Friday, February 17, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்....!

இது விமர்சனம் இல்லை.விமர்சனமாக கருதினால் எனது தவறில்லை.
இனி எனது பார்வை!
இந்த படத்தின் நாயகர்கள் இருவர் .நாயகன் அதர்வாமுரளி ஒளிப்பதிவாளர் சக்தி.
இரண்டு நாயகிகள் இருப்பது போல் நம்மை நம்பவைத்து பின்னர் ஒருவரே என சொல்லும் உத்தி!நாம் நம்புவதுகிடக்கட்டும்நாயகன்நினைக்கவேண்டுமல்லவா,
அதற்காக நாயகனுக்கு விசித்திரமான வியாதி இருப்பதாக சொல்கிறார்கள். வசதி!
யூத் படம் என்றால் பாட்டும்,நடனமும் தூள் பரத்தவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப் படாத விதி.விஜய் வகையறாக்களுக்கு செம போட்டி!அதர்வாவின் மின்னல் வேக ஸ்டெப்ஸ் ...அசைவுகள்.அழகு.வெகு அழகு.கதை என எவரும் மெனக்கெடவில்லை.வெளிநாட்டு ,உள்நாட்டு கட்டிடங்களின் உயர்வை அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சக்தி.ஆர்ட் டைரக்டர் கிரண் சிறப்பாக ஒத்துழைத் திருக்கிறார்.பணத்தை நன்றாக செலவு செய்திருக்கிறார்கள்.
இசை ஜி.வி.பிரகாஷ் குமார்.''யார் அவள் யாரோ'' பாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.மொகமத் இர்பான் என்கிற புதிய பாடகரின்  .குரல் நம்மைக் கட்டிப் போடுகிறது.''கண்கள் நீயே''அருமையான வரிகள் தாமரை எழுதி இருக்கிறார்.படத்தின் முழுப் பாடல்களும் அவரே!மொத்தம் ஆறு பாடல்கள். நடனங்களும் அதிகம்.இவைகளை விட்டால் கதையில் வேறு சம்பவங்கள் இல்லை என்பதால் நிரப்பிவிட்டார்கள்.
சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் தேவை இல்லை என்பது சூப்பர்கள் வந்த பிறகு முடிவாகிப் போன விஷயம்.அதனால் எந்த அளவுக்கு ரோப் பயன்பட  வேண்டுமோ அதற்கும் அதிகமாகவே பயன்படுத்தி அதிர வைத்திருக்கிறார்கள்.கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொள்வது மிகவும் ரிஸ்க்கான ஷாட்.கடுமையான உழைப்பு இருக்கிறது.ஸ்டண்ட் மாஸ்டர்  ராஜ சேகர்  பேசப்படுவார்.
காம்டிக்கென சந்தானம் கழுத்தறுபட்டது நமக்கு!காசு சேர்ந்தது அவருக்கு!
நாயகியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என கவலைப் படவேண்டாம்.
கவர்ச்சியான உடைகளை அணிந்து விதம் விதமாக வருகிறார் அமலாபால்.
அவரது நடிப்பில் உயிர் இல்லை!

1 comment:

Kannan said...

தகவலுக்கு நன்றி..


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...