Monday, February 6, 2012

ஜெயலலிதாவின் சவாலும் எதிர்கட்சிகளும்...?


 சங்கரன் கோவில் இடைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப் படாத நிலையில் தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்திருக்கிறார்.அதிமுகவின் நிரந்தரப் பொது செயலாளர் ஜெய லலிதா .
அதிமுகவை பொறுத்தவரை வேட்பு மனு தாக்கலின் கடைசிநாளன்று கூட வேட்பாளர் மாற்றப் படலாம்.இன்றைய மந்திரி நாளைக்கும் மந்திரியாக இருப்பாரா என்பதே சந்தேகம் என்கிற நிலையில்தான் அந்த கட்சியின் நிர்வாகம் இருக்கிறது இந்த நிலையில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்தான் இறுதிப் பட்டியலிலும் இருப்பார் என எப்படி நாம் சொல்ல இயலும்?.ஆளும் கட்சி தான் இடைத் தேர்தலில் வெற்றி பெற இயலும் என்கிற  பொதுவான  நம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது.
இதற்கு காரணம் ஆளும் கட்சியினரால் சுலபமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம்  செய்ய முடிகிறது என்பது தான்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இடைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் என்பது நடக்கவே செய்கிறது.
காவல் துறையினர் முழுமையாக ஆளும் கட்சியின் விசுவாசிகளாக மாறிவிடுவார்கள்.அப்படி மாறாதவர்கள் கடைக்கோடி இடத்துக்கு,தண்ணீர் இல்லாத காட்டுக்கு தூக்கி அடிக்கப் படுவார்கள்.இதனால் காவல் துறை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ''நேர்மையை''பலி கொடுத்து விடுகிறது.
இந்த 'பலி'யையும் மீறி ஆளும் கட்சியை தோற்கடிக்க முடியாதா?
முடியும்.அதற்கு சேதாரம் அதிகமாகும்.ரத்தம் சிந்த வேண்டியது வரும்.
ஆனாலும் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலத்தை இடைத்தேர்தலில்  ஓரளவு  கணிக்கலாம்.இந்த கணித்தலை பா.ம.க. விரும்பவில்லை.இடைத்தேர்தலில் போட்டி இடப் போவதில்லை என சொல்லி விட்டார் ராமதாஸ்.அவரே பொதுக்குழு,செயற்குழு என்பதால் அவரால் இப்படி அறிவிக்க முடிகிறது.''தனித்தே நிற்போம் .திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது எக்காலத்திலும் இல்லை'' என்று அறிவித்தவர் இடைத் தேர்தலை ஏன் தவிர்க்கிறார் என்பது புரிய வில்லை.''இன்று வெள்ளிக் கிழமை.வாளை தொடுவதில்லை '' என ஒரு படத்தில் டி.எஸ்.பாலையா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேருக்கு நேராக  தனக்கு முதல்வர் ஜெயலலிதா  விட்ட சவாலை எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதுதான்  இப்போதைய கேள்வி!''திராணி இருக்கிறதா ''என்று சொன்னதுடன் எந்த அளவுக்கு அந்த கட்சி விமர்சிக்கப் பட்டது என்பதை நாடறியும்.ஆனால் தேமுதிக அதன் இமேஜை காப்பாற்ற என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை 
ஆளும் கட்சிக்கும் வரப் போகிற நாட்கள் அவ்வளவு சாதகமாக இருக்கப் போவதில்லை என்கிறார்கள்.பெங்களூரு நீதி மன்ற தீர்ப்பு இடியாக அமையலாம் என எதிர்பார்க்கிறார்கள்.ஒருவேளை அப்படி நடந்தால் அது திமுகவுக்கு சாதகமாக இருக்குமா,மதிமுகவுக்கு சாதகமாக இருக்குமா  என்பதே இன்றைய கேள்வியாக இருக்கிறது.

3 comments:

சே.கு. said...

பெங்களூரு தீர்ப்பு வந்ததும் சாதகம் கொள்ளப்போவது திமுகவோ மதிமுகவோ அல்ல. நடராசன் அதிமுகவுக்கத்தான் சாதகம். ஏற்கனவே தேமுதிகவிற்கு செக் வைக்கப்பட்டுவிட்டது. பண்ருட்டியார் வேலிதாண்டத்தயார். எனவே தேமுதிகவைப்பற்றி கவலையில்லை. டாக்டர் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொண்டுள்ளார். ஜெ உள்ளே சென்றபிறகு அதிமுகவிற்கு வைகோ செல்வதற்கான வாய்ப்பு உண்டு. திமுகவிலிருந்து அழகிரியும் கனிமொழியும் ஒதுங்கியிருந்தார்கள் என்றால் அவர்களுக்கும் வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.

HOTLINKSIN.com திரட்டி said...

//'இன்று வெள்ளிக் கிழமை.வாளை தொடுவதில்லை '' என ஒரு படத்தில் டி.எஸ்.பாலையா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.//

சூப்பராக சொன்னீர்கள்... அருமை...

Kannan said...

எல்லாம் பதவி பண்ணும் வேலை ஒன்னும் செய்ய முடியாது.,.,.,.

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை. வன்முறைகளி...