சனி, 31 மார்ச், 2012

சென்னை மக்களின் வயிறில் அக்னி !

சென்னை முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் என காதுகளை பிளக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.குண்டும் குழியுமான சாலைகளில் பல்லாங்குழி ஆடியபடியே எல்லா வாகனங்களிலும் செல்ல வேண்டியதாக இருக்கிறது.இன்னும் சாலைகளை சீரமைத்த பாடாக இல்லை.பணக்காரர்களும்,அதிகாரிகளும் வாழ்கின்ற ஏரியாக்களில் மட்டுமே  சாலைகள் பளபளக் கின்றன!ஏன் அந்த வசதி நமக்கு கிடைக்கவில்லை என்கிற சிந்தனை இல்லாமல் வயிறில் அக்னி வளர்க்கிறார்கள்.
இப்பவே குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் வாட வேண்டியதாக இருக்கிறது.போகப் போக மக்கள் நாறிப் போவார்கள் போலிருக்கிறது.மாநகராட்சி உறுப்பினர்களிடம் சொன்னாலும் பலன் இல்லை.மேயரும் கண்டு கொள்வதில்லை.பேஸ்புக்கில் சொல்லியும் நோ பலன்!
திமுகவினர் மக்களை நோகாமல் சுரண்டிக் கொழுத்தார் கள் .
மக்களை நோகடித்து அதிமுகவினர் கொழுக்கிறார்கள்.
அதிமுக --திமுக இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இவைதான்!
மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.அவதிப் படுகிறார்கள்.சரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எதிர் கட்சிகளுக்கு தெரியும்.
ஆனால் அவர்கள் கண்டன அறிக்கைகள் ,தீர்மானங்கள் ,உண்ணாவிரதம் என  ஒப்பெற்றிவிட்டுப் போவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
காரணம்.?
அண்மையில் பொது தேர்தல் வரப போவதில்லை.
கடுமையான போராட்டங்களை நடத்தி கைதாகினால் நாளாவட்டத்தில் அதை மறந்து விடுவார்கள்.அரசியல் ரீதியான பலன் எதுவும் இல்லை என்பதால்  எந்த அரசியல் கட்சியும் காலத்தில் இறங்கப் போவதில்லை.
இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.கஷ்டங்களுக்கு மக்கள் பழகிப் போவார்கள்!வாடி வதங்கி நாறினாலும் நாளைக்கு எந்த கட்சி ஓட்டுக்கு அதிக துட்டு வெட்டுமோ அந்த கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார்கள்.
ஆக பட்டினி சாவுகளே நடந்தாலும் மக்கள் கிளர்ந்து எழப்போவதில்லை.அப்படியே எழுந்தாலும் இருக்கவே இருக்கிறது காவல் துறை!
ஆக பொதுத தேர்தல் நெருங்கும்  போதுதான் எதிர்கட்சிகளுக்கு சொரணை பிறக்கும்.
இப்போது மக்கள் படும் கஷ்டங்கள் விஜயகாந்துக்கு தெரியாதா?ராமதாசுக்கு தெரியாதா?கம்யூ.கட்சிகளுக்கு தெரியாதா?
இளைய சமுதாயம் எழுந்தால் ஒழிய மக்களுக்கு நல் வாழ்க்கை இல்லை!

காரியம் நிறைவேறியதால் கை குலுக்கும் அரசியல்!

சசிகலாவுடன் கோபம் என்பதெல்லாம் எதற்காகவோ நடக்கிற நாடகம் தான் என்பது புரிந்தாலும் திரைக்கதை ,வசனம் என்பதெல்லாம் பக்கா நம்பகத்தன்மையுடன் இருந்ததால் நீக்கல்.கைது,வெளியேற்றல் என்பதை நம்பித் தொலைக்க வேண்டியதாகி விட்டது.
ஆனால் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலாவின் பதில்களைப் பார்த்த பின்னர்தான் அந்த பதில்களை அங்கு பதிவு செய்வதற்காக நடத்திய மிரட்டல் நாடகம் என்பது தெரிந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் குற்றசாட்டுகளைப்  படித்தவர்கள் பதறிப் போனார்கள்.
''இவ்வளவு சதியும் 'அம்மா'வுக்கு தெரியாமல் நடந்திருக்கிறதே ''என ஆச்சரியப் பட்டார்கள்.
அவர்கள் மட்டுமல்ல சசிகலாவும் இப்போது ஆச்சரியக் குறிகளை அடுக்குகிறார்!''தனக்கு எதுவுமே  தெரியாது''என்கிறார்.அடடே!அடடே!!
அதை 'அம்மா'வும் நம்புகிறார்!
நல்ல நாடகம்! இருவருமே மக்களை மட்டுமல்ல ,அவர்களது கட்சி தொண்டர்களையும் முட்டாள்களாக்கி இருக்கிறார்கள்!
மிரட்டல் ,அதிகார துஷ்பிரயோகம்,லஞ்சம் என பல்வேறு பிரிவுகளில் கைதாகி இருக்கிற சசிகலாவின் சொந்தங்கள் இனி கவலை கொள்ளத் தேவை இல்லை!
விடுதலை மெதுவாக வந்து சேரும்!
நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அடுத்த முதல்வர் யார் என முடிவு செய்து விட்டனர் ,மன்னார்குடி டீம்தான் எல்லா வேலையும் பார்த்திருக்கிறது ,அதிகாரிகளை பந்தாடியவர்கள் என எப்படி எல்லாமோ நாக்குகளை சுழற்றியவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்.பி.எச் .பாண்டியன் போன்றவர்களை அம்மா தான் காப்பாற்ற வேண்டியதாக் இருக்கும்!

திங்கள், 26 மார்ச், 2012

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவோம்?

தமிழ்நாட்டில் தான் திடீர் பிள்ளையார்கள் முளைப்பார்கள்.வீட்டு சுவர் பக்கம்  சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக அங்கு ஒரு பிள்ளையாரை வைத்து விடுவார்கள்.சென்னையில் பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
முதல்நாள் வரை அங்கு சிறுநீர் கழித்தவன் மறுநாள் அங்கு வைத்திருக்கும் பிள்ளையாரைப் பார்த்து கும்பிடு போட்டு செல்வான்!
ஏன்,எதற்காக திடீர் பிள்ளையார் வந்தார் என நினைப்பதில்லை.
இவனைப் போல எவனும் சிந்திப்பதில்லை!
சிந்தித்து இருந்தால் ஈழத்தமிழர் பிரச்னை இற்றுப் போயிருக்காது.
நாடகமாடிகளை புரிந்திருப்பான். அரசியல் கட்சிகளின் மோசடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பான் .
தமிழ் இன மான உணர்வு என்கிற பொக்கிஷம்  கட்சிகளிடம் அடகு போன பொருளாகி விட்டது!
மீட்க முடியாத உயிரைப் பற்றி இனி புலம்பி ஆவதென்ன?
பல மாதங்களுக்கு முன்னர் திடீர் என்று  தன்னை ஊழல் ஒழிப்பு சித்தர் என ஒருவர் சொல்லிக் கொண்டு அனைத்திந்திய அரசியலில் சுழற்காற்றை ஏற்படுத்தினார்.
அவர்தான் அன்னா ஹசாரே!
அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படலாம்  என்கிற நம்பிக்கை வந்தது. இந்திய துணைக் கண்டமே தூக்கி வைத்துக்  கொண்டாடியது.
தமிழரும் தம்மை மறந்து அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆனால் நடந்ததென்ன?
அன்னா ஹசாரேயும் நாடகமாடி என்பது தெரிந்தது.
அவரை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் தேடிகள் என்பதும் புரிந்தது.
நாடகம் முடிவுக்கு வந்தது.
 மக்கள் அவரை மறந்து விட்ட நிலையில் மறுபடியும் அன்னா வும் அவரது ஆட்களும் டேராவை தூக்கிக் கொண்டு நாடு சுற்ற கிளம்பி இருக்கிறார்கள்.
தமிழர்க்கும் அவர்தம் போராட்டத்துக்கும் ஆதரவு தராத தொலைக் காட்சிகளும் இதர ஊடகங்களும் அன்னா புகழ் பாடத்  தொடங்கி விட்டன!
தமிழன் பெயர் சொல்லியே வளர்ந்த ஊடகங்களும் பின் பாட்டு பாடத் தொடங்கி விட்டன என்பதுதான் கேவலம்!
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவோம்?


ஞாயிறு, 25 மார்ச், 2012

பத்திரிகையாளரை தண்டித்த எம்.ஜி.ஆர்![பத்திரிகையாளன் வாழ்க்கை .5]


நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில் நானும்,தின மலர் நிருபரும் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏராளமான பெண்கள் கைக் குழந்தைகளுடன் நிற்பதை பார்த்து விட்ட எம்.ஜி.ஆர்.தனது காரை நிறுத்த ,தொடர்ந்து வந்த கார்களும் நின்று விட்டன.கான்வாயில் ஏழாவதாக எங்கள் கார் இருந்தது.அன்று எங்களுடன் பயணித்தவர் கார்க்கி.மக்கள் குரலின் மதுரை நிருபரான சண்முகம் எங்களுடன் வந்தாலும் நல்ல தூக்கத்தில் இருந்தார்
நானும் ,தின மலர் நிருபரும் மட்டும்  இறங்கி தலைவர் இருந்த இடத்துக்கு ஓடினோம்.அவரின் பெயர் மறந்து விட்டது.புகைப்படக்காரர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணனுக்குதெரியும்எனநினைக்கிறேன்.ராமநாதன்[ஹிந்து].எஸ் எஸ்.கைலாசம்,[பி.டி.ஐ.] திருமலை [தினமணி] இன்னும் சிலர் அனேகமாக ஓய்வு பெற்று இருப்பார்கள்.இவர்களை நன்றாக தெரிந்தவர் ஜேப்பியார்தான்.
கிராம மக்கள் தங்கள் வறுமையை தலைவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.எங்களுக்கு நல்ல ஸ்டோரி கிடைத்த மகிழ்ச்சி!குறை கேட்ட எம்.ஜி.ஆர்.அவரது காரில் ஏறி அமர்ந்ததும் தொடர்ந்து வந்த எல்லா கார்களுமே வேகமெடுத்தன! நாங்கள் பயணித்து வந்த கார் எங்களை ஏற்றாமலேயே பறந்தது!
நாங்கள் கூச்சலிட்டதை அடுத்தடுத்து வந்த கார்களில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என்றே நினைத்தோம் அந்த இரவில் எங்களையும் கிராமத்தவர்கள் என நினைத்திருக்கலாம்.
எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
நினைத்துப் பாருங்கள்!
எங்களுக்கு உதவியவர்கள் அந்த கிராமத்து மக்கள்தான்.
''சாலையிலேயே நில்லுங்கள்.ஏதாவது டாக்சி வரும் ஏற்றி விடுகிறோம்''என்று சொன்னதுடன் நிற்காமல் பத்து பேர் கூடவே இருந்தார்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு! 
எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களுக்கும் உதவும் குணம் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து ஒரு டாக்சி  வந்தது.அதில் இருவர் மட்டும் இருந்தனர் அருப்புக்கோட்டைக்கு போய் கொண்டிருந்தார்கள்.நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம்.
அருப்புக்கோட்டையில் அவர்கள் இறங்கிக் கொண்ட பின்னர் நாங்கள் பழனிக்கு  புறப்பட்டு விட்டோம்.அங்குதான் நிகழ்ச்சிப் படி எம்.ஜி.ஆர்..தங்கி விட்டு பிற்பகலில் கோவை சுற்று பயணம் செய்வதாக இருந்தது.
பாலகுருவா ரெட்டியார்,காளிமுத்து,ஜேப்பியார் ஆகியோரை சந்தித்து நடந்தவைகளை சொன்னோம்.
தலைவரை பார்த்து சொல்லாமல் மதுரைக்கு போவதாக இல்லை என்பதை பாலகுருவா ரெட்டியாரிடம் உறுதி பட சொல்லவே நாங்கள் கான்வாயில்  பயணித்த கார் டிரைவரை அழைத்து விசாரித்தார்.
''கார்க்கி சார்தான் காரை எடுக்க சொன்னார்.பின்னால வரும் கார் ஏதாவது ஒன்றில் ஏறிவிடுவார்கள் என்று சொன்னதால் கிளம்பி வந்து விட்டேன் ''என உண்மையை சொன்னார்.
எம்.ஜி.ஆர். தூங்கி எழும் வரை நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் காத்திருப்பதை ஜேப்பியார் தலைவரிடம் சொல்லி விட்டார்.
வேறு யாரையும் சந்திக்காமல் எங்கள் இருவரை மட்டும் அழைத்து எம்.ஜி.ஆர் .ஆறுதல் சொன்னதுடன் நாங்கள் மதுரை செல்வதற்கான ஏற்பாடையும் செய்தார்.
சுற்று பயணம் முடித்து சென்னை திரும்பியதும் கார்க்கியை பத்திரிகை அலுவலகம் வருவதற்கு தடை விதித்து தண்டனை கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.எங்கள் மீது காரணமின்றி கார்க்கி வெறுப்பினை வளர்த்துக் கொண்டது காளிமுத்துவுக்கும் தெரியும்.

வியாழன், 22 மார்ச், 2012

வேசி வீட்டு அனுபவம்!

உள்ளத்தில் வெகு காலமாக உறங்கிக் கிடந்த ஆசை.
வேசை வீட்டுக்கு ஓர் நாள் போனால் என்ன?
வீட்டில் கிடைக்காத வித்தியாசமா அங்கு கிடைக்கும்?
அத்தியாயம் அத்தியாயமாக் எழுதலாம் போய் வா!
உள்ளத்தில் சலனம் .உத்திரவு போட்டது.
மனதுக்கு பேய் பிடித்தால் உடலைத் தானே உலுக்கும்?
எழுப்பிவிட்டது மனம்!
கற்பனையில் மிதந்தேன்!
எப்படி எல்லாம் இயங்குவது என எனக்குள் ஓர் ஒத்திகை!
சுகமாகவே இருந்தது நினைப்பு!
வரவேற்கிறான் மாமா.அவனே மல்லிகையாக மணக்கிறான்!
இவனே அப்படி என்றால் அவள் எப்படி இருப்பாள்,?
முல்லையின் மணமா,பிச்சியின் மணமா?
பிச்சி இச்சையை தூண்டும் என்பார்கள்!
அறைக்குள் அழைத்து செல்லப்பட்டேன்.
வசதியான படுக்கை.உடல் நோகாது!
மான்ட் பிளாங் மணக்க வந்தாள்!
பாவாடையும் ரவிக்கையும் மட்டுமே ஆடைகளாக !
அந்த காலத்து கட் ஜாக்கெட் கூருருளையாக
நெஞ்சகத்தை காட்டியது.
மார்பகங்களின் மத்தியில் செத்துவிடு
கவிப் பேரரசின் வரிகளை நினைவூட்டியது!
சாயம் தடவாத அவளது உதடுகள் சாராய கோப்பை.
சரியாத கொங்கைகள் புரியாத மர்மம்!
பைசா நகர கோபுரமே சாய்ந்து கிடக்கும் போது
பலர் நடக்கும் இந்த பாதை மட்டும் பள்ளம் விழாதது ஏன்?
புதிய அனுபவம் என்பதால் கேட்டு விட்டேன்!
சிரித்தாள் அவள்.சிந்தை மயங்கினேன் நான்!
ஜாக்கெட்டின் பின் பக்க ஹூக் லாவகமாக கழட்டியவள்
உள்ளாடையை மட்டும் என் வசம் விட்டாள்!
நானும் கழட்டினேன்.
நான் மட்டும் சரியவில்லை.என் 'ஆசையும்' சரிந்தது!!
இப்போது நீங்களும் சரிந்தீர்கள்.
ஏப்ரல்  ஒன்றின் சிறப்புப் பட்டம் உங்களுக்கு!!! 

வயது வந்தவர்களுக்கு [6 ]

எழிலார்ந்த ,இளமை மிகுந்த ,வலிமையான பெண்கள்தான் அந்த தொழிலுக்கு வர முடியும்.
ஒடிந்து விழும் வாலிபன் வருவான் ,பலசாலியும் வருவான்,காமக் கலையில்  கற்றுத தேர்ந்தவனும் வருவான்.
ஒடிசலாக இருக்கானே என அவனை இழிவாக எண்ணக் கூடாது.அவன்தான் அவளை மூச்சு வாங்க வைப்பான்.வந்ததும் போனதும் தெரியாமல் வேட்டியைக் கட்டிக் கொண்டு போகும் பலவீன பயில்வான்களும் உண்டு.
ஆனால் கற்று தேர்ந்த கைகாரன் சரசமாடுவதற்கு சில நேரமும் சல்லாபிக்க பல  நேரமும் எடுத்துக் கொண்டு இடுப்பை ஒடித்துவிடுவான்.
ஆக இத்தகைய மனிதர்களை சமாளிக்கிற பக்குவம் தாசிகளுக்கு வேண்டும்.வில்லாதி வில்லர்களையும் களைப்படைய செய்யும் கைவேலைகள்  அவர்களுக்கு அத்துபடி!
இவர்களைத் தேடித்தான் வாலிபர்கள் வண்டுகளாக வருவார்கள்.
சுப்ரதீபக் கவிராயர் வர்ணிக்கிறார்!

''மைவார் விழியாள் மதிநுதல்க்கும்- செவ்விக் 
கொடியிடைக்கும் நிலவு எறிக்கும் குருநகைக்கும்--ஒயில்விளைத்த
பிடி நடிக்கும் ,வைரமிட்ட பிரமைமிகுந்த --தொடிகளுக்கும் 
அலை உதித்த அமுதெனச்சொல் அரு மொழிக்கும் இருவிழிக்கும் 
மலைகள் ஒக்கும்  முலைகளுக்கும் மனதுவைத்து --வலையினுக்குள் 
மான் சிக்கினாற்போல் மருள்வாரும்,தூண்டியிலே''


சில வாலிபர்கள் 'மா'ங்குயிலை போல மருவக் கனாக்கண்டு
தூங்குகையில் இந்திரியம் சோர்வாரும் ''என்கிறார்.
அதனால்தான் சிலர் வீரம் பேசுவார்கள் அத்தனையும் பொய்யாக இருக்கும்.
''என்னை அவளுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு,அதான் இரண்டுதடவை அவளுடன் இருந்தேன்  உடம்பு வலிக்குதுடா மாப்ளே!''என்று தனது பலவீனத்தை  மறைக்கப் பார்ப்பார்கள்.

பலவீனமான் பயலுக இருக்கிறானுகளே அவனுக பண்ணுகிற அடிமை வேலைகளையும் கவிராயர் அழகாகச்சொல்கிறார்.எல்லாம் வேசியின் மனதில் தனி இடம் பிடிப்பதற்காகவாம்.நேரில் பார்த்தவர் போல் சொல்கிறார்.

''மஞ்சள் அரைத்து வழிப்பாரும்--கெஞ்சியே 
தேமல் அழகி முகம் சிந்து குறு வேர்வை எல்லாம் 
சோமனால் மெல்லத துடைப்பாரும்--நேமுகமாய்
வண்டு வந்த கண்ணாட்கு மாங்கனியும் தேன்குழலும் 
கொண்டு வந்து தின்னக்  கொடுப்பாரும் --ஒண்தொடிக்குக் 
கால் பிடித்துக் கை பிடித்து நிற்பாரும் 
மால் பிடித்து  நின்று மலைப்பாரும் ''


கோவில் திருப்பணிக்கு யார் யார் என்ன செய்தார்கள் என்பதைப் போல் இந்த வேசித் திருப்பணிக்கு செய்கிற சேவைகளை சொல்கிறார்.

ஆச்சி மனோரமா மறுமுறையும் மருத்துவ மனையில்!

பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டு என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன்!

எல்லாமே கையை விட்டுப் போன பிறகு பிரார்த்தனை மட்டும்தானே எஞ்சி இருக்கிறது.

அது ஒரு வகையில் ஆற்றாமையின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம்.

மிகவும் நேசிக்கப் படுபவர்கள் துன்பத்தின் உச்சத்தில் இருக்கும் போது இல்லாத  கடவுள் மீது கூட கோபம் கொள்வான் நாத்திகன்!

இருக்கிற கடவுள் மீது உரிமையுடன் சண்டையிடுவான் ஆத்தீகன்.

ஆத்திகனும்,நாத்தீகனும் பாசத்தையும் நேசத்தையும் நம்புகிறவர்கள்.

ஆத்திகமும் ,நாத்திகமும் கலந்த புதிய அர்த்த நாரீஸ்வரனாக நான் பிரார்த்தனை செய்கிறேன்!


மறுமுறையும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஆச்சியை நடக்க வைத்து திருப்பி அனுப்பு!


உலகம் முழுவதும் உள்ள ஆச்சியின் ரசிகர்கள்,நலம் விரும்பிகள் பிரார்த்தனை செய்யுங்கள்!

புதன், 21 மார்ச், 2012

வெட்கம் கெட்ட ஜனநாயகம்!

மக்களுக்கு மின் வெட்டைப் பற்றி கவலை இல்லை!
பஸ் கட்டண உயர்வு பற்றி கவலை இல்லை!
விலைவாசி உயர்வு பற்றி கவலை இல்லை.!
கியாஸ்,பெட்ரோல் விலை உயர்வு பற்றியும் கவலை இல்லை.!
ஏனென்றால் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும்,தோற்றாலும்  எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.மின்சாரமும் இப்போதைக்கு சரியாகப் போவதில்லை.ஆனால்
இடைத்தேர்தலினால் சிலபலஆதாயங்கள் அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்திருக்கின்றன.
நல்ல வசூல் ,சிறந்த கவனிப்பு!எல்லா கட்சிகளுமே போட்டியிட்டுக் கொண்டு கவனித்திருக்கின்றன!இவை போதும் அந்த மக்களுக்கு!
அடுத்துவரும் ஆண்டுகளில் சங்கரன் கோவில் வாக்காளர்களும் சராசரி மனிதர்கள்தான்!சிறப்புக் கவனிப்பு என்பதெல்லாம் தேர்தலுடன் சரி!


ஆனால் ,
கவனிக்கவேண்டியது என்ன என்றால் ''நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது ''என்று சவால் விட்ட தேமுதிக படுதோல்வி  அடைந்திருப்பதுதான்!நாலாவது இடம்!.விஜயகாந்த ஆறுதல் அடையக்கூடியது எல்லா கட்சிகளுக்கும் டிபாசிட் காலி என்பதுதான்!

இந்த வெற்றியை பெறுவதற்காக அதிமுகவை சேர்ந்த அத்தனை அமைச்சர்களும் அந்த தொகுதியை முற்றுகை இட்டு வேலை பார்த்தார்கள்.ஒரு இடை தேர்தலுக்காக தலைமைசெயலகமே முகாம் போட்டதை போன்ற உணர்வு!

இந்த வெற்றியை நினைத்து அதிமுக பெருமைப் படத்தேவை இல்லை !
இந்த வெற்றியை பெறுவதற்கு வசதியாக ஆட்சி எந்திரம் கையில் இருந்தது.வேட்பாளர்களின் தகுதியை பார்த்து ஓட்டுப் போடும் காலம் இனி வருமா என்பது சந்தேகம்தான்,கட்சி அடிப்படையில் தேர்தல் நடப்பதால் ஒரு கழிசடை நின்றாலும் செயிக்க முடியும்!


வெட்கம் கெட்ட ஜனநாயகம்!

ஞாயிறு, 18 மார்ச், 2012

வயது வந்தவர்களுக்கு [5 ]

விலை மகளிரிடம் சிலர் லட்சங்களை கொட்டி இருக்கலாம்.
வீடுகளை விற்று வேசியே கதி என சுகித்துப் போயிருக்கலாம்.
கிறங்கி நீயே கதி என மனைவியை மறந்து வாழலாம்.
அது அவன் விதி!
அத்தகையவர்கள் உன்னை நாடி வரலாம்!
வந்தவர்கள் கிடையாக கிடந்தால் என்னாவது?
தாசிவீடு என்பது தனியார் சொத்து அல்ல.
உண்மையான பொது உடமை அங்குதான் இருக்கிறது.!
எல்லோருக்கும் இன்பம் நிறைவாக கிடைக்கும்.
அது சரி ,கோடியாக கொட்டிக் கொடுத்தேனே நான் இங்கேதான் கதி என கிடையாக கிடப்பேன் என கிடந்தால் என்ன செய்வது?
அவர்களை விரட்டிவிடு என்கிறாள் தாய்க் கிழவி!
நாசூக்காக சொல் முதலில் !
''வேசை மனை அம்பலமா?வீணரெல்லாம் கூடிஎன்ன 
பேசுகிறார்?ஞாயமல்ல ,பெண்மயிலே,வாசலிலே 
போகச்சொல்'' என்கிறேன்,போகாவிட்டால் கிட்டப் போய் 
''சோகைத் தடியா!சுடுமுகரா!-ஆகட்டும்!
போ!வெளியிலே!பொது வீடா?--நீ இதற்குக் 
காவ;லா ஒன்கப்பமார் காணியா?'' என கேள் என்கிறாள் கிழவி!
கையில் காசிருந்தாலும் காரியத்தை முடித்துக் கொண்டு போய்க்கொண்டே இரு  இது தான் தாசி வீட்டுக் கொள்கை,கோட்பாடு!
''நான் போக மாட்டேன் ''என அடம் பிடித்தால்?
அதற்கும் வழி இருக்கிறது! ''அதட்டி புத்தி சொல்வேன்!அப்படியும் போகாவிட்டால்--மெத்த மத்த 
ஏசுவேன்!பின் அதிலும் தொட்டிருந்தால்--வாசல்மாறு 
இல்லையா,கையில் எடுக்கிறேன்'' என்கிறாள்.
தாசியின் சரக்கு என்ன சாதாரணமா?
''வட்ட அல்குல் அல்ல இது.;வாலிபர் பொன் அவ்வளவும் 
கொட்டிக் குலுக்கும் குழியடி''
அடேங்கப்பா ,அம்மாக்காரி எப்படி சொல்கிறாள் பாருங்கள் !
வாலிப வயோதிகர்கள் தானமாக கொடுக்கும் பொன்னுக்கும் பொருளுக்கும் ஏற்றபடி ஜலக்கிரீடை செய்து விளையாடும் தடாகமாம் !
''தொட்டு ஏறும் சேனைத் தலைவர்க்கோர் தேரடி!தம்பிமார் 
தாத்தினர் கேற்ற தடாகமடி!'' என்கிறாள் தாய்க்கிழவி! 

எம்.ஜி.ஆருடன் பயணம்.[ பத்திரிகையாளன் வாழ்க்கை.4 ]

தென்மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் .சுற்றுப் பயணம் செய்கிறார் என்றால் அவருடன் செல்லும் பத்திரிகையாளர்களில் நானும் ஒருவனாகி விட்டேன்.சென்னையில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள் ஒரு காரிலும் ,மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தனிக் காரிலும் செல்வது வழக்கம்.மதுரை பத்திரிகையாளர்களில் 'மக்கள் குரல்' சண்முகம் ஒருவர்.தினமலரில் இருந்து யாரேனும் ஒருவர் வருவார்.அத்தனை பத்திரிகையாளர்களையும் ஜேப்பியார் அரவணைத்து செல்வார்.சென்னையிலிருந்து வரும் கார்க்கி எங்களிடம் முரட்டுத் தனமாக  நடந்து கொள்வார்.

அதாவது சென்னைப் பத்திரிகையாளர்கள் என்றால் உயர்ந்த ஸ்டேட்டஸ்  உள்ளவர்கள் என்பது அவரின் நினைப்பு.மேலும் அவர் கட்சியின் பத்திரிகைக்கு எழுதுகிறவர். இரவு ஆகி விட்டால் சரக்கு தேவை.உருவத்துக்கும் அவரது
மீசைக்கும் பொருத்தமே இருக்காது .நல்ல முறுக்கு மீசை!அவரை நான்  சட்டை செய்வதில்லை.எம்.ஜி.ஆரிடம். எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என எனக்கு சொல்லித் தருவார்.அவர் இன்றில்லை.எனவே மறைந்தவரைப் பற்றி எந்த அளவுக்கு சொல்லலாமோ அந்த அளவுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பொதுவாக நள்ளிரவைக் கடந்தாலும் கிராம மக்கள் பெட்ரமாக்ஸ் விளக்குகளுடன் பெருமளவில் காத்திருப்பார்கள்.காரை நிறுத்தி அவர்களிடம் பேசிவிட்டுதான் செல்வார்.சில நேரங்களில் அந்த சந்திப்பு சுவையாக இருக்கும். ஆகவே அவரின் கார் நின்றவுடன் நாங்கள் ஓடிப்போய் நின்று அவர்களது பேச்சை பதிவு செய்து கொள்வோம்.எப்போது எம்.ஜி ஆர்.வருவார் என அந்த நள்ளிரவில் கடும் பனியில் பிள்ளை குட்டிகளுடன் முதியவர்களும் காத்திருப்பதைக் கண்டு வியந்து போவோம்! எம்.ஜி.ஆரின் சிரிப்பில் மயக்கவைக்கும் காந்த சக்தி இருக்கும்.அந்த சக்தி அந்த மனிதனிடம் மட்டுமே  உண்டு.நான் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகன்,வெறியன் எனக் கூட சொல்லலாம். அப்படிப்பட்ட நான் எம்.ஜி.ஆரின் மகத்தான சக்தியை சொல்வது சிவாஜிக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.

பொதுவாக அதிகாலை மூன்று மணி வரை எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணம் இருக்கும்.முடிந்து சர்கியூட் கவுஸ் அல்லது பாண்டியன் ஹோட்டல் திரும்பியதும் பத்திரிகையாளர்களை அழைத்து அன்றைய பயணத்தின் நிறை குறைகளைப் பற்றி கேட்பார்.

மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியிருந்தும் காரை நிறுத்தாமல் வந்து விட்ட இடங்களை சொல்வோம். உடனே பாலகுருவா ரெட்டியார்,அன்பழகன் ஆகிய இருவரை அழைத்து எங்களிடம் பேச  வைப்பார். நாங்களும் சொல்வோம் .இங்கு  நாங்கள் என சொல்வது என்னையும்,தின மலர் நிருபரையும் தான்!
இந்த நெருக்கம் எங்களை திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஊரில் நடுக்காட்டில்  நள்ளிரவில் நிறுத்தி விட்டது!!!

அடுத்தவாரம் சொல்கிறேன்!

சனி, 17 மார்ச், 2012

கல்யாணமானவனுக்கு 'பெண்' ஆசை !


அழகான பெண் சாலையில் போனால் அல்லது ஷாப்பிங் மாலில் ,ஏதோ ஒரு இடத்தில் நின்றால் பார்க்க கூடாதா,அவளின் அழகை ரசிக்கக் கூடாதா?

நான் ரசிப்பேன்!அழகை ரசிப்பது குற்றமல்ல!அவளை விமர்சிப்பது குற்றம்!

விமர்சிக்கும் வகையில் ஆடைகள் அணிந்திருந்தால் அது அவள் குற்றம்!

ஆடைகள் அணிவது  அவளின் உரிமைதான் அதற்காக மார்புகளின் பிதுக்கம் தெரிய உள்ளாடையை இறுக்கிவருவது ஏதோ ஒரு நோக்குடன்தானே!

பிறரின் பார்வையை விரும்புகிறாள் அவள்!அதற்காக செயற்கையாக மார்புகளை நிமிர்த்துக் காட்டுகிறாள்.அதில் அவளுக்கு மகிழ்ச்சி!

பார்க்கிற நமக்கு எழுச்சி!இதுதான் உண்மை.

ஆண்கள் தனது புஜ வலிமையை காட்டுவதற்காக இறுக்கமான உடைகளை அணிவதைப் போல் அவளும் அணிகிறாள்.
பெண்களும் ஆண்களை ரசிக்கிறார்கள்.அவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறார்கள்.கமெண்ட்ஸ் அடிக்கிறார்கள்.

அதைப்போல் தங்களையும் ஆண்கள் பார்க்கவேண்டும் கமெண்ட்ஸ் அடிக்கவேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.

எனவே பெண்களை ரசியுங்கள்! விமர்சியுங்கள்!ஆராதியுங்கள்!எல்லாமே எல்லைக்கு உட்பட்டு!

ஆகவே கல்யாணமானவனுக்கு அழகான பெண்களை காண ,ரசிக்க ,விமர்சிக்க உரிமை உண்டு!

வியாழன், 15 மார்ச், 2012

சங்கரன் கோவிலில் 'டிபாசிட்' காலி!

வான் வேடிக்கைகள்.!
நட்சத்திரங்கள் சர..சர வென விழுகின்றன!
வண்ண வண்ண பூக்கள் மின்னி மின்னி நிலம் நோக்கி வருகின்றன!
சிவகாசியின் மொத்த பட்டாஸ்களும் அங்குதான் ஊழிக் கூத்து ஆடுவதைப் போல் பூமி அதிர்கிறது.
மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் மிதக்கிறார்கள்.
''விடிவு காலம் பிறந்து விட்டதென ''ஆலயங்களில் சர்க்கரைப் பொங்கல் வைக்கிறார்கள்!
ஒட்டு மொத்த ஊடகத்தினரும் ''எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?''என மக்களின்  வாய்க்குள் மைக்கை திணித்து கேட்காத குறையாக துருவித் துருவி கேட்கிறார்கள்.
மைய்ய அரசின் அமைச்சர் ப.சிதம்பரம் பறந்து வந்திருக்கிறார்.
மதுரை அரசினர் விடுதியில் பலத்த காவல்.
முதல்வர் ஜெயலலிதா தனி அறையில்!
பக்கத்திலிருக்கும் பாண்டியன் ஹோட்டலில் கலைஞர்!
வைகோ சற்று தள்ளி இருக்கும் தமிழ்நாடு ஹோட்டலில்!
''இப்போ யாரையும் அண்ணே பாக்கிற மாதிரி இல்ல.ஒபாமாவுடன் பேசிட்டிருக்கார். அதனால தலைவர்களை மத்தியானம் தான் பாப்பாரு.தகவல் சொல்லிடுங்க" என அங்கிருந்த அதிமுக .திமுக ,காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளிடம் சொல்கிறார் பார்த்தசாரதி!
இவர்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயலாளர்.
என்ன இது,இப்படியொரு மாற்றம் என்கிறீர்களா?
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக வரலாறு காணாத வகையில்  வெற்றி பெற்று போட்டியிட்ட அத்தனை கட்சிகளின் டிபாசிட் தொகையையும் காலி பண்ணி விட்டதே!
அதனால்தான் இப்படியொரு மாற்றம்!
ஏங்க,அதிகாலையில் கனா கண்டா பலிக்கும்பாய்ங் களே !இந்த மாதிரி இன்னிக்கி கண்டேனுங்க!!


தமிழ் சினிமாவின் பரிதாப நிலை!

தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கும் ,பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையில்  நடந்து வரும் ஊதிய உயர்வு சண்டை ஒரு முடிவுக்கு எட்டிய நிலையில் ''யாரோ'' சில புண்ணியவான்கள் அணைந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றி  இருக்கிறார்கள்.

அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில்..சென்னையில் தான் படப்பிடிப்பை நடத்த விடவில்லை ஆந்திராவில் போயாவது படப்பிடிப்பை தொடரலாம் என்று போனால் அங்கேயும் விடவில்லை!கட்டையைப் போட்டு நிறுத்திவிட்டார்கள்.நாயகன் கார்த்தி .கன்னத்தில் கை வைத்து கவலையில்!

வேறு நடிகர்களாக இருந்தால் ஹென்நீசிஸ் பிராண்டி நாலு லார்ஜ் அடித்துவிட்டு கால்களுக்கு இடையில் கைகளை கொடுத்துவிட்டு தூங்கி விடுவார்கள்.இவர் சிவகுமார் பெற்ற பிள்ளை.வீட்டுக்கு தெரிந்தால் விவகாரம்  எரிமலையாகி விடும்.

இப்போது தொழிலாளர் துறை உயர் அதிகார்களிடம் மனுவைக் கொடுத்து விட்டு காத்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா  இந்த பிரச்னையை ஆரம்பத்திலிருந்தே கண்டு கொள்ளவில்லை.இவர்களும் ஆராதனை அந்தாதி பாடிப் பார்த்தார்கள்.தோட்டத்து வாசல் பக்கமே போக முடியவில்லை.'தானே'புயல் நிவாரண நிதியை நேரில் கொடுத்து சரிக் கட்டிவிடலாம் என நினைத்து  காத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்துக்கு எதிராக தயாரிப்பாளர்கள் இறங்கி விட்டார்கள் .

முதல்வரின் கருணைப் பார்வை போயே போயிந்தி!!!!
1

அன்புமணியின் கனவுப் பிரதேசம்.

கை இரண்டையும் தலைக்கு அணைவாகக் கொடுத்து மல்லாக்க படுத்தபடி  கற்பனையில் பறக்கிற சுகம் இருக்கே அதிலும் படுத்துக் கொண்டே அட்டினக்கால் போட்டுக் கொண்டால் நாமே ராஜா!நாமே மந்திரி !

அத்தகைய கனவில் இருக்கிறார் பழைய மந்திரி அன்புமணி.

கனவு காண்பது அவரது உரிமை!

அந்த கனவில் அவர்  இங்கிலாந்து நாட்டின் இளவரசராக இருக்கலாம்.அது தவறில்லையே! கனவு காணும் குணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

''திமுக முடிந்துபோன கட்சி.அதிமுக திரும்ப வராது.காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்ல தேவையே இல்லை.விஜயகாந்த் தள்ளாடி வருவார்.''என்று நாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி உண்மையை சொல்லி இருக்கிறார்.!!! எவ்வளவு துல்லியமாக ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்!பலே வெள்ளையத் தேவா!

இவரது சொந்த கட்சியான பா.ம.க.தமிழகத்தில் ஆலமரமாக கிளைகள் விட்டு விழுதுகளை வேர்களாக மாற்றி பரந்து நிற்பது உலகம் அறிந்த உண்மை.இதனால்தான் கேவலம் இடைத்தேர்தலில் நின்று மூச்சை உடைக்க வேண்டாம் என்று பொதுத் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்!

ஏனென்றால் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறவர்கள் அவர்கள்தான்.சங்கரன்கோவிலில் வென்று வீரத்தைக் காட்டுகிற அளவுக்கு எதிரிகள் பலசாலிகளாக இல்லை என்கிறபோது எதற்காக வேட்பாளரை நிறுத்தவேண்டும்?

கருணாநிதி பா.ம.க.வுக்கு ரகசிய தூது விட்டு திமுகவை மட்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறாராம்!எப்பேர்பட்ட ஜாம்பவான் ,அவரே கியுவில் நிற்கிற போது மற்ற துண்டு துக்கடா பொட்டல கட்சிகளைப் பற்றி கவலை படுவானேன்? பொரிகடலை கட்சிகள்!

ஆக தமிழ் மக்களே அடுத்த முதல்வர் அன்புமணி ராமதாஸ்தான்!

கனவு காணுங்கள் தலைவரே!

அதோ போலீஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் பூங்கொத்துகளுடன்  வாசலில் நிற்பது தெரிகிறதா!

''அட்டென்ஷன்....! சல்யூட் ...!''


























/

எம்.ஜி.ஆரும் நானும்...! [பத்திரிகையாளன் வாழ்க்கை .3 ]

மதுரை மாலை முரசு செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
பசுமையான நினைவுகள்!
பதிந்து கிடக்கின்றன ஆழமாய்!

சசிவர்ண தேவர்,மூக்கையா தேவர்,ஏ.ஆர்.பெருமாள் ,வேலாயுதன் நாயர்,கரியமாணிக்கம் அம்பலம்,கோச்சடை பெரியசாமி,கரு.சீமைச்சாமி ,சிங்கராயர்,ஆ.ரத்தினம்,மதுரை முத்து,காவேரி மணியன் ,கு.திருப்பதி என இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் உரையாடி செய்திகளை சூடாக்கி பதிவு செய்த அந்த காலத்தை என்னால் மறக்க இயலாது.

மதுரை முத்து அதிமுகவில் இணைந்து அந்த கட்சிக்கு வலு கூட்டிய நேரத்தில் அமரர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தார்.

அவர் அதிமுக தலைவராக முதல் முறையாக மதுரை வருகிறார்.

பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

ஒவ்வொரு பத்திரிகையாளரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

என் முறையும் வந்தது.

''நான் மணி !.மாலை முரசு'' என்றதும் அவர் முகம் சுருங்கி விட்டது..அந்தகாலக்
கட்டத்தில் தினத்தந்தி,மாலைமுரசு பத்திரிகைகள் அவருக்கு எதிராக செய்திகளை பிரசுரித்து வந்தன.ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக இருந்தன.பொதுவாக இந்த குழும பத்திரிகைகள் ஆளும் கட்சியாக எந்த கட்சி வந்தாலும் ஆதரவு தரும்.

''நான் உங்களை கூப்பிடவில்லையே?''என்றார் எம்.ஜி.ஆர்.

''எங்கு செய்தி கிடைக்குமோ அங்கு  பத்திரிகையாளன் போவதற்கு  தடை இல்லை.இங்கு நான் இருந்தால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது பத்திரிகையில் வரும்.வெளியில் அனுப்பிவிட்டால் நான் என்ன கேள்விப் படுகிறேனோ அதை செய்தியாக்கி விடுவேன்.'' என்றேன்.

எம்.ஜி.ஆர்.மதுரை முத்துவைப் பார்த்தார்.

''மணி,செய்திகளை தப்பா போட மாட்டார் நம்ம பையன்தான்''என்றார்.

எம்.ஜி.ஆர்.சிரித்தபடி ''நான் என்ன சொன்னாலும் திரிச்சுதான் உங்க ஆபிசில் போடுவாங்க''என்றார்.

''இல்லை.யாரோ உங்களுக்கு தப்பான அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இன்னிக்கி உங்க பேட்டியை சாயங்கால மாலைமுரசில் பாருங்க''என்றேன்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தால் கூப்பிடுங்க மணியை என்று சொல்கிற அளவுக்கு அக்கட்சியில் பிரபலமாகி விட்டேன். அன்று அந்த இயக்கத்தில் இருந்த பலர் இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள் .

அமைச்சராக இருந்த கா ளிமுத்துவை அவரது கல்லூரி வாழ்க்கையின் போதே தெரியும்.கல்வித் தந்தை கருமுத்து.தியாக ராசரின் கல்லூரியில்  தீவிர  திமுக வாக இருந்தார்.

அவரும் ந.காமராசனும்.மாணவ பட்டாளத்துடன் ஆவேசமாக முழங்கியபடி முனிச்சாலை ரோடு வழியாக அன்றைக்கு இருந்த ராஜாஜி திடலுக்கு போனார்கள். இன்று அந்த திடல் மார்க்கெட்டாக மாறி விட்டது.அங்கு தான் கட்டாய இந்தி திணிப்பை கண்டிக்கும் வகையில் அரசியல் சட்டப் பிரிவு தாளை எரித்தனர்.

டைப் செய்யப்பட தாள் அது! அது ஓரளவு எரியும் வரை காத்திருந்து பின்னர் அதை கைப்பற்றினார்கள் போலீசார்.காளிமுத்து,நா.காமராசன் இருவரும் கைது செய்யப் பட்டனர்.

அதன் பின்னர்தான் மாணவர் போராட்டம் வலுப் பெற்றது!

அடுத்தும் சொல்வேன்,அடுத்த வாரத்தில்!

செவ்வாய், 13 மார்ச், 2012

வயது வந்தவர்களுக்கு [4]

''தம்பலங்கள் தின்பதற்கும் தப்புமொழி சொல்வதற்கும் 
சும்பனங்கள் செய்வதற்கும் சோம்பாதே !வம்பி பெற்ற  
சேயே !பணம் கொடுக்கும் சீமான்களுக்கு நம் 
வாயே  படிக்க மடி!''

கவிராயர் சொல்வது புரிந்திருக்கும்.இருந்தாலும் புரியாதவர்களுக்கும் புரியவைக்கவேண்டுமல்லவா!
உதடுடன் உதடு பொருத்தி முத்தமிடுவதைப் போல் வாய்க்குள் வாய் வைத்து முத்தம் கொடுப்பதும் ஒரு வகை!
''ஒரு வாய் முத்தம் தருவாய் ''எனப் பாடலே இருக்கிறது.
ருசி கண்டவன் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வருவான்.ஆசையுடன் அணைப்பான்.அப்படியே வாயைக் கவ்வி நாக்கினை நுழைத்து சல்லாபம் செய்வான்.எச்சில் என்று பார்க்காதே!அவன் வாயில் வைத்திருக்கும் வெற்றிலையை சுவைப்பதற்கு தயங்காதே!சும்பனங்கள் செய்வதற்கும் வெட்கப் படாதே!ஆயிரங்களை அள்ளித தரும் சீமான்களுக்கு நம் வாய்தான் எச்சில் படிக்கம்''என்கிறாள் தாய்க் கிழவி!

பொதுவாக கணவன் மனைவி கூட வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு சரசமிடுவது உண்டு.வாசனைப் பாக்கு போட்டுக் கொள்வதை இன்றைக்கும் காணலாம்.
சிலர் அபின் போன்ற போதைப் பொருட்களை வாயில் ஒதுக்கிக் கொண்டு வருவார்கள்.நேரத்தைக் கூட்டுவதற்காக!

அப்படிப் பட்டவர்கள் வந்தால் என்ன செய்வது?

வித்தாரக் கள்ளி அதற்கும் வழி சொல்கிறாள்!


''மருந்து இடுப்பில் கட்டிக் கொண்டு வருவார்சிலர்.மேல் 
இருந்து உடம்பை வாட்டி எடுப்பார்--பரிந்து அணைத்து
கைச்சரசம் போல் தடவி ,கண்டுபிடித்து உடனே 
பிச்சுப் பிடுங்கி ஏறி!பெண் அணங்கே !'' 


மன்மதநூல் படித்த கொக்கோகப் புலிகள் வருவார்கள்.வித்தை தெரிந்தவர்கள். பெண்ணை எப்படி அணுகினால்,எங்கு தொட்டால் அவள் கிறங்கி விழுவாள் என்பது தெரியும் .அதனால் எந்த சென்மம் எடுத்தாலும் சேராதே என்றும் சொல்கிறாள்.

''பொய்யே குலவித்தை.போடுவதே கண்வெட்டு
மெய்யது நாமெது மெல்லியலே '' என்பதின் பொருளே பொய் சொல்வது பாவமல்ல.என்பதுதான்.பொய் சொன்னால் தான் பிழைப்பு நடக்கும் என்பது தாய்க் கிழவியின் கருத்து.

படுகொலைக்கு துணை போனவர்களின் புலம்பல்!

இவர்களை நினைத்துதான் வள்ளுவன்  பாடி இருப்பான் போலும்!
''வாளைப் போல் வெளிப்படையாய் இருக்கும் பகைவர்க்கு பயப்பட வேண்டியதில்லை.ஆனால் உறவினரைப் போல் இருந்து சொந்தம் கொண்டாடி உட்பகை கொண்டவனின் தொடர்புக்கு பயப்படு '' என்கிறான்.

ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் ,துணை போனவர்கள்,சதியாளர்கள் இன்று மத்திய அரசைப்பார்த்து அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு கொடு என சொல்வது பச்சைத் துரோகம் இல்லையா?

சிங்கள இனவெறியர்களுக்கு ஆயுதம் கொடுத்து,ஆலோசனை சொல்லி உதவிய  காங்கிரஸ் கட்சியின்  ஆட்சியை , தடவிக் கொடுத்து பதவிகளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கும் திமுக எந்த உரிமையில் அமரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தர  சொல்கிறது?
மத்திய அரசின் கையில் இன்னமும் ஈழத் தமிழனின் பச்சை ரத்தம் !
காயவில்லை!
இப்போது கூட மத்திய அரசில் இருந்து வெளியேற மனமில்லையே?
 மாவீரன் பிரபாகரனின் சின்ன மகன் ,செல்ல மகன் சுட்டுக் கொல்லப் பட்ட படத்தைப் பார்த்து பொய்யாக கண்ணீர் வடிக்கிறார்கள்.
தோட்டாக்களை கொடுத்து குறி பார்க்க உதவியவர்களே இப்போது இரங்கற்பா  பாடுகிறார்கள்.கேவலம்!

பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது ஒரு நாடகம் என்பது உண்மையான தமிழர்க்கு தெரியும்.

உண்ணாவிரத நாடகம் நடத்தி போர் முடிந்து விட்டது என்று நா கூசாமல் பொய் சொன்னவர்களை இன்னமும் நாடு நம்பினால் ஏழேழு தலைமுறைக்கும் பாவம்!

ஈழத்தில் படுகொலை செய்யப் பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமில்லை. அப்பாவி மக்களும்தான்!

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும்,திமுகவுக்கும் ஆதரவு கொடுப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம்! அவர்களின் பொய்யுரையில் மயங்கிநாட்டை  கெடுத்தது போதும்.

வியாழன், 8 மார்ச், 2012

கஞ்சா கூட்டத்தில் நடிகர் விவேக்!

இப்படி அதிரடியா தலைப்பு கொடுத்தா நம்ம மக்கள் உடனே கிளிக் செஞ்சிடுவாங்க!விவேக் ஏன் அங்க போனாரு என ஓர் ஆர்வம!இன்னும் நிறைய இருக்கு சொல்றேன்!
'கஞ்சா கூட்டம்'' என்பது படத்தின் பெயர்.அனைவரும் புது முகங்கள்!இயக்குநர் உள்பட!இசையும் அவரே தான்!இந்த விழாவுக்குதான் அவர் வந்திருந்தார் .வர்ற வழியில் ஒரு கூத்து.ட்ராபிக் ஜாமில் அப்பு மாட்டிக்கிட்டார்.
நடிகராச்சே !கூட்டம் கூடிடிச்சு.போலீஸ் பதறியபடி வருகிறது
''நீங்க எங்க சார்,இந்த பக்கம்?''என்று பதறுகிறார் ஆபிசர்.
''கஞ்சா கூட்டத்துக்கு வந்தேன்!''
நம்ம ஆளுபதட்ட ப் படாமல் சொல்ல ஆடிப் போனார் அதிகாரி .காமடி செயறதுக்கும்நேரம் இல்லையா?
விவேக் சிரித்தபடியே படத்தைப் பற்றி சொல்ல ''இப்படியெல்லாமா பேரு வப்பாய்ங்க?''என்று போக்குவரத்தை ஒழுங்கு பண்ண போய் விட்டார்.
பிரசாத் லேப் தியேட்டருக்குப் போனால் அதிர்ச்சி!
பா.ம.க.கொடிபோட்ட கார்களில் அந்த கட்சி பிரமுகர்கள் வந்திருக்கிறார்கள்!
''கஞ்சா கூட்டத்துக்கும் பா.ம.க.வுக்கும் என்ன சம்பந்தம்?
முன்னாள் எம்.பி செந்தில் வந்திருந்தார்.
''என்னங்க இது ,சினிமாதான் தமிழர்கலாசாரத்தை சீரழிக்கிதின்னு டாக்டர் அய்யா சொல்றார்.நீங்க பகிரங்கமாகவே கஞ்சா கூட்டம்கிற கலாசார காக்கிற படவிழாவுக்கு வந்திருக்கீங்களே?''என்று கேட்டதும் எதோ விளக்கம் சொன்னார்.
எனக்கு புரியல.அவர்கள் சொல்வதெல்லாம் ஊருக்குதான் அவர்களுக்கு அல்ல. பாமக தலைவர் கோ.க.மணியின் மகன் சினிமா எடுக்கிறார்.இது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாதா? கேட்டால் ஏதாவது விளக்கம் சொல்வார்கள்.
அட போங்கய்யா,நீங்களும் உங்க அரசியலும் !வடிவேலு காமடி மாதிரி இருக்கு!

புதன், 7 மார்ச், 2012

வயது வந்தோருக்கு மட்டும் [3]

தாசி வீட்டில் பிறந்த பெண் குழந்தை 'பெரிய மனுஷி'யாகி இப்போது தொழிலுக்கும் வந்து விட்டாள் !
அம்மாக்காரிக்கு ரொம்ப சந்தோசம் பணம் வந்து கொட்டுமே,அந்த அளவுக்கு மகள் கொப்பும் குலையுமாக ,மப்பும் மந்தாரமுமாக இருக்கிறாளே! இதைவிட  தொழிலுக்கு வேறென்ன வேணும்?
மகளுக்கு அட்வைஸ் பண்ணுகிறாள் ஆத்தாக்காரி!
''எவ்வளவுதான் காசு,பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் ஒருத்தனுக்கே வைப்பாட்டியாக இருக்காதே''என்கிறாள்.
ஒருத்தன் கொடுக்கிற காசில் உத்தமியா வாழ்ந்து என்னத்தை பார்க்க முடியும்?தேசியமயமாக்கி விடு .பணம் பரவலா வந்து கொட்டும் என்பதுதான் இதன் பொருள்.
இன்னும் சொல்றா...!

''செப்பு ....லையை கசக்கிவிட்டு முட்டாள் சரசத்துக்கு
அலையவிடும் பேரை அழையாதே--சிலைனுதலாய் 
முன்பின் அறியார் முடிப்பாக பொன் எழுநூற்று 
ஒன்பது தந்தாலும் மனம் ஒவ்வாதே!--இன்பமுடன் 
கூடுவார்,நித்திரை நீ கொள்வது பார்த்துப் பொடியை 
போடுவார்சேலை வர்க்கம் பொன் உடைமை ---சோடனையாய் 
சேர சுருட்டி அப்பால் செல்வார்,விடிந்த பின் 
ஆரைப் போய் கேட்பதுனாம் ஆரணங்கே?''

மொத்தமா பெரிய தொகையை தருவதாக சொல்வான்.சரி சொல்லிடாதே!நம்பாதே!முன்பின் தெரியாதவன் எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் அதில ஏதோ சூது இருக்கும்! சந்தோஷமா இருந்த காம களைப்பில நீ உன்னையும் மறந்து தூங்கிடுவே!அந்த நேரம் பார்த்து  மயக்கப் பொடியை போட்டு நம்ம பொன் ,பொருள் எல்லாத்தையும் சுருட்டிக் கிட்டு போயிடுவான்.விடிந்த பின் யாரைப் போய் கேட்க முடியும் ,என்கிறாள் அத்தாக்காரி!
அவ சொல்வதிலும்  உண்மை இருக்குல்ல!
உடம்புக்கு உடம்பும் போச்சு.காசுக்கு காசும் போச்சு!
இந்த காலத்திலும் ஓசிக்கு போய் வருகிற போலீசும் இருக்கே!
காசைக் கேட்டா அடிக்க வருவான். ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வைக்க முடியுமா?
ஆகவே பழக்கமில்லாத ஆளை கூப்பிடாதே!

சின்னப்  பயலுக ஆசைப் பட்டு வந்தா என்ன பண்றது?
அதற்கும் வழி  சொல்றா!

''தந்தைக்கீழ் பிள்ளையுண்டு,தாய்க்கீழ் சிறுவருண்டு,
வந்தால் மறைய வரசொல்லி --தந்தமதால் 
வாயில் வடு செய்யாமல் மார்பில் நகம் வையாமல் 
தோயும் இதம் காட்டி சுகம் காட்டு''
திருட்டுத் தனமா வரசொல்லி தடயம் வைக்காமல் கடித்து காயம் உண்டாக்காமல் அனுப்பி விடு என்கிறாள்
 இந்த காலத்துப் பயலுக அவளுகளை சேதம் பண்ணாம வந்தா போதாதா?
சுப்ர தீப கவிராயர் இன்னும் சொல்லி இருப்பதை அடுத்த சனிக்கிழமை சொல்கிறேன்.

விஜயகாந்தின் கல்யாணம்.[பத்திரிகையாளன் வாழ்க்கை.2 ]

சுவையான ,அதே நேரத்தில் மங்களகரமான நிகழ்வை சுட்டிக்காட்டிவிட்டு பயணத்தை தொடங்கலாம் என நினைக்கிறேன்.
நடிகர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களுடன் மிகவும் தோழமையுடன் பழகிய காலம் அது.
மதுரையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் அவருக்கு கலியாணம்.
இரண்டு ரயில் பெட்டிகளில் சினிமா புள்ளிகள்.
பத்திரிகையாளர்களும் ஸ்டண்ட் மாஸ்டர்களும் கலந்து ஒரு பெட்டியில்!
செங்கல் பட்டு கடந்ததும் மது பாட்டில்கள் வந்தன!
கூடவே கார சாரமான கோழி கறி வகைகள்.
ஆளுக்காள் விஜயகாந்துடனான அனுபவங்களை சொல்லியபடியே மஞ்சள் நிற  திரவத்தை இரைப்பைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக் இறக்கினார்கள்! விழுப்புரத்தை தாண்டிய பின்னர்தான் வேடிக்கையான சம்பவங்கள் நடந்தன!
ஒரு மாஸ்டர் நிறை போதையில் வாஷ் பேசின் முன் நின்று கொண்டு கண்ணாடியைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.
சுவாரசியமாக இருந்தது.மறைந்து நின்றபடி அவரின் நடவடிக்கைகளை கவனித்தேன்.
''டேய் ,நீ ரொம்பவும் அழகுடா?''கண்ணாடியில் தெரிந்த அவரது உருவத்துடன்  பேசுகிறார்!''உன்னை அடிக்க ஆளே இல்லடா!நீயும் ஒரு நாள் ஹீரோவா வருவே!விஜயகாந்த் நடிக்கிற பொது அவருக்கு நீ என்ன மட்டமா?''என பேசியபடியே பல கோணங்களில் தன்னைப் பார்த்து ரசித்துக் கொண்டார்.உண்மையில் இப்போது டி.வி.தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து கோப்பை பற்றாக்குறையாகி விட்டது!
பிளாஸ்டிக் தம்ளர்களை நசுக்கிவிட்டு சில பத்திரிகையாளர்கள் புதிய தம்ளர்களை தேடினார்கள். கிடைக்கவில்லை.
சரி அதனால் என்ன ,வாயை திறந்து அண்ணாந்து பார்க்க ''ராவாக''கொஞ்சம் ஊற்றி விட்டு அதற்கு மேல் தண்ணீரை ஊற்றினார் அழைத்து சென்ற பி.ஆர்.ஒ.
அவர் இப்போது  தனியார் தொலைக்காட்சியில் பணி ஆற்றி வருகிறார்.
இன்னொரு பத்திரிகையாளர் அவரது சூட் கேசுடன் மல்லுக் கட்டிய காட்சிதான் அன்றைய ஹை லைட்.
சூட் கேசின் மேல் பகுதி மீது கையை வலுவாக வைத்துக் கொண்டு ஜிப்பை இழுத்து திறக்க பார்க்கிறார்.திறக்க முடியவில்லை!ஏறத்தாழ பெட்டியின் மீது  சாய்ந்த நிலை என்றே சொல்லலாம்!

இப்படி பல வேடிக்கைகள் !

திங்கள், 5 மார்ச், 2012

சங்கரன் கோவில் தேர்தலில்....

சங்கரன் கோவில் தேர்தலில்....
மொத்த அமைச்சர்களுமே அங்கே கூடி விட்டார்கள்.
ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள்.அதிகார மையம் அவர்களின் கீழ்!
தேர்தல் கமிசன் என்பது வெறும் எந்திரம்தான்!இயக்கும் சக்தி யாரிடம் இருக்கிறதோ அவர்களின் விரல் அசைவுக்கு அது  கட்டுப் படும்.


நேர்மையான,அச்சுறுத்தல் இல்லாத ,பணப் பட்டுவாடா இல்லாத இடைத் தேர்தலாக இருக்குமேயானால் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியான முடிவாக இருக்கும்.என்கிறார்கள்!அங்கு சென்று பார்த்தவகையில் அதிருப்தி அலை வீசுகிறது என்பது உண்மை!
ஆனால்...?
ஓன்று கூடி எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் தங்களின் செல்வாக்கினைக் காட்டவேண்டும் என்கிற முனைப்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
வைகோவின் சொந்த தொகுதி என்பதால் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.அது தோல்வியோ,வெற்றியோ தனது பலம் என்ன அன்பதை காட்டியாக வேண்டிய நிர்பந்தம் !
விஜயகாந்துக்கு இது மான பிரச்னை.தன்னால்தான் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது என வாய் நீளம் காட்டி இருக்கிறார் அதனால் .அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தைப் பெற்றாவது திமுகவை திணற அடிக்க வேண்டும்.இது அதிமுகவுக்கு தனது செல்வாக்கு எத்தகையது என்பதை உணர்த்தும் என நம்புகிறார் 
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்றுமே நாங்கள்தான் மாற்று சக்தி என்பதை உறுதிப் படுத்தியாக வேண்டும்.
இப்போது தொகுதியில் மின்சார வெட்டு அவ்வளவாக இல்லை என்றாலும் தொகுதி மக்கள் தேர்தலுக்குப் பிறகு என்னாகும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
காரியம் முடிந்தபின் கரண்டு கட் தங்களின் மென்னியையும் பிடிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு கழுத்தை நெரிக்கிறது.
வேலை இல்லாத்திண்டாட்டம் அப்பகுதி மக்களை வாட்டி வருகிறது.
சாலை வசதிகள் சிறப்பாக இல்லை.
பஸ் கட்டண உயர்வு பெரும் அளவு பாதித்திருக்கிறது.
''ஆட்சிக்கு வந்ததும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப் படும்'' என சொன்னவர் முதல்வர் ஜெயலலிதா 
ஆனால் இடைவெளி விட்டு விட்டு வந்து கொண்டிருக்கிறது மின்சாரம் என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள்   
ஆனாலும் பணம் என்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தாலே அந்த கட்சிக்கு ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள் 
எந்த கட்சி வந்தாலும் தங்களின்நிலை  இதேமாதிரிதான் இருக்கிறது ஆகவே கொடுக்கிற மகராசன் அல்லது மகராசி ஜெயிக்கட்டும் என்கிற நிலையில்  இருக்கிறார்கள்.


தற்போதைய வோட்டு விலைவாசி நிலவரம் இரண்டாயிரம்.







தேர்தல் நெருங்க நெருங்க உயரும் என்கிற நம்பிக்கையில் தொகுதி மக்கள் இருக்கிறார்கள்!!

வயது வந்தவர்களுக்கு..{.இரண்டாம் பகுதி.}

நிறைமாத கர்ப்பிணிக்கு இடுப்புவலி!
அருகில் இருந்த தாதிகள்  அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிக்க தயாரானார்கள்.
''பனிக்குடம் உடைந்து விட்டது''என்கிறாள் ஒருத்தி.
''மூர்ச்சையாகி விட்டாள்'' என்கிறாள் மற்றொருத்தி.
''தலை தெரிகிறது,முடி நிறைய இருப்பதால் நிச்சயம் இது பெண் குழந்தைதான்'' என்று மருத்துவச்சி சொன்னதும் அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது.
தாசி வீட்டில் ஆண் குழந்தை பிறப்பதையா விரும்புவார்கள்?  பெண் குழந்தைதான் வருமானத்திற்கு உதவும்!
மருத்துவச்சி சொன்னதைப் போல் பெண் குழந்தை பிறக்கிறது!
மயக்கம் தெளிந்த அம்மாக்காரி ஆசையுடன் கேட்கிறாள் ''என்ன குழந்தை?''
''பெண்தான்!''
தங்கப் புதையல் எடுத்தது போன்ற சந்தோசத்தில் சேனை வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது!
''தேனே!கனியே!தெவிட்டாத தெள்ளமுதே ,
மானே!என் கண்ணே!மரகதமே!-நான் ஈன்ற 
பொன்னே!என எடுத்துப் பொற் குறங்கு மீதேற்றி 
மின் நேர் இடையாள் விழி பரப்பி -நன்னுதலில் 
பாப்பிட்ட சொல்லி ,வெள்ளிப் பட்டமென வெண் நீற்று 
காப்பிட்டாள்.
செம்பொன் உள்ள பேர்களை உன் 
கைக்குள் வளை என்று வளை கைக்கிட்டாள்'' 
இங்கு குறங்கு என்பதற்கு பொருள் தொடை என்பதாகும்,அதாவது பெண் குழந்தையை பெருமையுடன் பாராட்டி,சீராட்டிவிட்டு பொன் உள்ள பணக்காரர்களை உன் கைக்குள் வளைத்துப் போடு என சொல்லி வளை இடுகிறாளாம் தாய்!
பிறந்த குழந்தைக்கு  இப்படியா சொல்லி வளையல் போடுவார்கள் என்றெல்லாம்  கேட்கக் கூடாது.தாசி வீட்டில் இதுதான் பண்பாடு!
சரவணப் பெருமாள் கவிராயர் சொல்வதையும் கேளுங்கள்!

''காம ரசக் கரும்பே!பெண்ணே!யான் பெற்ற பேறே!
மிச்சமாய் செம்பொன் விளையும் ரசவாதப் 
பச்சிலை ஈது என்று பரிந் தெடுத்தாள்! ''
இரும்பை பொன்னாக்கும் ரசவாத பச்சிலை இது! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்  என சொல்லி குழந்தையையை கொஞ்சுகிறாள் தாய் என்கிறார்  கவிராயர்.
''குண்டுமணி போல்,குரும்பை போல்,பம்பரம் போல்,
செண்டு போல் கொங்கை திமிர் ஏறி _தண்டித்து 
மானும் தி ரண்டாள் :வாலிபர்கள் வந்து வந்து 
தானும் திரண்டார்''
மகளுக்கு அங்க லாவண்யம் படிப்படியாய் பெருத்ததை இப்படி சொல்லி இருக்கிறார் .
அடுத்தது மகளுக்கு தொழில் ரகசியத்தை சொல்லவேண்டும்.
அந்த ரகசியத்தை வருகிற சனிக்கிழமை சொல்கிறேனே?

சனி, 3 மார்ச், 2012

பத்திரிகையாளனின் வாழ்க்கை .பகுதி ஒன்று.

நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல.சுயசரிதம் எழுதும் அளவுக்கு படைப்புகள் படைத்தவனும் இல்லை.
பத்திரிகைத் துறையில் நாற்பது ஆண்டுகள் குப்பை கொட்டி இருக்கிறேன் .இது  எவ்வளவு பெருமைக்குரியது என்பது எனக்குத் தெரியாது.
முதல்வர்கள்பக்தவச்சலம்,காமராஜர்,அண்ணாஎம்.ஜி.ஆர்..கருணாநிதி,ஜெய
லலிதா ஆகியோரை பேட்டி எடுத்திருக்கிறேன் ,திரைவுலகில் சிவாஜி,கமல்.ரஜினி.சிவகுமார்,முத்துராமன் என தொடக்கி இன்றைய கதாநாயகர்கள் வரை பார்த்துப் பழகி இருக்கிறேன்.விவாதங்கள் செய்திருக்கிறேன் .தனுஷ்கோடி அழிவைப் பார்த்தவன் ,கொடகனாறு அணைக்கட்டு உடைந்த கொடுமையை பார்த்தவன்,என பல இயற்கை சீற்றம்  கண்டிருக்கிறேன்.

இதனால் நான் சுய சரிதம் எழுதும் தகுதியை பெற்றதாக நினைக்க வில்லை.


எனக்குள் இருக்கும் வலிகள் ,மகிழ்ச்சி இவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன்.கவிப் பேரரசு வைரமுத்து ஒருமுறை நான் அதிக   அளவில் பாதிக்கப் பட்டபோது ''துயரங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.அதுவும் நம்முடைய உறுப்புகளில் ஒன்று  என நினைத்துக் கொண்டு சிகிச்சை செய்து கொள்ளுங்கள் .வலி தெரியாது ''என்றார்.

அதை எப்போதும் நினைவில் வைத்து கொண்டு இதுநாள் வரை வண்டியை  ஓட்டி வருகிறேன்.

தினமலர்  தமிழ்நாடு ,மதுரை மாலைமுரசு,தேவி,எனத் தொடங்கி குமுதம் டாட் காம்,குமுதம் ரிப்போர்ட்டர்,என வளர்ந்து இன்று ''குமுதம்'' வார இதழில் நிலை கொண்டிருக்கிறேன்.

நான் எப்படிப் பட்டவன் நல்லவனா ,கெட்டவனா என்பதை  தொடரைப் படிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

இத்தனை வருடங்கள் பத்திரிகையாளனாக வாழ்ந்தும்,தமிழக அரசின் 'கலை மாமணி' விருது பெற்றிருந்தும் சொந்தமாக வீடு இல்லை!வங்கியில் ஆயிரம் வரை இருப்பு.நானும் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள வேண்டாமா?சமூகத்தில் எனக்கு இருக்கும் உயர்ந்த பட்ச  தகுதி இதுதான்!

இன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தபோது 'தேவி'வார இதழில் தொடர்ந்து கேள்வி பதில் எழுத வேண்டும் எனக் கேட்டேன்.மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார்.அப்போது அந்த வார இதழ் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது. இருந்தும் எழுத ஒப்புக் கொண்டார்.

வாரம் தோறும் கேள்விகளுடன் போயஸ் கார்டன் சென்று அதற்கான பதிலை எழுதிக் கொண்டு வருவேன்.மிகவும் மென்மையாகப் பேசுவார்.

அவர் 'தேவி'யில் எழுதிவருவது கட்சியில் இருந்த வலம்புரி ஜானுக்கு பிடிக்கவில்லை.

பிடிக்கவில்லையா அல்லது கட்சியின் உயர்மட்டத் தலைவர் யாரேனும் நிர்ப்பந்தம் செய்தனரா என்பது தெரியாது.எட்டுவாரங்கள் கேள்வி பதில்  வெகு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த நிலையில் திடீர் என ஜெயலலிதா தொலை பேசியில் என்னை அழைத்தார்.

இல்லம் சென்றேன்

என்ன நடந்தது?


வருகிற சனிக்கிழமை சொல்வேன்!






வெள்ளி, 2 மார்ச், 2012

வயது வந்தவர்க்கு மட்டுமே...!


வயது வந்தவர்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்றால் கேட்கவா போகிறார்கள்?இதைத் தான் விரும்பிப் படிக்கிறார்கள்.
டி வி. விளம்பரம் ஒன்றில் ஒரு பொடியன் படுத்திருக்கிறான்.அரைக்கால் டவுசர்  போட்ட அந்த பையனை நாய் எழுப்பி வெளியில் கூட்டி செல்கிறது. சைக்கிளில் வரும் சிறுமி ஓரக்கண்ணால் பொடியனைப் பார்க்க இவனும் பார்க்கிறான்..இது களுக்கு அந்த வயதிலேயே காதல் .நாய் விடு தூது.
அதனால் இங்கே நான் சொல்லப் போவதை அவர்கள் படித்தாலும் கெட்டு விட மாட்டார்கள்.
நீங்கள் விரலி விடு தூது படித்திருக்கிறீர்களா?
படிக்கவில்லை என்றால் வேஸ்ட் .இதை படித்துவிட்டாவது அந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
தாய்க் கிழவி தனது மகளுக்கு புத்தி சொல்கிறாள்!தாய்க் கிழவி என்கிற போதே உங்களுக்கு புரிந்திருக்கும்.தாசிகளை பற்றியது என்பது!
''அடியே மகளே!நமக்கு ஏழைகள் தாண்டி தெய்வம்.புல்லு விற்ற காசும் ,கீரை விற்ற காசும் நமக்குத்தாண்டி மகளே!
பல் விழுந்த கூனல் கிழவன் கொடுக்கும் பணமதில்

நானக் குழலே!நரை உண்டோ?-மானம் இன்றி 
அப்பன் வருவான் ,அவன் பின் மகன் வருவான்.
தப்பு முறை என்று நீ தள்ளாதே-இப்புவியில்


மாலைக் குளியர்-வெகு மாமயக் கள்ளர் தங்கள்
ஜோலிக்குப் போகாதே தொகையே!''
இப்படி சொல்கிற தாய்க்கிழவி மகளுக்கு இன்னொன்றும் சொல்கிறார்.
அதாவது ஜடாமுடிகளுடன் காவி உடை சாமியார்களும் வருவார்கள். அவர்களை பள்ளியறைக்கு கூட்டிப் போய் பக்குவமாக நடந்து கொள்  என்கிறாள்.
''நாடெவர்க்கும் அஞ்சும் மடபதிகள் அல்லுடே பூனை போல் 
கொஞ்ச வருவார்.அவரைக் கூட்டிப்போய் -மஞ்சள் 
உடையில் படாமல் ,உரிந்து ஒதுங்க வைத்து 
சடையை தலையணைய தாக்கி -கிடைகிடத்தி கையால் சுழற்றி 
அவர் காமத்தைப் போக்கி ''எங்கள் ஐயாவே!  போம்''என்று அனுப்பி விடு! 


இன்னும் பல சங்கதிகளை சுப்ரதீபக் கவிராயரும்,சரவணப் பெருமாள் கவிராயரும் போட்டி போட்டுக் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.
இவை தூது இலக்கியமாகும்.
-

அரவான் ..எனது பார்வை...

நாம் மிகவும் எதிர்பார்க்கிற படம் ஏமாற்றத்தைத் தருகிற போது ,அந்த ஏமாற்றத்தைத் தந்தவர் யார் என சொல்வதற்கு ,அல்லது தீர்மானிப்பதற்கு மிகவும் தயங்குவோம் .
அது ''அரவான் ''படத்திலும் நடக்கிறது.
தனி மனிதர் யார்மீதும் பெயர் சொல்லி வருந்துவதை விட இப்படிப் பட்ட கதையை எடுப்பதற்கு பரிந்துரை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்தான் நமது ஒட்டுமொத்த வருத்தத்திற்கும் காரணமாக இருக்கிறார்.
பீரியட் படம்.சரி!
களவாணிகளை மையமாக வைத்து சொல்லப் பட்ட கதை.அதுவும் சரி.
நடிகர்களை ஹரிக்கேன் விளக்கு காலத்து மனிதர்களாக ,ரவிக்கை போடாத பெண்களாக காட்டி இருக்கிறார்கள்.அதுவும் மெத்த சரி.
பசுபதி ஓவர் உணர்ச்சி வசப்பட்டு  எரிச்சலை கொடுக்கிறார்.விதியே உன் வசம் என சகித்துக் கொள்கிறோம்.சரி.
ஆதியை ஒரு வலி பண்ணாமல் விட மாட்டார்கள் என்பது படத்தில் தெரிகிறது..அவர் ரத்தம் சிந்தும் போது யாரும் வருந்தவில்லை.ஏ,சி,குளிர் .
தியேட்டரை விட்டு வெளியில் போனால் வெக்கை.ஆகவே சகிப்பு.இதுவும் சரி.
களவாணித்தனம் ,காடு மேடு,ஓட்டம் என படம் முழுவதும் !அங்கங்கே சில  சில்மிஷ சிலிர்ப்புகள் .''குட்டையா இருக்கேன்னு பார்க்கிறியா பத்து பிள்ளை பெத்துப் போடுவேன் ,கட்டிக்க!''என பச்சையாக கேட்பது இன்றைய தலைமுறையினருக்கு என்னவோ போலிருக்கும்.ஆனால் அதுதான் உண்மை! அந்த காலத்து ,அதாவது பதினைந்தாம  நூற்றாண்டு பெண்களுக்கு இதெல்லாம் சகசம் என படித்திருக்கிறேன்.
படத்தில் பரத் இருக்கிறார்.
அஞ்சலி இருக்கிறார்.
ஸ்வீதாமேனன் இருக்கிறார்.
எல்லாமே இருக்கின்றன.
ரசிப்பதற்கு படத்தில் என்ன இருக்கிறது?
களவாணிகளின் வாழ்க்கையில்   சொல்லக் கூடியவை எவ்வளவோ உண்டு.

நம்மை வசந்த பாலன் ஏமாற்றிவிட்டார்.

வியாழன், 1 மார்ச், 2012

அரக்கனாகிறான் மனிதன்!

சினிமா தொடர்பான அசிங்கமான செய்திகளை,தகவல்களை அறிந்து கொள்வதில் காட்டுகிற ஆர்வம் சமூக அவலங்களை தெரிந்துகொள்வதில் இல்லை!

ஏன்,எதனால்?ஒரு நடிகையைப் பற்றி எழுதினால் வியுவர்ஸ் அதிகம் அதே நேரத்தில் ஒழுக்கக் கேடுகளை சுட்டிக்காட்டும் உண்மைகளை எழுதினால்  வியுவர்ஸ் குறைவு!

மனம் நொந்து தான் இதைக் கூறுகிறேன். பெருங் கொடுமை!!!

இப்போது நான் இங்கு பதிவு செய்யப் போவது இரண்டு மனித மிருகங்களை!நீங்கள் படித்தாலும் அல்லது பார்க்காமல் போனாலும் நான் கவலைப் படப் போவதில்லை.

எனது மனதை மிகவும் பாதித்த இரண்டு உண்மை நிகழ்வுகள் அன்றாடம் எங்காவது நிகழ்கிறது என்பதுதான் இன்னும் அரக்கர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

ஹூப்ளி அருகில் அலிகான்-நஷியா தம்பதியரின் மகள் பாத்திமா!வயது இரண்டு !!

நடை பயிலும் வயது அவள் .சுவரைப் பிடித்து நடப்பதை நஷியா பார்த்துப் பார்த்து மகிழ்வாள்.திரும்ப திரும்ப சுவர் அருகே கொண்டு விடுவாள்!

ஒரு நாள் காலைப் பொழுதில் பாத்திமாவை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சினான் அலிகான்.வேடிக்கை காட்டியபடியே வெளியே கொண்டு போனான்!

போனவன் போனவன்தான்..!

பெற்றவளுக்கு புரியவில்லை ஏதாவது விபத்து நடந்திருக்குமோ ,''ச்சே, அப்படியெல்லாம் நடந்திருக்காது .உறவினர் வீட்டுக்குப் போயிருக்கலாம்  '' தனக்குத் தானே சொல்லிக் கொண்டு காத்திருந்தாள்

அலிகான் மட்டும் திரும்பினான் நிறை போதையில்!

''பிள்ளை எங்கே?''பதறுகிறாள் அம்மா!

''சாராயம் குடிக்கக் காசில்லை ரயிவே ஸ்டேசனில் விற்றுவிட்டேன்'' மிகவும் சாதாரணமாக சொல்கிறான்.

பத்துமாதம் சுமந்து பெற்றவளுக்கு எப்படி இருக்கும்?

அவளும் உறவினர்களும் சேர்ந்து நய்யப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆனால்?

மகள் கிடைக்கவில்லை!விரைவில் தாயுடன் மகள் சேர வேண்டும் என இறைவனை வேண்டுவோம்!

இப்போது சொல்லப் போவது தூத்துக்குடி அருகில் நிகழ்ந்திருக்கிறது!

அருண் என்கிற கல்லூரிப் பேராசிரியன் மாணவி ஒருத்தியை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி காதல் வலை வீசி இருக்கிறான்.அவள் அவனை
நம்பினாள்.ஸ்பெஷல் வகுப்பு என சொல்லி வரவழைத்து குளிர் பானத்தில்  மயக்க மருந்து கொடுத்து மாணவியை சீரழித்து இடுக்கிறான்.செல் போனில் படமாக்கி வைத்துக் கொண்டு அதைக் காட்டியே விரும்பிய நேரமெல்லாம்  அனுபவித்திருக்கிறான்.

அவன் மட்டுமில்லாமல் அவனது நண்பர்களுக்கும் அவளை விருந்தாக்கி இருக்கிறான்.

மான ,அவமானங்களுக்கு பயந்து பல முறை பலியானவள் ஒரு நாள் உண்மையை சொல்ல ,

இப்போது பேராசிரியரும் துணை போனவர்களும் கைதாகி இருக்கிறார்கள்!

சட்டம் அதன் கடமையை சந்து,பொந்துகளில் நுழைந்து வந்து சொல்லும்!

வழக்குரைஞரின் வாதத் திறமையினால் பேராசிரியனுக்கு விடுதலை கூட கிடைக்கலாம்.

நீதி என்பது இங்கு வணிகமாகி விட்டதால் வக்கீல்களும் வணிகர்களே!


அரக்கனாகிறான் மனிதன்!