திங்கள், 5 மார்ச், 2012

சங்கரன் கோவில் தேர்தலில்....

சங்கரன் கோவில் தேர்தலில்....
மொத்த அமைச்சர்களுமே அங்கே கூடி விட்டார்கள்.
ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள்.அதிகார மையம் அவர்களின் கீழ்!
தேர்தல் கமிசன் என்பது வெறும் எந்திரம்தான்!இயக்கும் சக்தி யாரிடம் இருக்கிறதோ அவர்களின் விரல் அசைவுக்கு அது  கட்டுப் படும்.


நேர்மையான,அச்சுறுத்தல் இல்லாத ,பணப் பட்டுவாடா இல்லாத இடைத் தேர்தலாக இருக்குமேயானால் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியான முடிவாக இருக்கும்.என்கிறார்கள்!அங்கு சென்று பார்த்தவகையில் அதிருப்தி அலை வீசுகிறது என்பது உண்மை!
ஆனால்...?
ஓன்று கூடி எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் தங்களின் செல்வாக்கினைக் காட்டவேண்டும் என்கிற முனைப்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
வைகோவின் சொந்த தொகுதி என்பதால் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.அது தோல்வியோ,வெற்றியோ தனது பலம் என்ன அன்பதை காட்டியாக வேண்டிய நிர்பந்தம் !
விஜயகாந்துக்கு இது மான பிரச்னை.தன்னால்தான் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது என வாய் நீளம் காட்டி இருக்கிறார் அதனால் .அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தைப் பெற்றாவது திமுகவை திணற அடிக்க வேண்டும்.இது அதிமுகவுக்கு தனது செல்வாக்கு எத்தகையது என்பதை உணர்த்தும் என நம்புகிறார் 
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்றுமே நாங்கள்தான் மாற்று சக்தி என்பதை உறுதிப் படுத்தியாக வேண்டும்.
இப்போது தொகுதியில் மின்சார வெட்டு அவ்வளவாக இல்லை என்றாலும் தொகுதி மக்கள் தேர்தலுக்குப் பிறகு என்னாகும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
காரியம் முடிந்தபின் கரண்டு கட் தங்களின் மென்னியையும் பிடிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு கழுத்தை நெரிக்கிறது.
வேலை இல்லாத்திண்டாட்டம் அப்பகுதி மக்களை வாட்டி வருகிறது.
சாலை வசதிகள் சிறப்பாக இல்லை.
பஸ் கட்டண உயர்வு பெரும் அளவு பாதித்திருக்கிறது.
''ஆட்சிக்கு வந்ததும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப் படும்'' என சொன்னவர் முதல்வர் ஜெயலலிதா 
ஆனால் இடைவெளி விட்டு விட்டு வந்து கொண்டிருக்கிறது மின்சாரம் என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள்   
ஆனாலும் பணம் என்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்தாலே அந்த கட்சிக்கு ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள் 
எந்த கட்சி வந்தாலும் தங்களின்நிலை  இதேமாதிரிதான் இருக்கிறது ஆகவே கொடுக்கிற மகராசன் அல்லது மகராசி ஜெயிக்கட்டும் என்கிற நிலையில்  இருக்கிறார்கள்.


தற்போதைய வோட்டு விலைவாசி நிலவரம் இரண்டாயிரம்.தேர்தல் நெருங்க நெருங்க உயரும் என்கிற நம்பிக்கையில் தொகுதி மக்கள் இருக்கிறார்கள்!!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...