செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிறது!
இரவு எப்போது வரும் என்கிற ஏக்கம்!
வழக்கம் போல் வந்தது!
கடையில் கூட்டம் இருக்குமோ,இருக்கலாம்!
என்னைப் போல் சனிக்கிழமை காய்ச்சல்
எத்தனை பேருக்கோ!
கூட்டத்தைப் பார்த்தால்
இழக்கவேண்டியது வருமே!

நினைத்துக் கொண்டே போனேன்
வாங்குவதற்கு கூச்சமில்லை!
வாங்கி வைத்துக் கொண்டேன்
லாப்டாப் பையில் !
எப்படி வருவேனோ என்கிற
எதிர் பார்ப்புடன் இல்லத்தரசி!
பையை வாங்கிக் கொண்டாள் !
எனக்கு படபடப்பு!

அவளின் விருப்பமான 'பிராண்ட்' இல்லை!
என்ன சொல்வாளோ என்கிற பயமுடன்
நீராடி திரும்பினேன்!
பாசமுடன் கை பற்றினாள்!
முகம் உயர்த்தி உதடு காட்டினாள்!
காத்திருந்த களவாணி நான்,
வாய் வரிசை காட்டினேன்.
கிறங்கிப் போனாள்!

இதுதான் சமயம் என்று
இறுகத் தழுவ படுக்கையில் சாய்ந்தாள்!
 ''இன்று உன் பிராண்ட் இல்லை,
என் னுடைய பிராண்ட் !''என்றதும்
''இந்த நேரத்தில் என்ன
எனது உனது பிராண்ட் ,?
நீங்களே தொடங்குக''
என தலை திருப்பினாள்
மல்லிகைக்கு பதிலாக
முல்லை அழகூட்டியது!
2 கருத்துகள்:

Kannan சொன்னது…

மிகவும் அருமை சார்....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

SAMPATH KUMAR சொன்னது…

படிமம் பரவிக்கிடக்கும், புதுக்கவிதைக்கு புள்ளையார் சுழி (தலைப்பு) எதற்கு? என்றா விட்டுவிட்டீர்கள். அருமை!!! அசத்தல்!!! அழகு!!!.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...