Thursday, March 1, 2012

அரக்கனாகிறான் மனிதன்!

சினிமா தொடர்பான அசிங்கமான செய்திகளை,தகவல்களை அறிந்து கொள்வதில் காட்டுகிற ஆர்வம் சமூக அவலங்களை தெரிந்துகொள்வதில் இல்லை!

ஏன்,எதனால்?ஒரு நடிகையைப் பற்றி எழுதினால் வியுவர்ஸ் அதிகம் அதே நேரத்தில் ஒழுக்கக் கேடுகளை சுட்டிக்காட்டும் உண்மைகளை எழுதினால்  வியுவர்ஸ் குறைவு!

மனம் நொந்து தான் இதைக் கூறுகிறேன். பெருங் கொடுமை!!!

இப்போது நான் இங்கு பதிவு செய்யப் போவது இரண்டு மனித மிருகங்களை!நீங்கள் படித்தாலும் அல்லது பார்க்காமல் போனாலும் நான் கவலைப் படப் போவதில்லை.

எனது மனதை மிகவும் பாதித்த இரண்டு உண்மை நிகழ்வுகள் அன்றாடம் எங்காவது நிகழ்கிறது என்பதுதான் இன்னும் அரக்கர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

ஹூப்ளி அருகில் அலிகான்-நஷியா தம்பதியரின் மகள் பாத்திமா!வயது இரண்டு !!

நடை பயிலும் வயது அவள் .சுவரைப் பிடித்து நடப்பதை நஷியா பார்த்துப் பார்த்து மகிழ்வாள்.திரும்ப திரும்ப சுவர் அருகே கொண்டு விடுவாள்!

ஒரு நாள் காலைப் பொழுதில் பாத்திமாவை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சினான் அலிகான்.வேடிக்கை காட்டியபடியே வெளியே கொண்டு போனான்!

போனவன் போனவன்தான்..!

பெற்றவளுக்கு புரியவில்லை ஏதாவது விபத்து நடந்திருக்குமோ ,''ச்சே, அப்படியெல்லாம் நடந்திருக்காது .உறவினர் வீட்டுக்குப் போயிருக்கலாம்  '' தனக்குத் தானே சொல்லிக் கொண்டு காத்திருந்தாள்

அலிகான் மட்டும் திரும்பினான் நிறை போதையில்!

''பிள்ளை எங்கே?''பதறுகிறாள் அம்மா!

''சாராயம் குடிக்கக் காசில்லை ரயிவே ஸ்டேசனில் விற்றுவிட்டேன்'' மிகவும் சாதாரணமாக சொல்கிறான்.

பத்துமாதம் சுமந்து பெற்றவளுக்கு எப்படி இருக்கும்?

அவளும் உறவினர்களும் சேர்ந்து நய்யப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆனால்?

மகள் கிடைக்கவில்லை!விரைவில் தாயுடன் மகள் சேர வேண்டும் என இறைவனை வேண்டுவோம்!

இப்போது சொல்லப் போவது தூத்துக்குடி அருகில் நிகழ்ந்திருக்கிறது!

அருண் என்கிற கல்லூரிப் பேராசிரியன் மாணவி ஒருத்தியை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி காதல் வலை வீசி இருக்கிறான்.அவள் அவனை
நம்பினாள்.ஸ்பெஷல் வகுப்பு என சொல்லி வரவழைத்து குளிர் பானத்தில்  மயக்க மருந்து கொடுத்து மாணவியை சீரழித்து இடுக்கிறான்.செல் போனில் படமாக்கி வைத்துக் கொண்டு அதைக் காட்டியே விரும்பிய நேரமெல்லாம்  அனுபவித்திருக்கிறான்.

அவன் மட்டுமில்லாமல் அவனது நண்பர்களுக்கும் அவளை விருந்தாக்கி இருக்கிறான்.

மான ,அவமானங்களுக்கு பயந்து பல முறை பலியானவள் ஒரு நாள் உண்மையை சொல்ல ,

இப்போது பேராசிரியரும் துணை போனவர்களும் கைதாகி இருக்கிறார்கள்!

சட்டம் அதன் கடமையை சந்து,பொந்துகளில் நுழைந்து வந்து சொல்லும்!

வழக்குரைஞரின் வாதத் திறமையினால் பேராசிரியனுக்கு விடுதலை கூட கிடைக்கலாம்.

நீதி என்பது இங்கு வணிகமாகி விட்டதால் வக்கீல்களும் வணிகர்களே!


அரக்கனாகிறான் மனிதன்!

1 comment:

Kannan said...

நியதி நேர்மை ...எல்லாமே அழிந்துவிட்டது சார்..........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!" சர்வ சாதா...