Tuesday, February 21, 2012

சங்கரன்கோவிலில் அதிமுக ஜெயிக்குமா?

வரப் போகிற இடைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா?
''இதென்ன கேணத்தனமான கேள்வியா இருக்கு?ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமா?தோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை  அனுப்பி வச்சிருக்காங்க?தப்பித் தவறி தோற்றுவிட்டால் எத்தனை மந்திரிகளின்  டவுசர் கிழியும் என்பது மந்திரிகளுக்கு தெரியாதா?
அப்படி என்றால் ஜனங்களுக்கு மின்வெட்டு இருட்டு,பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வு ,விலைவாசி ஏற்றம் இதெல்லாம் வலிக்கவில்லையா?
வலிக்கும்.ரொம்பவே வலிக்கும்.ஆனாலும் பழகிப் போயிடும்ல!
தேர்தலுக்காக எந்த கட்சி அதிகமா மால் வெட்டும்கிறததானே இப்ப எதிர் பார்க்கிறோம்! கையில மால்.சீட்டுல சின்னம் !வட்டமா பொட்டு வச்சிடுவோம்.பொட்டு இல்லைன்னா பட்டனை தட்டுவோம்.இதான் சார் நம்ம  மக்களின் மன நிலை!மக்கள் பயப்படுறாங்க.ஆளும் கட்சி தோற்றுவிட்டால் காவல் துறை கண்டபடி கேஸ் போட்டு எதிர்கட்சிகளை ஒருவழி பண்ணிடுவாங்க என்பதால் எதிர்கட்சி புள்ளிகளும் பதுங்கிடுவாங்க!ஆனான பழைய  மந்திரிகளையே அள்ளி குப்பையில போட்டுட்டாங்க.ஜாமீனுக்காக அவங்க  அலைகிறத பார்த்தா பயமா இருக்கு .அவங்களே பதுங்கு குழி தேடுறபோது நம்ம எந்த குழிக்கு போறது என்கிற பயம் எதிர் கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.
அதுமட்டுமில்ல கண்ணா !நாலு முனைப் போட்டி.எதிர்கட்சிகளான திமுக ,மதிமுக ,தேமுதிக இவங்களில் யார் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பதுதான் இப்ப பிரச்னையே!சட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்!வைகோவுக்கு சொந்த தொகுதி.தோற்கலாமா?மான பிரச்னை.
கலைஞர் களம் இறங்கி விட்டார்.தென்மாவட்ட பொறுப்பாளர் அழகிரி அவரின் கை வரிசையை காட்டியாக வேண்டும்.உள்குத்து வேலைகளும் நடக்கும் அதையும் சமாளிக்கணும்.
இப்படி எவ்வளவு பிரசனைகளஅய்யா!
ஆனால் ஆளும் கட்சிக்கு எந்த சிரமும் இருக்க போறதில்ல!தெருவுக்கு ஒரு மந்திரி மாவட்டம்.சதுரம் முக்கோணம் என்று நின்னு இருட்டை சாதகமாக  பயன் படுத்திக் கொள்ள முடியும்.
சிந்தித்து மக்கள் எதையும் எதிர்நோக்கும் தைரியத்துடன் இறங்கினால் மட்டுமே  உண்மையான தேர்தலாக இருக்கமுடியும்.
நடக்குமா?
நம்பிக்கைதான் மனித வாழ்க்கை!
பார்க்கலாம்!

1 comment:

Kannan said...

நம்பிக்கை தான் வாழ்க்க சார்.......


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...