
என் கண்களுக்கு மை இடாதே!
கயசின் காலடி தூசியை இடு!
அவனது துக்கத்தின் இருட்டு 
என் கண்களை தழுவட்டும்!
பன்னீரை தெளிக்காதே,
அவனது கண்ணீரைத் தெளி!
எனது மேனி பளபளக்கும் !
எனது ஆடை சிவப்பாக இருக்கட்டும்,தியாகத்தின் நிறம் சிவப்புத்தானே!
விழாவின்  நிறமும் சிவப்புதான்.
எனது மரணம் கூட விழாதான்!
அவன் வருவான்.
எனதருமை கயஸ் வருவான்.காத்திருப்பேன் அவனுக்காக ! 
என் உயிரைவிட அவன் மேலானவன்!
எனக்காக அவனை அன்புடன் பார்!''
காதலின் வலி தெரிகிறதா வரிகளில்!சாகும் வரை தனது கணவனின் கரம் படாதபடி கண்ணியம் காத்தாள் லைலா!
கயசும் பாடல் பாடி பாலையில் அலைந்தான்.
அவனைப் பைத்தியம் என்றது உலகம்.

அவனாலும் இன்று காதல் வாழ்கிறது!காதல் வாழ்க!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பிரபுதேவாவின் அப்பா குடும்பத்தில் புயல்!

காதலர் தினம் வருகிறதே ,எனது பங்குக்கு பதிவு செய்ய வேண்டாமா?
யோசித்தேன்.சயின்ஸ் டைஜஸ்ட் ஆங்கில இதழில் படித்தது நினைவுக்கு வந்தது.கரடிக் குட்டி தாயின் வயிற்றில் ஏழு மாதம் தான் இருக்கும்.அதன் பின்னர் டெலிவரி!யாரையாவது மறைமுகமாக் திட்ட வேண்டுமானால் ''ஏழு  மாசத்தில் பிறந்தவனே''என்று சொல்லலாம்!கரடியின் இன பெருக்க வேட்கை  ஜூன் மாதம் !ஆண் கரடி இந்த மாதத்தில்தான் பெண் கரடியை தேடி செல்லும்.இங்குதான் ஒரு சிக்கல் !போட்ட குட்டி ஜூன் வரை உயிருடன் இருக்கவில்லை என்றால்தான் பெண் கரடி இணங்கும்.உயிருடன் இருந்தால் நோ லவ்!இப்படி ஒரு நெறி முறை கரடிக்கு!
ஆனால் மனிதன் நாளை டெலிவரி என்றால் முதல் நாள் கூட சும்மா இருப்பதில்லை!
விலங்கிலும் நாம் கேவலமானவர்கள்!
சரி ஒரு வில்லங்கமான காதல் கல்யாணம் இப்போது கோர்ட்டு படிக்கட்டு ஏறி  இருக்கிறது.
பிரபலமான இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப் படுகிற பிரபு தேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் தன்னை காதலித்து ஏமாற்றி  கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி பிள்ளையை கொடுத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.அவருக்கும் எனக்கும் பிறந்து  நாற்பது வயதாகிற முன்னாவுக்கு அப்பா அவர்தான் என்பது ஊருக்கு தெரிய வேண்டும். என்று பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தாரா ஆதாரங்களுடன் நிற்கிறார்.

பிரபுதேவா -நயன்தாரா காதலே அச்சு முறிந்து,ஆரக்கால் இற்று கிடக்கிறது. இந்த நிலையில் ''தாரா ..தாரா வந்தேனே ,சங்கடம் கொண்டு வந்தேனே '' என்று பாடாத  குறையாக கோர்ட்டுக்கு இழுத்திருக்கிறார்.
இவ்வளவு காலம் கழித்து தாரா இப்போது ஏன் குப்பையைக் கிளறுகிறார் தாரா? பிரபு தேவா மீது இருக்கும் வெறுப்பை [இப்படிதான் சொல்கிறார்கள்] மேலும் அதிகப் படுத்தி அவர்களை எந்தவகையிலும் ஒன்று சேரவிடக் கூடாது என்பதற்காகவா? 
அமிதாப்,கோவிந்தாஅனில்கபூர்,கரிஷ்மாகபூர்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி,சிரஞ்சீவி,பாலக்ருஷ்ணா என பிரபலங்களை ஆட்டிப் படைத்தவர் தாரா.ஏறத் தாழ  இரண்டாயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியதாக சொல்கிறார்?
''எங்கள் மகனுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கவேண்டும்.சுந்தரம் மாஸ்டரின் மகன்தான் முன்னா என்பது உலகுக்கு தெரியவேண்டும்.அவனின்  பெர்த் சர்டிபிகேட்டில் கூட அவரின் பெயர்தான் இருக்கிறது. வேண்டுமானால்  டி.என்.ஏ.சோதனைக்கும் தயார்'' என்கிறார்.தாரா.

குணசித்திர நடிகரின் கோணல் புத்தி!

அண்மையில் வந்த 'குமுதம் ரிப்போர்ட்டரில்' ஒரு துணுக்கு செய்தி படித்தேன்.எழுபது வயதை தாண்டிய ஒரு குண சித்திர நடிகர் காதல் லீலையில் 'எல்லையை கடந்து' சென்றதால் மனைவி விவாக ரத்து கேட்டிருக்கிறார் என்றது அந்த செய்தி.
''என்ன கொடுமையா''?என் மனது கேட்டது.
நான் சொன்னேன்,''இதில் என்ன கொடுமை இருக்கிறது?வீட்டில் ருசியா கிடைக்கவில்லை என்றால் வெளியில் சாப்பிடுவதில்லையா?''
''எழுபது வயசுக்கு மேல் என்னையா நாக்குக்கு ருசி?வாயைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாதா?''---எனது மனம்தான் கேட்டது.
''அரிது அரிது மானிடப் பிறவின்னு மனுசனுங்கதானே பாடி வச்சிருக்காய்ங்க !ஆக இந்த பிறவியிலேயே அனுபவிச்சிறனும்னு ஆசை இருக்காதா?புருஷன் கேக்கிறத பொண்டாட்டி கொடுத்துட்டா அவன் ஏன் வேலி தாண்டுறான் ''என்று மனதுக்கு சொன்னேன்.
''இதைத் தான்யா ஆம்பள திமிர்னு சொல்றது?நீ வேலி தாண்டுறமாதிரி பொம்பளையும் தாண்டுனா அவளுக்கு வேற பேரை வக்கிறீங்களே?''--மனசு  கோபமாக கேட்டது.
''அவன் கையாலாகாத புருசனா இருப்பான்.அவளுக்கு வேண்டியதை திருப்தியா கொடுத்துட்டா அவ ஏன் வேலி தாண்டுறா?''
இப்ப மனசு அமைதியாகி விட்டது.
எனக்கு தெரியும் குண சித்திர நடிகருக்கு அவரின் மனைவி எந்த குறையும் வைக்கவில்லை என்பது!
பிறகேன் விவாகரத்து?
அங்குதான் வில்லங்கம்.நடிகர் கையை வைத்தது வீட்டுக்குள்ளேயே!
மனைவியின் பார்வையில் படும்படியாக!
என்ன சொல்கிறீர்கள் இதற்கு?
குணசித்திர நடிகரின் கோணல் புத்தி!

விஜயகாந்த் வீட்டுக்கு முன் ரகளை!

அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருப்பதில் நன்மையையும்,தீமையும் கலந்து இருக்கும் என்பதை அன்றுதான் நேரில் உணர முடிந்தது.
நான் இருப்பது சாலிகிராமத்தில்!ஒருபக்கம் தேமுதிக தலைவர் வீடு.இன்னொரு பக்கம் அதிமுக கவுன்சிலர் வீடு.சற்று தள்ளி நடிகர் வடிவேலு வீடு.
வடிவேலு வீடு தாக்கப் பட்டபோது பலத்த போலிஸ் பாதுகாப்பு.கடுமையான விசாரணைகளுக்கு பின்னர் தான் வீடுகளுக்குப் போக முடிந்தது.டூ வீலர் வைத்திருந்தவர்கள் பாடு பெரும்பாடு.''அப்படி சுத்திப் போ,இப்படி சுத்திப் போ ''என அலைக்கழிப்பு. 
அந்த தொல்லை ஒருவழியாக ஓய்வு எடுத்திருக்கிற நிலையில் இப்போது புதிய தொல்லை.முன்னைவிட கடுமை.கிரிமினல்களைக் கண்காணிப்பது போல்அந்த பகுதியில் குடி இருந்தவர்களை கண்காணித்தனர்.
அந்த பகுதி அதிமுக கவுன்சிலர் மேற்பார்வையில் விஜயகாந்தை கிண்டல் பண்ணி சுவரொட்டிகள் ஓட்டப் பட்டதாகவும் , விஜயகாந்த் வீட்டுக்கு முன்  அதிமுகவினர் கூடி பிரச்னை பண்ணியதாகவும் இருதரப்பினரும் கை கலப்பில்  ஈடுபடக் கூடிய நிலை ஏற்பட்டதாகவும் சொல்லி போலீஸ் படை குவிக்கப் பட்டுவிட்டது.
அந்த பகுதியில் குடி இருந்தவர்கள் வாய் திறக்க முடியவில்லை.திறந்தால் நம்மை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற அச்சத்தின் பேரில் போலீசின் காவலுக்கு அடி பணிந்து போக நேர்ந்தது.
இதே நேரத்தில் ஒரு நன்மையையும் இருந்தது.ஏரியா வஸ்தாதுகள் இரண்டு நாட்கள் அடங்கி கிடந்தார்கள்.குடிமகன்களின் சலம்பல் இல்லாமல் இருந்தது.சந்துகளில் நிறுத்தப் படுகிற வாகனங்களின் தொல்லை இல்லை.அந்த இரண்டு நாட்கள் எங்கே போனதோ தெரியவில்லை.
போலீஸ்காரர்களுக்கு எல்லோருமே சந்தேகத்திற்குரியவர்களாகவே தெரிவார்கள் போலும்.சாவிக் கொத்தை ஆட்டிக் கொண்டு போனால் கூட அதட்டல்.''ஏய் ஒழுங்கா போ''!
இதே மிரட்டலை அந்த பகுதியில் அனுதினமும் அத்துமீறும் அடாவடிப் பேர்வழிகள் மீதும் எடுத்தால் நல்லதாக இருக்கும் ஆனால் எடுக்க மாட்டார்கள். 
அத்து மீறுபவர்கள் எல்லோரும் பல்வேறு அரசியல் கட்சிக்காரகளின்  கைத்தடிகள்.
அவர்களுக்கு மக்கள் மட்டும் அல்ல ,காவல் துறையும் அடங்கிப் போயாக வேண்டும்.
இந்த நிலை என்று மாறும்?
எனக்கு நம்பிக்கை இல்லை!
நாம் தான் ஒடுங்கி வாழ வேண்டும்!

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி !

ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி என்கிற பெயரில் ஒரு சினிமா உண்டு..அந்தக் காலத்துப் படம் .அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி  நடித்திருந்த  படம்.இப்போது இயக்குனர் சேரனின் உதவியாளர் சண்முகராஜ்  இயக்கி வெளிவர இருக்கிற படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.இந்த படத்தின் தயாரிப்பாளர் தேமுதிக .எம்.எல்.ஏ.மைக்கேல் ராயப்பன்.
படத்தின் ஹீரோ வெங்கடேஷ் புதுமுகம்.ஹீரோயின் அக்ஷரா புதுமுகம்.தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசித்தவர்.இவர்கள் மட்டுமல்ல படத்தின் எழுபத்தியொரு நடிக நடிகையரும் புது முகங்கள். இவர்களை திருவண்ணாமலையில் வைத்து 372 நாட்கள் பயிற்சி கொடுத்து பிறகு படமாக்கி இருக்கிறார்,சண்முகராஜ்.
தமிழ்சினிமா உலகில் இதுவரை நிகழாத அதிசயம் இது.
வள்ளுவரின் காமத்துப் பாலில் இருந்து பதினாறு குறள்களை எடுத்து அதன் கருத்தை யுகபாரதி பாடலாக வடித்திருக்கிறார்.
''ஆக காமம் தூக்கலாக இருக்குமோ''?
இயக்குனரிடம் கேட்டேன்.
''காதலும் காமமும்  பிரிக்க இயலாதவை. காமம் உணர்வு சார்ந்தது.அதனால் இந்த பாடலை நாயக நாயகியின் முகம் காட்டாமல் படமாக்கி இருக்கிறேன். 
[தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத துணிச்சலான முயற்சி!]இந்த படத்தை பார்க்கிறவர்கள் எப்படி காதலிக்கலாம்,எங்கே முத்தமிடலாம் ,வாழ்நாள் முழுக்க 
எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.''என்றார்.
இந்த படத்தின் இசைத்தட்டு விழாவுக்கு சேரனும்,அமீரும் வந்திருந்து அருகருகே அமர்ந்திருந்தது வரவேற்கத் தகுந்தது.பெப்சி மேட்டரில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் இவர்கள்.
புதுக் கல்யாணப் பெண் என்பதாக சினேகாவை அறிமுகப் படுத்தினார் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.
அப்படியானால் பிரசன்னா -சினேகா மணவிழா நெருங்கி வருகிறது!
வாழ்த்துகள்! 

சனி, 11 பிப்ரவரி, 2012

ஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........?

கொடிகட்டி வாழ்ந்த மகராசி..
கலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிரி ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சி!
பெருமையாக இருக்கிறது !ஆச்சி மனோரமாவை நினைக்கிறபோது!
இப்படி எல்லாம் புகழுக்கு வருவோம் உச்சியில் அமருவோம் என யாரும்  நினைப்பது இல்லை .அதைத்தான் கவியரசுகண்ணதாசன்  ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ''என்று.பாடி இருக்கிறார்.
திறமையும் வாய்ப்பும் அமைந்துவிட்டவர்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் உறுதியாக உயர்வு பெறுவார்கள் என்கிற சாதனையாளர்கள் பட்டியலில் நமது ஆச்சிக்கும் இடம் உண்டு.தொழில் திறமையைக் காட்டிய ஆச்சி சொந்த வாழ்வில் தோற்றுப் போனார் என்பதுதான் சோகம்!
காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.
குழந்தை ஒன்று கைமேல் பலன்!
கணவர் மற்றொரு கல்யாணம் செய்து கொண்டு ஆச்சியின் கண் எதிரில் துணை நடிகராக வாழ்ந்தார்.எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.கணவருடன் பேச்சு வார்த்தை இல்லை.அவரின் மரணத்திற்கு மட்டும் போய் வந்தார்.பொய்யான வாழ்க்கையை கொடுத்து விட்டுப் போய் சேர்ந்துவிட்டாயே மகராஜா என  புலம்பி இருக்கக் கூடும். 
ஆண் துணை இன்றி அம்மாவின் ஆதரவுடன் திரை உலகின் கடுமையான  கட்டங்களை கடந்து உயரம் வந்தார்.
ஒரே வாரிசு!பூபதி!!
மகனின் வாழ்க்கையிலும் மறுமணம் !அந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டான் ஒரு எழுத்தாளன்.
சொத்து இருந்தும் சுகம் இல்லை.மன நிம்மதி இல்லை என்று இன்று வரை ஆச்சியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது!
பேரன் பேத்திகள் தான் இன்றைய மகிழ்ச்சியின் மிச்சம்!
உருவமே மாறிப் போய் சிகிச்சை பெற்று ஓராண்டுக்குமேல் ஓய்வில் இருந்து மறுபடியும் நடிக்க வந்தார்.
திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். 
ஆக்சிடென்ட் தான் நடந்தது.
அதன் பின்னர் வீட்டுக்குள் வாழ்க்கை.கூண்டுக்குள் அடைக்கப் பட்ட பெண்புலியாக! வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது!மறுபடியும் விழுந்து  
நிரந்தரமாக வீட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறது. 
பேத்தியின் மண விழாவுக்குக் கூட போக இயலவில்லை!
இதற்கு பெயர்தான் விதி என்பதா?