திங்கள், 5 மார்ச், 2012

வயது வந்தவர்களுக்கு..{.இரண்டாம் பகுதி.}

நிறைமாத கர்ப்பிணிக்கு இடுப்புவலி!
அருகில் இருந்த தாதிகள்  அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிக்க தயாரானார்கள்.
''பனிக்குடம் உடைந்து விட்டது''என்கிறாள் ஒருத்தி.
''மூர்ச்சையாகி விட்டாள்'' என்கிறாள் மற்றொருத்தி.
''தலை தெரிகிறது,முடி நிறைய இருப்பதால் நிச்சயம் இது பெண் குழந்தைதான்'' என்று மருத்துவச்சி சொன்னதும் அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது.
தாசி வீட்டில் ஆண் குழந்தை பிறப்பதையா விரும்புவார்கள்?  பெண் குழந்தைதான் வருமானத்திற்கு உதவும்!
மருத்துவச்சி சொன்னதைப் போல் பெண் குழந்தை பிறக்கிறது!
மயக்கம் தெளிந்த அம்மாக்காரி ஆசையுடன் கேட்கிறாள் ''என்ன குழந்தை?''
''பெண்தான்!''
தங்கப் புதையல் எடுத்தது போன்ற சந்தோசத்தில் சேனை வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது!
''தேனே!கனியே!தெவிட்டாத தெள்ளமுதே ,
மானே!என் கண்ணே!மரகதமே!-நான் ஈன்ற 
பொன்னே!என எடுத்துப் பொற் குறங்கு மீதேற்றி 
மின் நேர் இடையாள் விழி பரப்பி -நன்னுதலில் 
பாப்பிட்ட சொல்லி ,வெள்ளிப் பட்டமென வெண் நீற்று 
காப்பிட்டாள்.
செம்பொன் உள்ள பேர்களை உன் 
கைக்குள் வளை என்று வளை கைக்கிட்டாள்'' 
இங்கு குறங்கு என்பதற்கு பொருள் தொடை என்பதாகும்,அதாவது பெண் குழந்தையை பெருமையுடன் பாராட்டி,சீராட்டிவிட்டு பொன் உள்ள பணக்காரர்களை உன் கைக்குள் வளைத்துப் போடு என சொல்லி வளை இடுகிறாளாம் தாய்!
பிறந்த குழந்தைக்கு  இப்படியா சொல்லி வளையல் போடுவார்கள் என்றெல்லாம்  கேட்கக் கூடாது.தாசி வீட்டில் இதுதான் பண்பாடு!
சரவணப் பெருமாள் கவிராயர் சொல்வதையும் கேளுங்கள்!

''காம ரசக் கரும்பே!பெண்ணே!யான் பெற்ற பேறே!
மிச்சமாய் செம்பொன் விளையும் ரசவாதப் 
பச்சிலை ஈது என்று பரிந் தெடுத்தாள்! ''
இரும்பை பொன்னாக்கும் ரசவாத பச்சிலை இது! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்  என சொல்லி குழந்தையையை கொஞ்சுகிறாள் தாய் என்கிறார்  கவிராயர்.
''குண்டுமணி போல்,குரும்பை போல்,பம்பரம் போல்,
செண்டு போல் கொங்கை திமிர் ஏறி _தண்டித்து 
மானும் தி ரண்டாள் :வாலிபர்கள் வந்து வந்து 
தானும் திரண்டார்''
மகளுக்கு அங்க லாவண்யம் படிப்படியாய் பெருத்ததை இப்படி சொல்லி இருக்கிறார் .
அடுத்தது மகளுக்கு தொழில் ரகசியத்தை சொல்லவேண்டும்.
அந்த ரகசியத்தை வருகிற சனிக்கிழமை சொல்கிறேனே?

1 கருத்து:

தமிழ்மகன் சொன்னது…

பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...