வியாழன், 23 பிப்ரவரி, 2012

குஷ்புவை எதிர்க்கிறார் வாகையார்!

திரை உலகம் என்றாலே நாக்கை கடிக்கும் பா.ம.க நிறுவன .தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மைந்தன்திரைப் படம் எடுப்பது பற்றி  காற்று கூட விட  வில்லை.
மவுனம் சாதிக்கிறார்.ஒருவேளை ஏனிந்த மவுனம் என கேட்டால் ''மண்ணின் மாண்பினை காப்பாற்ற எடுக்கிறோம் ''என்று சொன்னாலும் சொல்வார்.
சினிமாவினால்தான் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது என்று நெருப்பு உமிழும் இவர் தனது கட்சிக் காரர் படம் எடுப்பது பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? நமக்கு புரியவில்லை!
சினிமாவை விமர்சனம் செய்தபடியே சினிமாவினால் வாழ்கிற 'வீரர்களும்' இருக்கிறார்கள்.'சினிமாவா எடுக்கிறாங்க ?.தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''யில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான்! 'தானே' மட்டும்தான் தமிழகத்தில் பிரச்னையா?
எவ்வளவோ இருக்கின்றன! குறிப்பாக மின் வெட்டு!
இன்னொருவரும் இருக்கிறார் ,தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
''மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற  என்னால் முடியும்.ஆனால் அந்த திட்டத்தை  நான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சொல்வேன்''என்கிறார்.
பசிக்கு அழும் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்காமல் ' அது நான் பெற்ற குழந்தையாக இல்லையே ,எனக்கு பிறக்கும் குழந்தைக்கு ம ட்டும் தான் பால் வாங்கிக் கொடுப்பேன் ' என்று யாராவது சொல்வார்களா?
விஜயகாந்துக்கு இப்போது அவருடைய நண்பர் வாகை சந்திரசேகர் ஆதரவு!இவர் பக்கா திமுக என்பது உலகத்துக்கே தெரியும்!
இவர் சொல்கிறார்,''கலைஞர் தாக்கப் பட்டு மூக்கு கண்ணாடியை சட்ட சபையில் உடைத்ததை விடவா விஜயகாந்த் செய்துவிட்டார்? மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே? விஜயகாந்தை நான் ஆதரிக்கிறேன்'' என்கிறார் வாகையார்.
இவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
''பொதுக்குழுவில் குஷ்புக்கு முதல் வரிசை உங்களுக்கு எங்கேயோ இடம் ,வேதனையாக இல்லையா ,ஒதுக்கப் பட்டது மாதிரி இல்லையா?''
இதற்கு அவரின் பதில்.
''33 வருஷம் கழகத்தில் இருக்கிறேன்.எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள்,போனார்கள்.நான் ஏற்றுக் கொண்ட ஒரே இயக்கம் திமுகதான்.
ஒரே தலைவர் கலைஞர்!.கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என்று அலைபவன் நானில்லை. எனக்கு முன்னாடி யார் இருக்கிறார்கள்,பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப் படவில்லை.கலைஞர் ,தளபதி இருவரும் எனக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது
 எனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்'' என்கிறார்.
இது குஷ்புவுக்கு எதிரான கருத்தாக தெரியவில்லையா?1 கருத்து:

Kannan சொன்னது…

எல்லாம் அரசியல்...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...