புதன், 22 பிப்ரவரி, 2012

மக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா?

எந்த வெங்காய சங்கமாக இருந்தாலும் அது மக்களின் நன்மைக்காக இருக்கவில்லை!அதிமுக ,திமுக,வலது ,இடது கம்யு கட்சிகள் ,தேசிய கட்சிகள்  ஆகியவற்றின் பலமாக விளங்குகிற தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயங்குகிறது,மக்களின் நலன் பற்றி கவலையே படுவதில்லை.
எந்த சங்கமாவது ஆட்டோவில் மீட்டர் படி பயணியிடம் காசு வாங்கு என்று கட்டாயப் படுத்துகிறதா?
கூப்பிட்ட இடத்துக்கு போ ,மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று வற்புறுத்துகிறதா?
பயணிகளிடம் குறைந்த பட்ச மரியாதையாவது காட்டு என சொல்கிறதா?
ஒரு விளக்குமாறும் இல்லை.அடாவடித்தனமான வசூல் ஆட்டோக்காரர்களால் நடக்கிறது.அவமானப் பட விரும்பாத பயணிகள் முன்பக்கம் பின்பக்கம் இரண்டையும் பொத்திக் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது.
இதே மாதிரியான மரியாதைதான் பஸ் கண்டக்டர்களிடமும் கிடைக்கிறது.
ஊதிய உயர்வு ,அலவன்ஸ் என மக்கள் பணத்தில்தான் அவர்கள்   கொழிக்கிறார்கள் என்பதை நினைப்பதில்லை.
ஆட்டோக்காரர்கள் ரேஸ் நடத்தாத குறையாக விரட்டுகிறார்கள்.கேட்டால் ''கம்னு வா சார் .ஒன்னும் ஆகாது ''என்கிறார்கள்.மெஜாரிட்டி ஆட்டோக்களில் ஹார்ன் கிடையாது.இதை காவலும் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் சிட்டியில் ஓடுகிற ஆட்டோக்களில் பாதி அவர்களுடையதுதான்! ஒரு வயதானவர் ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி,கூத்தாடி ,கை கூப்பி கூப்பிட அந்த ஆட்டோ வேகம் எடுப்பதாக ஒரு விளம்பரப் படமே வந்திருக்கிறது.
போக்குவரத்து சிக்னல்களை அரசு பஸ்காரர்கள் ,ஆட்டோக்காரகள் மதிப்பதே இல்லை என்பதுதான் பெரிய சோகம்!
இவ்வளவு அக்கிரமங்களையும் மக்கள் பொருட் படுத்துவதில்லை.பழகிப் போய் விட்டார்கள்.நாளைக்கு எவனாவது  வீடேறி வந்து மிரட்டி காசு கேட்டாலும் கொடுத்து விடுவார்கள்.
தொழிற்சங்கங்களை அரசு கடுமையாக கட்டுப் படுத்தினால் ஒழிய பயணிகளின் வயித்தெரிச்சல் தீரப் போவதில்லை,அல்சர் வந்துதான் சாக வேண்டும்.
எனது சொந்த அனுபவத்தின் வலியைத் தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

அம்மா ஆட்சியாக இருந்தாலும்,அய்யா ஆட்சியாக இருந்தாலும் கேவலம் ஓட்டுக்காக தொழிற்சங்கங்களின் அடாவடித்தனத்துக்கு பணிந்து போவது பலவீனம்தான்!

1 கருத்து:

Kannan சொன்னது…

நீங்கள்.. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...