Saturday, February 11, 2012

ஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........?

கொடிகட்டி வாழ்ந்த மகராசி..
கலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிரி ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சி!
பெருமையாக இருக்கிறது !ஆச்சி மனோரமாவை நினைக்கிறபோது!
இப்படி எல்லாம் புகழுக்கு வருவோம் உச்சியில் அமருவோம் என யாரும்  நினைப்பது இல்லை .அதைத்தான் கவியரசுகண்ணதாசன்  ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ''என்று.பாடி இருக்கிறார்.
திறமையும் வாய்ப்பும் அமைந்துவிட்டவர்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் உறுதியாக உயர்வு பெறுவார்கள் என்கிற சாதனையாளர்கள் பட்டியலில் நமது ஆச்சிக்கும் இடம் உண்டு.தொழில் திறமையைக் காட்டிய ஆச்சி சொந்த வாழ்வில் தோற்றுப் போனார் என்பதுதான் சோகம்!
காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.
குழந்தை ஒன்று கைமேல் பலன்!
கணவர் மற்றொரு கல்யாணம் செய்து கொண்டு ஆச்சியின் கண் எதிரில் துணை நடிகராக வாழ்ந்தார்.எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.கணவருடன் பேச்சு வார்த்தை இல்லை.அவரின் மரணத்திற்கு மட்டும் போய் வந்தார்.பொய்யான வாழ்க்கையை கொடுத்து விட்டுப் போய் சேர்ந்துவிட்டாயே மகராஜா என  புலம்பி இருக்கக் கூடும். 
ஆண் துணை இன்றி அம்மாவின் ஆதரவுடன் திரை உலகின் கடுமையான  கட்டங்களை கடந்து உயரம் வந்தார்.
ஒரே வாரிசு!பூபதி!!
மகனின் வாழ்க்கையிலும் மறுமணம் !அந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டான் ஒரு எழுத்தாளன்.
சொத்து இருந்தும் சுகம் இல்லை.மன நிம்மதி இல்லை என்று இன்று வரை ஆச்சியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது!
பேரன் பேத்திகள் தான் இன்றைய மகிழ்ச்சியின் மிச்சம்!
உருவமே மாறிப் போய் சிகிச்சை பெற்று ஓராண்டுக்குமேல் ஓய்வில் இருந்து மறுபடியும் நடிக்க வந்தார்.
திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். 
ஆக்சிடென்ட் தான் நடந்தது.
அதன் பின்னர் வீட்டுக்குள் வாழ்க்கை.கூண்டுக்குள் அடைக்கப் பட்ட பெண்புலியாக! வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது!மறுபடியும் விழுந்து  
நிரந்தரமாக வீட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறது. 
பேத்தியின் மண விழாவுக்குக் கூட போக இயலவில்லை!
இதற்கு பெயர்தான் விதி என்பதா? 

4 comments:

சனாதனன் said...

unmai....
nalla pathivu

Kannan said...

ஆச்சியின் வாழ்வில் விதியின் விளையாட்டு.....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Arif .A said...

இது போல் ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது.அவருக்காக நாம் செய்யும் ஒரு உதவி இறைவனிடம் உடல்நலத்தை
முன்னேற்றம் செய்ய வேண்டுவது தான்.பதிவுக்கு நன்றி !

darling doll92 said...

We, all tamils shall pray for her speedy recovery & good health.

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...